Wednesday, October 2, 2013

புதினாக்கீ​ரையின் ம‌க‌(ரு)த்து​வ‌ம்

புதினாக்கீ​ரையின் ம‌க‌(ரு)த்து​வ‌ம்

அடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

நமது அன்றாட உணவும் காய்கறிகளின் தன்மையும்

நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் இயங்கும் சக்தியை தருகிறது. புரோட்டீன் உடலை வளர்க்கிறது. கொழுப்பு உடல் மாற்றத்தை தருகிறது. ஒரு மனிதன் தன் எடையை தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 30-35 கலோரி உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். எடை கூட இன்னும் நிறைய உணவு உட்கொள்ளவேண்டும். ஒரு மனிதன் தினமும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மி.லி. தண்ணீர் பருகவேண்டும். அதே அளவு சிறுநீர் வெளியேர வேண்டும். இனிப்பு, உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை கூட்டும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும்.

வாதம் உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, புளிப்பு ஆகிய பொருட்களை உண்ணலாம். பித்தம் உள்ளவர்கள் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய உணவுகளை உண்ணலாம். கபம் உள்ளவர்கள் கசப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய உணவுகளை உண்ணலாம். கசப்பு, புளிப்பு, காரம்; உடைய பொருள்கள் வாயுவை உண்டாக்கும். பயிறு வகைகளை 2 ஆக உடைத்தாலோ அல்லது பிரித்தாலோ இரைப்பையில் வாயு உண்டாகும். ஆகவே பயிறு வகைகளை தண்ணீரில் சில மணி நேரம் ஊர வைத்து சமைத்தல் வாயு உண்டாகாது.

சந்தான விருத்தி தரும் செவ்வாழை

சந்தான விருத்தி தரும் செவ்வாழை


எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

நோய் பல தீர்க்கும் வேப்பமரம்

நோய் பல தீர்க்கும் வேப்பமரம்

தெய்வம் சார்ந்த பராரை வேம்பு " என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே 'கிராமத்தின் மருந்தகம்" என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் ஆதிசக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது.