Thursday, July 10, 2014

புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது மாம்பழம்

முக்கனிகளின் முதல் கனியான மாம்பழத்தின் பெருமை அபாரம். மாம்பழத்தின தாயகம் நமது நமது நாடு தான் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். இன்று பல நாடுகளில் மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. எனினும் நமது நாட்டு பழங்களுக்குத்தான் உலகமெங்கும் வரவேற்பு அமோகமாய் இருக்கிறது. இருப்பினும்சீசன் பழமான இது மார்ச் முதல் ஜீலை வரை தான் கிடைக்கின்றது. சாதாரணமாக ருமானி,பெங்களுரா, பச்சை, பங்கனபல்லி, நீலம், பீத்தர், மல்கோவா என்று இவ்வகை பழங்களே அதிகமாக மார்க்கெட்டுக்கு வருகின்றன.


மாம்பழங்களில் சிலவகை அதிக இனிப்பாகவும் சில வகை இனிப்பும் புளிப்பும் கலந்து ருசியோடும், சிலவகை வெறும் புளிப்பாகவும் இருக்கும்.


மாம்பழத்தை முழு உணவாக கொள்ளலாம். இப்பழத்தில்தான் வைட்டமின் ஏ என்ற உயிர்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. வேறு எந்த பழத்திரும் இவ்வளவு அதிக சத்து கிடையாது. சிலர் மாம்பழத்தை சூடு என்பார்கள் இன்னும் உறுதியாகச் சொல்ல வேண்டுமானால் மற்ற பழங்களை விட மாம்பழத்தில் உஷ்ண அளவு சற்று குறைவு தான். மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து மிகுந்திருக்கிறது. இதனை சாப்பிடுவதால் ரத்தம் அதிகரித்து உடலுக்கு பலத்தை தருகிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின சி சத்து அதிகமாக காணப்படுகிறது. கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை மாம்பழத்தில் அதிகமாக காணப்படுகிறது. எனவே சிறுவர் முதல் பெரியோர் வரை இப்பழத்தை தினம் சாப்பிட்டு உடம்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மாம்பழத்தை பலர் உணவோடு சாப்பிடுகிறார்கள். அதாவது சாப்பாட்டிற்கு காய்கறி கூட்டாக பயன்படுத்துகிறார்கள் இது தவறு மாம்பழத்தை காலையோ, மாலையோ தனியாக தான் சாப்பிட வேண்டும். உணவோடு சாப்பிட்டால் அதன் சத்துக்கள் நமக்கு கிடைக்காமல் போய்விடும் என்பதை மறவாதீர் சொல்லப்போனால் இப்பழத்தை உணவோடு சாப்பிட எண்ணுபவர்கள் சாப்பாட்டிற்குப் பின் சாப்பிடுவது நல்லது. வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

மருத்துவ குணங்கள்:

1.வயிற்றுப்புண் குணமாக

காலை உணவு டிபன் முடித்து 30 நிமிடங்களுக்கு பின் 50 கிராம் மாம்பழச் சாறுடன் ஒரு தேக்கரண்டி நெய்யும் ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து பருகி வரவும். சில நாட்களில் குணம் தெரியும். பழச்சாறை பருகுகையில் அதிகமாய் மலம் கழிந்தால் தேனை அதிகமாக்கினால் கழிவு நின்றுவிடும்.

2. இருதயம் பலப்பட

மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ரால் இதயம் மற்றும் இரத்த அழுத்தம் இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் பச்சை மாங்காயை நறுக்கி, நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைப் பருகி வந்தால் இதயநோய், மாரடைப்பு போன்றவை வராமல் தடுக்கும்

சதைப் பற்றுள்ள இரு மாம்பழங்களை எடுத்து சாறு பிழிந்து தேன், குங்குமப்பூ, ஏலக்காய் தூள், பச்சைக் கற்பூரம் இவைகளை சிறிதளவு எடுத்து, சாற்றில் கலந்து, பாலையும் சேர்த்து சாப்பிட்டால் இருதயம் பலப்படும். தொடர்ந்து 15 நாட்களுக்காவது இரவில் உணவுக்கு பின் பருகி வரவேண்டும் இருதயம் பலப்படுவது மட்டுமின்றி தாதும் விருத்தியடையும்.

3. சிறுநீர்ப்பையில் உள்ள கற்களை கரைக்க

மாம்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் கொட்டையிலுள்ள பருப்பையெடுத்துச சுட்டு சிறிது சாப்பிட்டு விடுவது நல்லது.இம்மாதிரி அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் சிறுநீர்ப்பையில் உள்ள கற்களையே கரைத்து விடலாம்.

