Wednesday, July 9, 2014

எலும்புகளை பலப்படுத்த வாதாயநாசனம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் முதுமொழிக்கு ஏற்ப, நாம் ஒவ்வொருவரும் நல்ல உடல் மற்றும் மனநிலையை பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வழைகின்றோம் இதன் மூலம் மகிழ்வான வாழ்வினை பெறுகிறோம்.


வாதாயநாசனம் பெயர் காரணம்:

வாதாயனம் என்றால் குதிரை என்று பொருள் இந்த ஆசனம் குதிரையின் முகத்தைப்போல் இருப்பதால் இதற்கு வாதாயனாசனம் என்று பெயர்.
வாதாயநாசனம்

வாதாயநாசனம் - செய்முறை:

  • முதலில் தரையில் உட்கார்ந்து வலது கால் பாதத்தை இடது தொடை மீது வைக்கவும். அதாவது அடிவயிற்றை வலது குதிகால் தொட்டு கொண்டிருக்க வேண்டும்.

  • அடுத்து உள்ளங்கைகளை உடலுக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி மேலே எழவும்

  • அப்படி செய்யும்போது வலது கால் மூட்டுப் பகுதியால் தரையில் முட்டிக் கொடுக்க வேண்டியிருக்கும். மேலும் இடது காலும் சற்று முன்பக்கமாக வளைந்திருக்கும்.

  • அடுத்து மூச்சை ஆழ்ந்து உள் இழுத்துக் கொண்டே, உடலை நேராக நிமிர்த்தி, இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கவும்.

  • பிறகு, மூச்சை வெளியிட்டுக்கொண்டு, நெஞ்சுக்கு நேராக வணக்கம் தெரிவிப்பதுபோல் கைகளை மடக்கி வைக்க வேண்டும்.

  • இந்த நிலையில் சுமார் 30 விநாடிகள், சாதாரண சுவாசத்தில் இருக்க வேண்டும். பிறகு கைகளை விடுவித்து இயல்பு நிலைக்குத் திரும்பவும்.

  • அடுத்து கால்களை மாற்றி வைத்து மேலே செய்தது போல் மீண்டும் செய்யவேண்டும்.

வாதாயநாசனம் செய்வதால் ஏற்படும் பலன்கள்:

1. முழங்கால், கணுக்கால் மற்றும் மூட்டுகளுக்கு நன்கு இயங்கும்              தன்மையையும், உறுதியையும் அளிக்கிறது.

2. இடுப்பு எலும்புகளுக்கு உறுதியையும், வலுத்தன்மையையும் அளிக்கிறது

3. இடுப்பு பகுதியில் ஏற்படும் தசை இறுக்கத்தை போக்குகிறது

4. மனத்தை ஒருநிலைப்படுத்தும் ஆசனமாகவும் திகழ்கிறது

5. கழிவு நீக்க மண்டலத்தில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்ய உதவுகிறது

6. தண்டுவட எலும்புகளை நேர்நிலையில் இருக்க வைக்கிறது

7. தோள்பட்டை தசைகளுக்கு வன்மையை அளிக்கிறது.

8. கழுத்து எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது

No comments:

Post a Comment