Friday, May 15, 2015

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

     முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்



  முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும்.

  தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லை புறத்திலும் இது படர்ந்து கிடக்கும். கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.


  முடக்கத்தான் கீரையை குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும். 

  பொதுவாக இந்தக் கீரையை பெரும்பாலானோர் தோசை அல்லது துவையலாக தான் உணவில் சேர்த்துக் கொள்வர்.

  பச்சைக்கீரை சிறிது கசக்கும். ஆனால் சமைத்தப்பின் அவ்வளவாகத் கசப்பு தெரியாது.

  வைட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்தது முடக்கத்தான் கீரை.
  முடக்கத்தான் கீரையின் துவையலை, உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதன் மூலம், மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டு நோய்கள் போன்றவை குணமடையும்.

  இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து சிறுநீராக அதை வெளியேற்றி விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. 

  முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.
  மாதவிடாய் நிற்கும் நிலையி;ல் உள்ள பெண்களுக்கு இக்கீரை மிகவும் நல்லது.


No comments:

Post a Comment