4. தோல் சுருக்கம் நீங்க

இரவு சாப்பாட்டிற்கு பின் மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு ஒரு டம்பளர் பாலையும் பருகி வந்தால் முகம் அழகு பெறும். தோல் சுருக்கம் நீங்கி வழவழப்பாகும்

5. உடல் எடை அதிகரிக்க

மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் எனடற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைந்திட உதவும் மாம்பழம் சாப்பி;ட்டால் சுலபமாக உடல் எடையை அதிகரிக்கலாம்.150 கிராம் மாம்பழத்தில் 89 கலோரிகள் அடங்கியுள்ளன இதை உடல் சுலபமாக ஈர்த்துக் கொள்ளும் மேலும் மாம்பழத்தில் உள்ள மாச்சத்து அதனை சர்க்கரையாக மாற்றுவதால், எடையை அதிகரிக்க அது உதவும் 

6. பசி, செரிமானமின்மை

செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது மாம்பழம். மாம்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் இயல்பான முறையில் செரிமானம் நடந்திட உதவும்.

பலருக்கு பசியே எடுக்காது ஏதோ நேரத்துக்கு உள்ளே தள்ளுவார்கள. இப்படிப்பட்டவர்களுக்கு இதோ ஒர் வைத்தியம் மாம்பிஞ்சுகளை வாங்க வேண்டும். அவைகளை நிழலில் காய வைத்து வாட விடவேண்டும் அதன்பின் பிஞ்சுகளை நறுக்கி உப்பு நீரில் போட்டு வெய்யிலில் காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

இதை அவ்வப்போது உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி அமோகமாக எடுக்கும்.

7. வாந்தி , பேதி

மாம்பழத்தை பிழிந்து சாறெடுத்து அதை சுடுநீரில் கலந்து கொஞ்சம் சர்;க்கரை (சீனி)யையும் சேர்த்து பருகினால் மேற்கண்ட நோய் விலகும். மாம்பழத் தோலை அரைத்து தேன் கலந்து சாப்பிட்டுவர சீதபேதி குணமாகும்

8. இரத்த சோகை

மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகை உள்ளவர்களு;ககு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும். 

கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகளவில் தேவைப்படுவதால், அவர்கள் மாம்பழம் உண்ணுவது மிகவும் அவசியம் பொதுவாக கர்ப்பக் காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு பதில் வளமான இரும்புச்சத்துள்ள சாறு நிறைந்த மாம்பழங்களை உண்ணுதல் சாலச் சிறந்தது. 

9. கண்பார்வை

மாம்பழத்தில் ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்த்துப் போராடுவதிலும், சரும சுருக்கத்தைப் போக்குவதிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. மாம்பழத்தில் வைட்டமின்கள் ஏ அதிகம் உள்ளது தெளிவான மற்றும் ஆரோக்கியமான கண் அவசியம். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால் இதனை அதிகம் சாப்பிட்டால், தெளிவாக கண் பார்வையைப் பெறலாம்.

மாம்பழத்தின் சத்துக்கள்:-

நீர் (ஈரப்பதம்) - 76.0 கிராம்
நார்         - 0.6  கிராம்
தாதுப்பொருள் - 0.4 கிராம்
கொழுப்பு         - 0.4 கிராம்
புரதம்         - 0.5 கிராம்
மாவுப்பொருள் - 17.0 கிராம் சுண்ணாம்பு சத்து - 13.0 மி.கி பாஸ்பரஸ்         - 15.0 மி.கி
இரும்புச்சத்து - 1.2 மி.கி
கரோட்டின்         - 2740.0 
எரிசத்து - 72.0 கலோரி
தையாமின்         - 0.7 மி.கி
நியாசின்         - 0.8 மி.கி
ரைபோஃபிளேவின்         - 0.08 மி.கி
வைட்டமின் சி - 16.0 மி.கி

ஒரு அவுன்ஸ் எடையுள்ள மாம்பழத்தில் உள்ள உயிர்ச்சத்துக்கள் 

வைட்டமின ஏ         - 1362.0 மி.கி
வைட்டமின பி1 - 11.0 மி.கி
வைட்டமின் பி2 - 13.0 மி.கி

நான்கு, ஐந்து மாதங்களே கிடைக்கக்கூடிய மாம்பழங்களை அவ்வப்போது அளவோடு சாப்பிட்டு வைட்டமின் ஏ சத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்.

நீரழிவுக்காரர்கள் ஒரு நாளைக்கு ஒரே ஒரு துண்டு மட்டுமே சாப்பிடுங்கள்.


No comments:

Post a Comment