Wednesday, October 30, 2013

மளிகைப் பொருள் மகத்துவம்


சாதாரணமாக நமது வீட்டுக்கு அருகில் இருக்கும் மளிகைக் கடையில் கிடைக்கும் பொருட்களில் கூட ஏகப்பட்ட பலன்;கள் உணடு. நமது முன்னோர்களின் மருத்துவப் பயனாக விளங்கிய சில பொருட்களின் மகத்துவத்தை அறிவோம்.


நற்சீரகம்: 

வாந்தியுடன் கூடிய வயிற்று வலி, வாயு சம்பந்தமாக வியாதிகள், இரைப்புடன் கூடிய இருமல், நேங்சுச்சளி, கல்லடைப்பு, எரிச்சல், மூல நோய்கள், மலத்துடன் ரத்தம் வருதல் மூக்கடைப்பு பசியின்மை , வாயு, வாத வலிகள், கண்ணுக்கு குளிர்ச்சி ஆகிய பிரச்சினைகளுக்கு நற்சீரகத்தை உணவுடன் சாப்பிட்டால் குணமாகும்.

பெருஞ்சீரகம்:

பெண்களுக்கு யோனியில் ஏற்படும் எரிச்சல், புண் அரிப்பு, சொறி மற்றும் அஜீரணம், மந்தம், வயிற்றுவலி, வயிறு உப்புசம், வாதம், இருமல், நுரையுடன் கூடிய சளி வருதல், தொடர் தும்பல் போன்ற நோய்கள் பெருஞ்சீரகத்தால் குணமாகும்.



கருஞ்சீரகம்:

கருஞ்சீரகம் பார்ப்பதற்குச் சீரகம் போல இல்லாமல் கருப்பாக இருக்கும். இது கரப்பான், புண், மண்டைக் கரப்பான் தலைநீர் ஏற்றம், கபால நீ;ர் ஒற்றைத் தலைவலி, சளியுடன் கூடிய இருமல், தும்மல், காய்ச்சல், கண் வலி ஆகிய நோய்களை கட்டுப்படுத்தும்.

கொத்தமல்லி:

தாது பலமின்மை, குளிர் சுரம், உடல் உஷ்ணம் அதிகமான பித்தம், பைத்தியம், விக்கல், அதிகமான தாகம், அஜீரணம், வாந்தி, பொருமல், ஏப்பம், பசியின்மை, வாதம், வாயு வெளியேறாமை, குடைச்சல், மூட்டுகளில் வலி, வாத சுரம் போன்ற நோய்களுக்குக் கொத்தமல்லியை உட்கொண்டால் குணமாகும்

வெந்தயம்:

நிரநதரமாகத் தாது விருத்தியை உற்பத்தியாக்கும் சிறந்த மருந்து வெந்தயம். அதேபோல். அஜீலணம், அஸ்திசுரம், மேகப்புண, ரத்தபேதி, ரத்த, பித்த வாந்தி, உடல் உஷ்ணம், சளியடன் கூடிய இருமல் போன்ற வியாதிகளை நீக்கி, ரத்த விருத்தி ஏற்படுத்தி, சுக்கிலத்தைப் பெருக்கும்.



ஓமம்:

இரைச்சலுடன் கூடிய பேதி, செரிமானமாகாமல் மந்தம், குளிர் காய்ச்சல், சளியுடன் கூடிய இருமல், அஜீரணம், வயிற்றுப் பொருமல், குடல் எரிச்சல், ரத்த மூலம், உள் மூலம், ஆசனக் கடுப்பு போன்ற பல நோய்களைக் குணப்படுத்தக் கூடியது ஓமம். குழந்தைகளுக்கு ஓமம் கொடுத்தால் ஜீரண சக்தி நன்றாக இருக்கும்.

தேன்:


மலையில் கிடைக்கும் குறிஞ்சித் தேன், சுவாசத்தடை, விக்கல்ஈ தேகக் கடுப்பு ஆகியவை நீங்கும். நல்ல குரல் வளமும் கிட்டும். புதுத் தேன் சாப்பிட்டால், நீண்ட ஆயுள், சரீர வெப்பமும் உண்டாகும். நல்ல உடல் வனப்பு ஏற்படும். அதிகம் சாப்பிட்டதல் நெஞ்சில் கபம் உண்டாகும்.


மஞ்சள்:

வீக்கம், வண்டுக் கடி, மரு, முகப்பரு, கரும்புள்ளிக்ள, நாசி அடைப்பு, தலைவலி, ஜலதோஷம், தும்மல, அம்மை நோய், பித்தம் மேக நோய்கள் போன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்தும் குணம் கொண்டது. பசியைத் தூண்டும் மஞ்சள் உடலுக்கு வனப்பும், அழகும் தரும்.

கஸ்தூரி மஞ்சள்:




புண்கள், கரப்பான், கிருமியால் ஏற்படும் நோய்கள், குடல் மந்தம், சீரணமின்மை, உடல் உஷ்ணம் போன்ற வியாதிகளைக் குணப்படுத்தி அறிவை விருத்தி செய்து ஆண்மைக்கு வலுவான உடலையும் விந்து விருத்தியையும் தரும்.





இஞ்சி:





பித்த வாந்தி, குளிர் காய்ச்சல், வாதக்குடைச்சல், வாத வலி, எரிச்சல், அஜீரணம் போன்ற வியாதிகளை நீக்கும் திறன் கொண்டது இஞ்சி.


No comments:

Post a Comment