Thursday, July 10, 2014

கிர்ணிப்பழத்தின் அழகு, ஆரோக்கியக் குறிப்புகள்


  • தலை முதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புதம் கவசம் கிர்ணிப்பழம். இதை முலாம்பழம் என்றும் அழைப்பர். இதில் புரதமும்  கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது. உடலுக்கு வேண்டியச் சத்துக்களை  அள்ளித்தரும் வள்ளலான கிர்ணிப்பழத்தின் அழகு, ஆரோக்கியக் குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

  • ஐம்பது வயதுக்கு மேல் தோலின் எண்ணெய்ப் பசை குறைந்து. வறண்டு போய்விடும் இவர்கள் பியூட்டி பார்லரில் வேக்சிங் அல்லது திரெடிங்  போன்றவற்றைச் செய்து கொண்டால், தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும். இதற்கு கிர்ணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும்  தலா ஒரு டீஸ்பூன் கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.

சளி பிடிக்காமல் தடுக்க துளசி மல்லி கஷாயம்

துளசி மல்லி கஷாயம்


  • துளசி - 2 கைப்பிடி, 
  • சுக்கு - 1 துண்டு, 
  • வெள்ளை மிளகு - 20, 
  • ஏலக்காய் - 5, 
  • தனியா - 2 டேபிள்ஸ்பூன்,
  • காய்ந்த திராட்சை - 20, 
  • பனங்கல்கண்டு அல்லது பனைவெல்லம் - தேவைக்கேற்ப.

வயிற்று நோய் குணமாக தேன்

சித்த மருத்துவத்தில் தேனின் பயன் இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....

  • கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும்.

நிலவேம்பு பொடி கஷாயம்

நிலவேம்பு பொடி

கஷாயம் தயாரிக்கும் முறை:

ஒரு ஸ்பூன் பொடியில் 200 மி.லி. தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்கவிடவும். நீர் 50 மி.லி.. அளவாக வற்றியவுடன் இறக்கி, வடிகட்டவும். மிதமான சூட்டில் பருகவேண்டும்.

எருக்கம் பூ, செடி மருத்துவ குணங்கள்

மனம் வருந்தவில்லை
மங்கையர் சூடாததற்காக
எருக்கம் பூ….

எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேம். இதன் மருத்துவ குணங்கள்..

  • எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்…..

புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது மாம்பழம்

முக்கனிகளின் முதல் கனியான மாம்பழத்தின் பெருமை அபாரம். மாம்பழத்தின தாயகம் நமது நமது நாடு தான் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். இன்று பல நாடுகளில் மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. எனினும் நமது நாட்டு பழங்களுக்குத்தான் உலகமெங்கும் வரவேற்பு அமோகமாய் இருக்கிறது. இருப்பினும்சீசன் பழமான இது மார்ச் முதல் ஜீலை வரை தான் கிடைக்கின்றது. சாதாரணமாக ருமானி,பெங்களுரா, பச்சை, பங்கனபல்லி, நீலம், பீத்தர், மல்கோவா என்று இவ்வகை பழங்களே அதிகமாக மார்க்கெட்டுக்கு வருகின்றன.


மாம்பழங்களில் சிலவகை அதிக இனிப்பாகவும் சில வகை இனிப்பும் புளிப்பும் கலந்து ருசியோடும், சிலவகை வெறும் புளிப்பாகவும் இருக்கும்.