Thursday, February 12, 2015

உடல் பருமனைக் குறைக்கும் சுக்கு சூப்

உடல் பருமனைக் குறைக்கும் சுக்கு சூப்


அதிக கொழுப்பு மற்றும் கலோரி நிறைந்த உணவை சாப்பிடும்போது, தேவைக்கு அதிகமான கலோரிகள் பயன்படுத்தப்படாமல் உடம்பில் அதிகக் கொழுப்பு சேர்ந்து ஒபிஸிட்டியை ஏற்படுத்தும்.

காலையில் காபி, டீ இவற்றுக்குப் பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது ஒபிஸிட்டிக்கு நல்லது. மலச்சிக்கலும் ஏற்படாது. சுக்கு சூப் செய்வது சுலபம்தான்.


ஒரு டேபிள்ஸ்பூன் சுக்கு, ஒரு டீஸ்பூன் மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

No comments:

Post a Comment