Wednesday, July 9, 2014

வியர்வை நாற்றம் விலக எளிய வழிகள்

நாற்றத்தை குறைக்க சில வழிகள் வாசனை நிறைந்த சோப்பு, சென்ட், பவுடர் போன்ற உடலின் வெளிப்புற சக்திகளால் மட்டும் இந்த துர்வாடையை நிரந்தரமாக தீர்க்க இயலாது. உடலின் உட்புறத்தையும் சுத்தமாய் வைத்திருக்க வேண்டும். மனதில் ஏற்படும் கொந்தளிப்பு, கோபம், எரிச்சல் போன்ற நிலைகளாலும் பித்தத்தின் சீற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனாலும் துர்வாடை வியர்வையில் வரக்கூடும்.




 உடல் மற்றும் மன அமைதியைத் தந்து பித்தத்தையம் ரத்தத்தின் சுத்தத்தையும் ஏற்படுத்தும் உணவு வகைகளான கரும்புச்சாறு, நெய், வெண்ணெய், சர்க்கரை கலந்து கடைந்த மோர், இனிக்கும் தயிர், புளிக்காத இனிக்கும் பழங்கள், பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை, மணத்தக்காளி, வல்லாரை, சிறுகீரை, பூசணிக்காய், பரங்கிக்காய், வெள்ளரிப்பிஞ்ச, பழைய பச்சரிசி, கோதுமை, பச்சைப்பயறு போன்றவை சாப்பிட வேண்டும்.காரம், புளிப்பு,உப்பைக் குறைக்கவும். பானையில் வெட்டிவேர் போட்டு ஊறிய தண்ணீரை குடிப்பது நல்லது. 



1. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்

2. தினமும் இரண்டுமுறை குளிக்க வேண்டும்

3. கீரை, பழங்கள், காய்கறிகள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

4. பருத்தி துணிகளை உள்ளாடைகளாக பயன்படு;த்த வேண்டும்.

5. பாதங்களில் வியர்வை உண்டானால் ஷீக்கள் அணிவதைத் தவிர்த்து காற்றோட்டம் உள்ள காலணிகளை அணிய வேண்டும்.


மூலிகை மருந்துகள்:

உடலில் நறுமணம் தவழ, கடுக்காய் , தோல், லோத்திரப்பட்டை, வேப்பம்பட்டை, எழிலம் பாலைப்பட்டை, மாதுளம்தோல் ஆகியற்றை சம அளவு எடுத்து இடித்து தூளாக்கி இந்த தூளுடன் சந்தனத்தூள் மற்றும் சிறிதளவு ஃபேஸ் பவுடர் கலந்து உடல் முழுமைக்கும் பூச உடல் நறுமணம் பெறும், நாற்றம் நீங்கும்.

அக்குள் நாற்றம் விலக கடுக்காய், வில்வபழச்சதை, கோரைக்கிழங்கு, புளி, புங்கன் விதை இவற்றைத் தூளாக்கி தண்ணீரில் குழைத்து அக்குள் பகுதியில் பூசிய பின் குளிக்க வேண்டும். 

நாவல் இலையை நன்கு மைய அரைத்துப் பூசிக் குளிக்க கோடைக்காலத்தில் வியர்வையால் ஏற்படும் துர்வடையும் கோடைக்கட்டிகளும் குறையும்.

பாசிப்பயறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போக அரிசி, விலாமிச்சைவேர், பூலாங்கிழங்கு இவைகளை சம அளவு சேர்த்து இடித்த தூள் குளியலுக்குப் பூசிக் கொள்ள நல்ல மணம் தரும் துர்நாற்றம் அகலும்.

No comments:

Post a Comment