Tuesday, October 1, 2013

உடல் எடையைக் குறைக்கும் மூலிகைகள்

இந்தியா முழுவதும் பல்வேறு மூலிகைகளும், நறுமணப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் நிறைந்து கிடக்கின்றன. அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கத்தையும், வைரத்தையும் கொடுத்து விட்டு, அதற்கு மாற்றாக இங்கு விளையும், மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பெற்றுச் சென்றார்களாம். அப்படிப்பட்ட மிளகு முதல், நறுமணமிக்க மஞ்சள் வரை இங்கு கொட்டிக் கிடக்கிறது. அவை உடலுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்களாகப் பயன்படுவதுடன், சமையலில், வாசனையைக் கூட்டுவதற்கும், இங்குள்ள மசாலாப் பொருட்களும், மூலிகைகளும் பயன்படுகின்றன.

சூரிய நமஸ்காரம்

 


செய்முறை: 

நிலை 1 :
 • கிழக்கு திசையை நோக்கி நிமிர்ந்து நிற்கவும். இது தடாசன
நிலையாகும்.
 • மூச்சை உள்ளிழுத்து கைகளை கூப்பிக் கொண்டு மார்பை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளவும்.
• நார்மலாக மூச்சுவிட்டுக் கொண்டு சூரியனை நோக்கவும்.

நிலை 2 :
• மூச்சை உள்ளிழுத்து கைகளை தூக்கவும்.
• எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னால் வளையவும்.
• உள்ளங்கைகள் கூப்பிய நிலையிலேயே இருக்கும்.


யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை

Yoga



  • நல்ல காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்யவும். 



  •  சூரிய உதயத்திற்கு முன்னே காலை வேளை மனதிற்கு மிக மிக நல்லது. காலை மெதுவான சூரிய ஒளியில் செய்தாலும் நல்ல பலன் உண்டு. 



  •  யோகா செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும். எழுந்தவுடன் நிறைய குளிர் தண்ணீர் குடித்துவிட்டு அரைமணி நேரம் கழித்து காலைக்கடனை முடித்துவிட்டு செய்யலாம்.

கம்பு - சத்துப்பட்டியல்

Millets
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம். நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர்.

காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தனர்.

நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

சத்துப்பட்டியல்: குங்குமப் பூ

Saffron
கருவில் இருக்கும் குழந்தை 'கலராக' பிறக்கும் என்று பலரும் குங்குமப்பூவை சாப்பிடுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மிக அதிக விலைகொண்ட நறுமணப் பொருட்களில் ஒன்று குங்குமப்பூ. அதன் மருத்துவகுணம் அதற்கு விலை உயர்ந்த மதிப்பைக் கொடுத்துள்ளது. அதிலுள்ள சத்துக்களை பார்ப்போம்.

குங்குமப்பூ என்பது நிஜமான மலரல்ல. 'குரோகஸ் சட்டைவஸ்' என்ற அறிவியல் பெயர் கொண்ட தாவர மலரின், சூல்முடிகளே 'குங்குமப்பூ' ஆகும். இதன் வழக்கு மொழிப் பெயர் 'சப்ரான்'. தெற்கு ஐரோப்பாவை தாயக மாகக் கொண்டது குங்குமப்பூ. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீரில் மிகுதியாக விளைகிறது.

உடல் நல பயன்களை தரும் வெற்றிலை

வெற்றிலை செடி என்பது ஆண்டு முழுவதும் படர்ந்து குட்டையான பல தண்டுவேர்களை கொண்ட ஒல்லியான செடியாகும். இதன் பயன்பாடு 2000 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. அதற்கு ஆதாரமாக இலங்கையை சேர்ந்த பழமையான வரலாற்று புத்தகமான மகாவஸ்மாவில் (உலகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றான பாலி மொழியில் எழுதப்பட்டதாகும்) அதனை பற்றிய குறிப்புகள் உள்ளது. நம் இந்தியாவில் வெற்றிலைகளை சின்ன கட்டுகளாக சுருட்டி, விருந்தாளிகளுக்கு தருவது வாடிக்கையான ஒன்றாகும்.
அதனை பாண்-சுபாரி என்று அழைப்பார்கள். வெற்றிலை என்பது இதய வடிவில், வளுவளுப்பாக, பளபளப்புடன் நீண்ட காம்புகளை கொண்டுள்ளதாகும். இந்தியாவில் தமிழ் நாடு, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற மாநிலங்களில் வெற்றிலைகள் பயிரிடப்படுகிறது. வெற்றிலையை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் பலரிடம் இருந்து வரும் பதில் இதுவாக தான் இருக்கும் - "சாப்பிட்ட பின் தெகட்டல் நீங்கி செரிமானம் ஆவதற்கு". ஆனால் அதையும் தாண்டி அதில் பல பலன்கள் அடங்கியுள்ளது. பழங்காலத்தில் இருந்தே இதனை வாசனை ஊக்கியாகவும், வாயுவை தடுக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுரத்தல் மற்றும் இரத்த கசிவு போன்றவற்றை தடுத்து நிறுத்தி, பாலுணர்ச்சி ஊக்கியாகும் விளங்குகிறது. வீட்டு சிகிச்சை பலவற்றிற்கும் இது பயன்படுகிறது. இப்போது அந்த வெற்றிலைகளின் உடல் நல பயன்களைப் பார்ப்போம்.

ஆரோக்கியம் தரும் பாதாம்

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளடங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது.
Almond
குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது. இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை. இப்போது அந்த பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.