Saturday, January 31, 2015

முதுகுவலியைத் தடுக்க சில வழிகள்

முதுகுவலியைத் தடுக்க சில வழிகள்


  • நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக்கூடாது முதுகை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து வேலைசெய்ய வேண்டும். கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும். நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது கீழ் முதுகுக்கு சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.
  • சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் செய்வது முதுகுவலி வராமல் தடுக்கும்.
  • காற்றடைத்த பானங்கள், குளர்பானங்கள், மென்பானங்கள், கோக் கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் பாஸ்போரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். இது கால்சியம் சத்து குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்துவிடும். எனவே, இவற்றை அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
  • மேல்முதுகில் வலி ஏற்பட்டால் ஐஸ் ஒத்தடம் கொடுத்து மூச்சுப்பயிற்சிகளைச் செய்தால் போதும் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது சுளுக்கு எடுப்பது, பேண்டேஜ் போட்டுக்கட்டுவது. கண்ட கண்ட களிம்புளைப் போட்டு தேயோதேயென்று தேய்ப்பது கூடாது. இப்படிச் செய்தால் பாதிப்பு அதிகமாகி வலியும் கடுமையாகிவிடும்.
  • முதுகில் வலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கக்கூடாது. இவர்கள் கட்டாந்தரையில்தான் படுக்கவேண்டும். கட்டை பெஞ்சில்தான் படுக்க வேண்டும் என்பதில்லை. சுரியான மெத்தையில் பக்கவாட்டில், சற்று குப்புறப்படுத்துக்கொள்ளலாம்.
  • பலமாகத் தும்மக்கூடாது, மலம் கழிக்கும்போது அதிகமாக முக்கக்கூடாது மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • அதிக எடையைத் தூக்கக்கூடாது அப்படியே தூக்கவேண்டியது இருந்தால் எடையைத் தூக்கும்போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக்கொள்வது இன்னும் நல்லது.
  • உடலை அதிகமாக விரியச் செய்தல், வளைத்தல் கூடாது திடீரெனத் திரும்புதல் கூடாது.
  • குனிந்து தரையைச் சுத்தம் செய்வதற்குப் பதிலாக நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.
  • இந்தியக் கழிப்பறைக்குப் பதிலாக மேற்கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் நல்லது.
  • ஹை - ஹீல்ஸ் செருப்புகளை அணியக்கூடாது.
  • அருகில் உ;ள இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வதைவிட நடந்தே செல்லுங்கள்.
  • நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போது நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்நது ஓட்ட வேண்டும்.
  • ஏற்கனவே முதுகு வலி உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது பஸ்ஸின் நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்துகொள்வது நல்லது.
  • உடல்பருமனைத் தவிர்க்க வேண்டும்.
  • புகை பிடிக்காதீர்கள், மது அருந்தாதீர்கள் போதை மாத்திரைகள் சாப்பிடாதீர்கள்.
  • மன அழுத்தம் தவிருங்கள். 
செய்ய கூடியவை  செய்ய கூடாதவை 




No comments:

Post a Comment