Friday, October 25, 2013

பழங்களின் மருத்துவம் - பல வகைகள் கொண்ட வாழைப்பழத்தில் உள்ள மருத்துவப் பயன்

மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இப்பழம் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவன் விரும்பி உண்ணும் பழம் இது.

காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டிய பயிற்சி

பஞ்சபூதக் கூட்டால் ஆகிய மனித உடலில் ரத்தம், வெப்பம், காற்று, உயிர் ஆகிய நான்கும் உடல் முழுதும் சுழன்று ஓடி இயங்குகின்றன. மூன்று ஓட்டங்களும் சீராக இயங்க சில எளிய முறைப்பயிற்சி


  • தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.
  • தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் ஏன்? எதற்கு? எப்போது என்பதை காண்போம்

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்

 குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்! குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை.

குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி?
நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன? அவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு பயன்படுத்த வேண்டும்? நோய்த் தொற்றல் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்

சேலம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் ப.அருள் மற்றும் மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் குணா.

தினமும் தானியங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என பலவகைகள் உள்ளன.. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அதை அப்படியே  பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து இடித்து பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது, கொழுப்பு சத்தை அதிகமாக்கும்  தன்மை கொண்டது. இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள்  பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.