Wednesday, March 4, 2015

ஜவ்வரிசி அல்வா

ஜவ்வரிசி அல்வா



தேவையான பொருட்கள்:-

  • ஜவ்வரிசி  - 1 கப்
  • முந்திரி         - தேவையான அளவு
  • நெய்         - தேவையான அளவு
  • சர்க்கரை - 1 கப்
  • கலர் பவுடர்         - தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:-

முதலில் ஜவ்வரிசியை ஒரு கப் எடுத்துக்கொண்டால் 1 கப் தண்ணீரில்; 1 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். வாணலில் நெய் ஊற்றி அதில் முந்திரியை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். ஊறவைத்துள்ள ஜவ்வரிசியை மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். பின்பு வாணலில் தேவையான அளவு நெய் ஊற்றி நெய் காய்ந்ததும் அரைத்த ஜவ்வரிசி விழுதை ஊற்றி கிளறி கொண்டே இருக்கவும். பின்பு சர்க்கரையுடன் 2 ஏலக்காய் போட்டு மிக்ஸியில் அரைத்து அதில் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். வேணும் என்றால் நெய் இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம். இதனுடன் சிறிது கலர் பவுடரை சேர்க்கவும். அதனை நன்கு கிளறி வாணலில் ஒட்டமால் கிளறியவுடன் அல்வா பதத்திற்கு வந்தவுடன் முந்திரி பருப்பை சேர்த்து கிளறவும். ஜவ்வரிசி அல்வா ரெடி.  

No comments:

Post a Comment