Tuesday, October 1, 2013

சூரிய நமஸ்காரம்

 


செய்முறை: 

நிலை 1 :
 • கிழக்கு திசையை நோக்கி நிமிர்ந்து நிற்கவும். இது தடாசன
நிலையாகும்.
 • மூச்சை உள்ளிழுத்து கைகளை கூப்பிக் கொண்டு மார்பை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளவும்.
• நார்மலாக மூச்சுவிட்டுக் கொண்டு சூரியனை நோக்கவும்.

நிலை 2 :
• மூச்சை உள்ளிழுத்து கைகளை தூக்கவும்.
• எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னால் வளையவும்.
• உள்ளங்கைகள் கூப்பிய நிலையிலேயே இருக்கும்.




நிலை 3:
முழங்காலை வளைக்காமல், முன்னோக்கி குனியவும். இதை மூச்சை வெளிவிட்டுக் கொண்டு செய்யவும். கைகள் தரையை தொடும் வரை குனியவும். முதலில் முடியாவிட்டாலும், போகப் போக சரியாகி விடும்.

நிலை 4:
• மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு இடது முழங்காலை வளைத்து இடது காலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீட்டவும்.
• இரண்டு உள்ளங்கைகளும் தரையில் படிந்திருக்கும்.

நிலை 5:
 • மூச்சை வெளியே விட்டு இடது காலை நீட்டவும், இடது பாதத்தை வலது பாதத்தின் அடியில் வைக்கவும்.
• உள்ளங்கைகளும், பாதங்களும் தரையில் அழுத்தியபடியே வெளி மூச்சு விட்டு ஆசனபகுதியை மேலே தூக்கவும்.
• உடல் ஒரு மலை அல்லது முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் போல் கால்களும், கைகளும் வளையாமல் இருக்க வேண்டும்.

நிலை 6:
 • கால்கள், முழங்கால்கள், மார்பு, கைகள் மற்றும் தாடை தரையை தொடுமாறு தரையில் படுக்கவும்.
• இடுப்பையும், அடிவயிற்றையும் மேலே தூக்கவும்.
• மூச்சை வெளியே விடவும்.

நிலை 7:
 • ஆறாம் நிலையிலிருந்து மூச்சை உள்ளிழுத்து உடலை இடுப்பிலிருந்து மேலே தூக்கவும். இரண்டு கைகளையும் இதற்கு பயன்படுத்தவும்.
• எவ்வளவு பின்னால் குனிய முடியுமோ அவ்வளவு குனிய வேண்டும்.

நிலை 8:
 • இது ஐந்தாம் நிலை போன்றது. மூச்சை வெளியே விட்டு உடலை தூக்கவும்.
• பாதங்கள், குதிகால்கள் தரையை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும்.

நிலை 9:
• இவை நான்காம் நிலையை போன்றதே. கால்களை மாற்றி வைக்க வேண்டும்.
• மூச்சை உள்ளிழுத்து வலது காலை, கைகளுக்கு எதிராக கொண்டு வர வேண்டும். இடது காலும், முழங்காலும் தரையில் பட வேண்டும்.
• தலையை இலேசாக தூக்கி மேலே பார்க்கவும்.

நிலை 10:
 • மூச்சை வெளியே விட்டு இடது காலை முன்னே கொண்டு வரவும். முழங்கால்களை நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.
• தலையை மூன்றாவது நிலையில் குறிப்பிட்டவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

நிலை 11:
இதை இரண்டாம் நிலை ஆசனத்தை போல் திருப்பி செய்ய வேண்டும்.

நிலை 12:
முதல் நிலையில் சொன்னபடியே செய்ய வேண்டும்.

பயன்கள்:
சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கிக் கசக்கிப் பிடித்து விடுவது போன்ற மசாஜ் செய்யப்படுகின்றன. மலச்சிக்கல் மறைகின்றது.

வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்குவதே இல்லை. இதனால் உறுதியடைகின்றது. சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது.

ஏராளமான கரிசக்காற்றையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.

இதயத்தை முடக்கிவிட்டு இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.

No comments:

Post a Comment