சர்க்கரை வியாதியை குணமாக்கும் சீந்தில்
பொதுவாக எல்லா மருத்துவ முறைகளும் உடலில் உண்டாகும் நோய்களுக்குத்தான் மருத்துவம் சொல்லுகின்றன. ஆனால் தமிழ் மருத்துவமான சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சித்த மருத்துவம் நோய்க்கு மட்டுமின்றி நோய் அணுகாதிருக்கவும் மருந்துகளின் ஒன்றான சீந்தில் மூலிகையை பற்றி காண்போம்.
சீந்தில் நம் நாட்டிலும், மற்றும் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளான பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலும் அதிகமாக பயிரிடப்படும் மூலிகையாகும். இதற்கு சோமவல்லி, அமிர்த வல்லி, அமிர்தை, அமிர்தக் கொடி, குண்டலி சீந்திற் கிழங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.
சீந்தில் இலை வெற்றிலைப் போல பச்சை நிறமாக இருக்கும். பழம் சிவப்பாகவும் சிறியதாகவும் இருக்கும் இது மற்ற மரங்களின் மீது படர்ந்து வளரும் கொடியினத்தைச் சார்ந்தது.
சீந்திலின் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் தொங்கும். இக்கொடியின் இலை,கொடி,வேர், சமூலம் என் அனைத்து பாகங்களும் மருந்துவத்திற்கு பயன்படுகின்றது.
சீந்திலின் கொடியை அறுத்து விட்டாலும் இலைகள் வாடாமல் பசுமையாக இருக்கும். அதனால் இதற்கு “சாகா மூலிகை” என்ற பெயர் வந்தது.
சாதாரணமாக சீந்தில் கொடிக்கு கோடை காலத்தில் அதிக சத்து இருக்கும். மழை மற்றும் பனிக்காலங்களில் சத்து மிகவும் குறைந்து காணப்படும்.
சீந்தில் இலை:-
சீந்திலின் இலையை அனலில் வாட்டி, புண்கள் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் குணமடையும். மேலும் இதன் இலையை அரைத்து கோடை காலங்களில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெறும் வயிற்றில் காலை வேளையில் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குணமாகும்.
சீந்தில் கொடி:-
முற்றிய கொடி இளம் கொடியை விட நிறைய பலன்களைத் தரும். அதாவது முற்றிய கொடியில் கைப்பு தன்மை அதிகம் இருக்கும். முதிர்ந்த கொடியைக் கோடைகாலத்தில் சேகரிக்க வேண்டும். மற்ற காலங்களில் சேகரிக்கப்படுவதற்கு இக்குணம் நிறைந்திராது.
நன்றாக முற்றிய சீந்தில் கொடி இடித்தது - 35 கிராம்
கொத்தமல்லி - 20 கிராம்
சுக்கு - 20 கிராம்
அதிமதுரம், சோம்பு - தலா 10 கிராம்
எடுத்து இடித்து எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஒரு லிட்டர் விட்டு கொதிக்க வைத்து கால் லிட்டராக சுண்ட வைத்து, வடிகட்டி காலை, மாலை இரு வேளை மூன்று நாட்கள் குடித்து வந்தால் அஜீரணம், வயிறு உப்புசம், நாட்பட்ட வாதம், பலக்குறைவு முதலியன குணமாகும்.
சீந்தில் சர்க்கரை:-
கோடைக்காலத்தில் முற்றிய சீந்தில் கொடியை இடித்து, அதில் 5 படி தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து, ஒரு நாள் முழுவதும் வைத்து, அதை தெளிய வைத்து விடவும். பிறகு அந்த தெளிந்த நீரை, கீழே ஊற்றி விட்டு அடியில் உள்ளதை மட்டும் எடுத்து, தண்ணீரை விட்டு கலக்கித் தெளிய விட வேண்டும்.
இது போல் ஐந்தாறு தடைவ செய்து கடைசியாக திப்பிலை நீக்கி நீரை அசையாமல் வைத்து தெளிவினை இறுத்து காய வைத்து எடுத்தால் நமக்கு சீந்தில் சர்க்கரை கிடைக்கும்.
இந்த சீந்தில் சர்க்கரையை வாயில் வைத்தால் சுவை இல்லாமலிருக்கும். இதை மற்ற மருந்துகளுடன் அனுபானமாக கொடுக்கலாம். மேலும் இது கல்லீரல், நுரையீரல் மற்றும் மண்ணீரலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.
சீந்தில் புகை:-
உடல் மெலிந்து மிகவும் நலிவுடன் இருப்பவர்கள் சீந்தில் கொடியை தீயிலிட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்தால் உடல் பலத்தை பெறுவார்கள்.
சாகா மூலி
பிரசவத்தின் போது சாகாமூலி என்ற சீந்தில் கொடியின் சிறு துண்டை தாயின் கால் கட்டை விரலில் கட்டி விடுவர். இதனால் பிரசவகாலத்தில் தாய், சிசு இருவரும் நலமாக பிறக்கின்றனர். பிறக்கும் குழந்தைக்கு எந்த நோய் கிருமியும் தாக்கப்படுவதில்லை. இது உண்மை இன்று கிராமப்புறங்களிலும் இதை செய்கின்றன.
சீந்தில் பாகங்களை பயன்படுத்தி அதனுடைய பலன்களை நாம் அடைவோம்.
No comments:
Post a Comment