Wednesday, July 9, 2014

முள்ளந்தண்டு எலும்பின் பாதிப்புகளை சரி செய்ய பூர்வத்தாசனம்

நாம் உண்ணும் உணவு, செயல்களும், சுற்றுப்புற சூழல்களும், தொழில் சார்ந்த வேலைகளும் நம் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
பூர்வத்தாசனம்


இவற்றால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட ஆயிரக்கணக்கில் நாம் பணத்தை செலவு செய்து வருகிறோம். பல்வேறு மருத்துவ முறைகளையும் பின்பற்றி வருகிறோம். இவற்றிற்கு சித்தர் பெருமக்கள் கண்டுபிடித்து அளித்த எளிய முறைகளே யோகாசனப் பயிற்சிகள் ஆகும். 

நாம் இந்த பூர்வத்தாசனம் பற்றிய செய்முறைகளையும் அதனால் உண்டாகும் நன்மைகளையுப் பற்றியும் அறிவோம்.


பூர்வத்தாசனம் பெயர் காரணம்:

பூர்வம் என்றால் கிழக்கு. உடலின் முன் பகுதியான நெற்றி முதல் கால் விரல்கள் வரை உள்ள பகுதிகள் நன்றாக நீட்டப்படுவதால் இந்த ஆசனத்திற்கு பூர்வத்தாசனம் என்று பெயர்.

பூர்வத்தாசனம் செய்முறை:

1. தரையில் கால்கள் இரண்டையும் நீட்டி உட்கார வேண்டும்

2. பிறகு கைகளைப் பின்பக்கமாக கொண்டு சென்று உள்ளங்கைகளை தரையில் நன்கு பதிய வைக்க வேண்டும்.

3. உள்ளங்கைகளுக்கு இடையே உள்ள தூரமும், இரண்டு தோள்களுக்கு இடையே உள்ள தூரமும் சமமாக இருக்க வேண்டும்

4. இந்த நிலையில் மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டே இடுப்பு பகுதியை தரையிலிருந்து முடிந்த வரை மேலே உயர்த்த வேண்டும்

5. இப்போது கால்கள் இரண்டும் வளையாமல் ஒன்றோடு ஒன்று சேர்ந்திருக்க வேண்டும்

6. கால் விரல்கள் தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதாவது விரல்களும், உள்ளங்கைகளும் மட்டும் தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

7. அடுத்து தலையை பின்புறமாக தொங்கவிடவும்

8. சுமார் 20 விநாடிகள் இயல்பான சுவாசத்துடன் இதே நிலையில் இருக்கவும். பிறகு மூச்சை வெளியேற்றிக் கொண்டே தரையில் உட்காரவும் இவ்வாறு 5 முதல் 10 தடவை செய்யவும்.

நன்மைகள்:-

இரு கைகளும், கால்களும் வன்மை அடைய உதவுகிறது

இடுப்பு பகுதி வன்மை அடைய உதவுகிறது

முள்ளந்தண்டு எலும்பின் பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது

மார்பு பகுதியை வன்மையடைச் செய்து நுரையீரல் சார்ந்த நோய்களை நீக்குகிறது

தோள், கழுத்து எலும்புகள் பலப்பட உதவுகிறது

மலச்சிக்கலை தவிர்க்கச் செய்கிறது

மணிக்கட்டும், முழங்கை மூட்டுகளும் வன்மை அடைகிறது.


No comments:

Post a Comment