Wednesday, October 2, 2013

நோய் பல தீர்க்கும் வேப்பமரம்

நோய் பல தீர்க்கும் வேப்பமரம்

தெய்வம் சார்ந்த பராரை வேம்பு " என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே 'கிராமத்தின் மருந்தகம்" என்று வேப்பமரம் சிறப்பிக்கப்படுகிறது. வேப்பமரம் ஆதிசக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது.


மருத்துவ குணம்
நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வேப்பிலை தெய்வீக மூலிகையாக கருதப்படுகிறது . மகாத்மா காந்தியின் ஆரோக்கியத்தின் ரகசியமாக வேம்பு இருந்துள்ளது. அவரது உணவில் வேம்பு சட்னி தவறாமல் இடம் பெற்றிருந்தது. இது புலனடக்கத்திற்கும் உகந்தது . வேம்பில் உள்ள இலைகள், கொப்புகள், பட்டை, மலர், கனி மற்றும் விதைகள் ஆகிய அனைத்துமே மருத்துவ பயன்உடையவை என்று சித்தர்கள் தெரிவித்ததை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். வேப்பிலையிலுள்ள “குயிர் சிடின்" என்னும் சத்து பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்டெரெப்ரோமைசின் போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வேப்பிலை 
வேப்பிலையும், மஞ்சளையும் சேர்த்தரைத்து பற்றை அம்மைப் புண்களில் மருந்தாகப் பூசப்படுகிறது. வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.
வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது. வேப்பிலைச் சாறுடன் பழச்சாறு கலந்து இரவில் படுக்கும்முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
உள்ளவர்களுக்கு இளந்தளிர்களை உப்பு, மிளகு சேர்த்து உட்கொண்டால் வயிற்றில் பூச்சித் தொந்தரவு தீரும். வேப்பிலைச் சாற்றைத் தேனுடன் கலந்து உட்கொண்டால் நாள்பட்ட காமாலைநோய் தீரும். புத்தகங்களை அரிக்கும் பூச்சிகளை அகற்றுவதற்கு நூல் நிலையங்களில் வேப்பிலை பயன்படுகிறது.

 வேப்பம் பூ
பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும். பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும். பூச்சாறுடன் நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும். வேப்பம்பூவுடன், வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும். வேப்பம்பூ, வாந்தி, ஏப்பம், பித்தம் ஆகியவற்றைப் போக்கும்.

தோல் நோய் தீரும் 
வேப்பம் பழத்தின் ரசத்தை எடுத்து சரும வியாதியுள்ளவர்களுக்கு கொடுத்து வந்தால் நோய் தீரும். மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும். வேப்பவிதையுடன், கசகசா மற்றும் தேங்காய் பால் சேர்த்து உடம்பில் பூசி குளித்தால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும். 100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது. வேப்ப கொட்டை , மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் குணமிருப்பதால் குஷ்ட நோய்க்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. வேப்பெண்ணெய் புண்களை அகற்றுவதற்காக மேலே பூசப்படும்

No comments:

Post a Comment