Wednesday, October 30, 2013

அஞ்சறைப் பெட்டி - விந்துவின் வீரிய சக்திக்கு வெந்தயம்

 வாசனைப் பொருட்கள் பலவும் உணவிற்கு சுவை> மணம் அளிப்பதோடு இயற்கை மருந்தாகவும் பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமான ஒரு வாசனைப் பொருள் வெந்தயம்.

அடங்கியுள்ள சத்துப் பொருட்கள்:

வெந்தய விதையில் புரதம்> சுண்ணாம்புச் சத்து> பாஸ்பரஸ்>பொட்டாசியம்> சோடியம்> இரும்புச் சத்து > வைட்டமின ஏ> தையாமின்> ரிபோபிளேவின்> நிக்கோடினிக் அமிலம் ஆகிய சத்துப் பொருட்கள் கணிசமாக அடங்கியுள்ளன.





மருத்துவப் பயன்கள்:

தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து மறுநாள் காலையி;ல் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய நிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்கள் வெந்தயத்துடன் கருப்பட்டி சேர்தது களி செய்து சாப்பிட்டுவர தாய்ப்பால் அதிகம் ஊறும். குழந்தை கொழு கொழுவென வளரும்.

சிறிது வெந்தயத்தைமென்ற தின்று இரண்டு சின்ன வெங்காயத்தை மோரில் அரிந்தி;ட்டு சாப்பிட்டு வர பருமனான உடல் எடை குறையும்.

கொஞ்சம் வெந்தயத்துடன் இரண்டு வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட்டால் வயிற்று வலி> வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

வெந்தயத்தை எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து மையாக அரைத்து காலை> மாலை என இரு வேளை  சாப்பிட்டுவர கல்லீரல் கோளாறுக்ள தீரும்.

வேட்டிவேர்> வெந்தயம்> சீரகம் சேர்த்துக் கஷாயம் செய்து ஆறியதும் குடித்துவர சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

கோடை காலத்திர் கடுமையான வெம்மை தாக்காதிருக்க காலையில் சிறிது வெந்தயத்தை மென்று தின்று ஒரு டம்ளர் நீராகாரம் பருகி வர வேண்டும். உடலை நன்கு குளிர்ச்சி அடையச் செய்யும் குணம் வெந்தயத்திற்கு உண்டு.

வெந்தயத்தை ஊற வைத்து மையாக அரைத்து தீக்காயத்தின் மீது பூசி சர தீப்புண் விரைவில் குணமாகும்.

ஒரு துண்டு இஞ்சியுடன் கொஞ்சம் வெந்தயம் வைத்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.

வெந்தயத்தில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த விருத்தி ஏற்படும்.

ஊணவில் வெந்தயம் அடிக்கடி சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது.

செவ்வாழைப் பழத்துடன் சிறிது வெந்தயம் சேர்த்து உண்டால் சீதபேதி குணமாகும்.

ஒரு டம்ளர் மோரில் சிறிது வெந்தயம்> சீரகம் பொடித்திட்டு குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

No comments:

Post a Comment