Wednesday, October 30, 2013

கீரை மருத்துவம் - கொத்தமல்லியின் மருத்துவக் குணம் பாட்டி வைத்தியம்:

siddhaandherbal.blogspot.in


கொத்தமல்லியில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்து. தாது உப்புகள் உள்ளன. மேலும் சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து, இரும்புச் சத்து, சோடியம், பொட்டாசியம், தயாமின, ரைபோ பிளேவின், நிகோடின் அமிலம், வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.

  • 10 கிராம் வீதம் கொத்தமல்லி, நெல்லி வற்றல், 5 கிராம் சந்தனம் இவைகளை கால் விட்டர் நீரில் இரவில் ஊற வைத்து காலையில் நீரை ம்டும் வடிகட்டி குடிக்க இரத்தக் கொதிப்பு தீரும்.
  • கொத்தமல்லியில் நீர் சேர்தது கஷாயமாக்கி வடிகட்டி பால் சேர்த்து காலை, மாலை ஒரு வாரம் சாப்பிட இரத்த மூலம் நீங்கும்.
  • 10 கிராம் வீதம் கொத்தமல்லி, சுக்கு இவைகளை ஒரு கப் நீரிலிட்டு காய்த்து கஷாயமாக்கி சாதத்தில் விட்டு சாப்பிட்டு வர மூலம் நோய்கள் தீரும்.
  • அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு மல்லியை வாயில் பேர்டு சாறை விழுங்கி வர கண்பார்வை தெளிவாகும். பல்லும் உறுதி பெறும்.
  • ஒரு கப் நீரில் கொத்தமல்லிப் பொடியை கலந்து குடிக்க அதிக மது குடிப்பதால் ஏற்படும் மயக்கம் தீரும்.
  • கொத்தமல்லி விதைகளை சிறிது சிறிதாக வாயிலிட்டு சுவைக்க மதுபான போதை தீரும்.
  • கொத்தமல்லியை நீரில் போட்டு ஊற வைத்து நீரைக் குடிக்கவர வயிற்றுப்புண் குணமாகும்.
  • நீரில் கொத்தமல்லியைப் போட்டு ஊற வைத்து கற்கண்டு, தேன் இவைகளை சேர்த்து குடித்தால் பல வியாதிகளால் ஏற்படும் பெரும் தாகம் தீரும்.
  • இரவில் கொத்தமல்லியை நீரில் ஊற வைத்து காலையில் அரைத்து நீரில் கலக்கி கற்கண்டு சேர்த்து குடிக்க பித்தம், தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும்.
  • கொத்தமல்லி விதையை மென்று சுடுநீர் குடித்து வர வாந்தி குறையும்.
  • கொத்தமல்லியை அரைத்து இளநீரில் கலந்து குடிக்க வாந்தி தீரும்.
  • 10 கிராம் கொத்தமல்லி 20 கிராம் சீரகம், கருஞ்சீரகம் இவைகளை நீர் விட்டு காய்ச்சி கஷாயமாக்கி தேவையான வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் கீல்வாயு தீரும்.
  • 10 கிராம் கொத்தமல்லியை வறுத்து 10 கிராம் சோம்பை சேர்த்து தூளாக்கி பாலில் கலந்து சாப்பிட நீண்ட ஏப்பம் தீரும்.
  • சிறிதளவு கொத்தமல்லியை நான்கு மணி நேரம் நீரில் ஊறவைத்து நீரை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுவலி, கூடு தீரும்.
  • கொத்தமல்லியை ஊற வைத்த நீரால் கண்களை அலம்பினால் அம்மை நோய் வந்துள்ள நேரத்தில் நோயின் கடுமை கண்களை பாதிக்காது.
  • ஒரு வெற்றிலையில் ஐந்து கிராம் கொத்தமல்லியை அரைத்து சாப்பிட்டால் உடல் வலி தீரும். மலச்சிக்கல் தீரும். 


No comments:

Post a Comment