Monday, October 14, 2013

மூலிகை மருத்துவம் - இளமையுடன் பிரகாசிக்க இயற்கை தரும் இன்பமான தேன்

தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் தங்களின் தவப்பயனால் கண்டறிந்த சித்த மருத்துவத்தில் தேனை துணை மருந்தாக பயன்படுத்துகின்றனர்.  மருந்து என்றதும் நம் நினைவில் வருவது அதன் கசப்பு சுவையே. அச்சுவையே நாம் மருந்தை வெறுப்பதற்கு காரணமதக இருக்கிறது. இதற்கு முற்றிலும் எதிhமறையாக நம் அனைவராலும் விரும்பப்படும் இனிப்பான மருந்து (அமிர்தம்) தான் தேன்.

தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.

சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.

தேன் இயற்கை அளித்த கொடை அனைவரின் ட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அரு மருந்து.

தேன் அமிர்தமாக மட்டுமின்றி சிறந்த அனுபானமாகவும் (துணை மருந்தாகவும்) பயன்படுகிறது. ஒரு மருந்தின் பயன் முழுமையாக நமக்குக் கிடைக்க வேண்டுமெனில் அனுபவம் மிகவும் அவசியம்.
இதையே சித்தர் பாடலில

"அனுபானத் தூலே யவிழ்தம் பலிக்கும்
இனிதான சுக்கு ன்னலிஞடசி - பினுமுதகங்
கோமயம் பால்முலைப்பால் கோநெய்தேன் வெற்றிலைநீர்
ஆமிதையா ராயீந்து செய லாம்". என்று கூறியுள்ளார்.

தேனை சேகரிக்கும் முறைகள்:

பொதுவாக மலை, மரக்கொம்ப போன்ற இடங்களில் தேனீக்கள் கட்டும் கூடுகளை எடுத்து தேனடைகளைப் பிழிந்து தேனை சேகரிக்கின்றனர்.
தற்காலங்களில், செயற்கைமுறையில் கூடுகளமைத்து அதில் தேனீக்களைப் பழக்கி. பின் இயந்திரங்களை கொண்டு பிழிந்து தூய்மையான தேனை சேகரிக்கின்றனர்.

குடகு நாட்டில் பானைகளைத் துவாரமிட்டு இலவங்கப்பட்டை, வாசனை மெழுக முதலியவற்றைப் பூசி தேனீக்களை நுழையப் பழக்கி தேனெடுக்கின்றனர்.

தேன் கொழுப்பற்றதாகும்.

தேன் ஒரு கிருமி நாசினி. தேனில் கிருமிகள் வளர்வதில்லை. ஏனென்றால் அதில் உள்ள நீரின் அளவு மிகவும் குறைவானதாகும். அதனால் அது கிருமிகளை வளரவிடுவதில்லை.

100 கிராம் தேனில் உள்ள ஊட்டப் பொருட்கள்:
Eng - Name - Honey


  • கலோரி அளவு        - 304 கிலோ கலோரி
  • மாவுப் பொருள்        - 82.4 கி
  • சர்க்கரை,குளுக்கோஸ்
  • ஃபிரகடடோஸ், மால்டோஸ், - 82.12 கி
  • சுக்ரோஸ் 
  • நார்ச்சத்து                 - 0.2 கி
  • புரதச்சத்து                 - 0.3 கி
  • இரும்புச்சத்து         - 3%
  • நீர்                         - 17.1 %
  • வைட்டமின் பி2         -3%
  • வைட்டமின பி3         - 1%
  • வைட்டமின் பி5         -1%
  • வைட்டமின் பி6         - 2%
  • வைட்டமின சி         - 1%
  • போலேட், கால்சியம்         - 1 %
  • மெக்னீசியம், பாஸ்பரஸ்
  • பொட்டாசியம்         - 1%
  • துத்தநாகம்                 - 2 %


கலோரி: தேன் நிறைய கலோரி நிறைந்ததாகும். 100 கி தேனில் 304 கிலோ கலோரி ஆற்றல் உள்ளது.

தேனின் தரம்:
பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையது. வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்தது. ஆரஞ்ச மரப்பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் முதல் தரமானது.

தேனில் வகைகள்: 

தேனில் 60 வகைகள் உண்டு. நாம் இங்கு முக்கியமான சில தேன்களைப் பற்றிப் பார்ப்போம்.


  • மலைத்தேன்
  • கொம்புத்தேன்
  • மரப்பொந்துத் தேன்
  • புற்றுத்தேன்
  • மனைத்தேன்

ஒவ்வொரு தேனுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள் உண்டு.

மலைத் தேன்: 

மலைத்தேன் மலைகளில் உள்ள காடுகளில் உள்ள மரங்களில் தேனீக்கள் கூடு கட்டுவதால் கிடைக்கிறது. மலர்களில் உள்ள தேனை உறஞ்சி இயற்கையான முறையில் தேனீக்கள் சேமித்து வைக்கின்றன. இந்த தேனுக்க பல சிறந்த மருத்துவ பயன்கள் உள்ளன.

ஐயிரும லீளைவிக்க லக்கிப்புண் வெப்புடல் நோய்
பையவொழியும் பசியுறும் - வையகத்தி
லெண்ணுமினை யாமருந்திற் கேற்ற வனுபான
நண்ணு மலைத்தே னொன்றினால்.

மலைத்தேனை குடிப்பதால்


  • சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். 
  • காசநோய் அண்ட விடாது
  • விக்கல், சுரம், சரீர கடுப்ப மற்றம் கண்ணில் ஏற்படும் புண் ஆகியவற்றை குணமாக்கும் தன்மை மரைத்தேனுக்க உண்டு.
  • மேலும் மருந்து உண்பவர்களுக்க இது நல்லதோர் துணை மருந்தாகும்.

கொம்புத்தேன்:

மரங்களின் பொந்துகளில் கூடு கட்டும். இந்த தேனீக்கள் சிறிய கொசுவைப் போல் காணப்படும். தெனீக்கள் தேனை சேகரித்து தட்டு கட்டி சேகரிக்கும் தேன் தான் கொம்புத் தேன். இந்த வகையா தேன் கிடைப்பது மிகவும் அரிது.

வாத பித்த வையகத்தை மாற்றுமுள மாந்தைகளைக்
காதமென வோடக் கடியுங்கான் - பூதமரம்
வம்பு முலைமாதே வரு மருசி நீக்கிவிடுங்
கொம்புத்தே னன்றாகுங் கூறு.

இந்த கொம்புகளில் உள்ள தேனை சேகரித்து நாம் அருந்துவதால்


  • வாத, பித்த, கப நோய்கள் குணமாகும்
  • பசி உணடாகும்
  • வாந்தி, மயக்கம் முதலிய நோய்களை பக்கத்தில் நெருங்க விடாது

மரப்பொந்துத் தேன்:

மரங்களில் உள்ள துளைகளில் தேனீக்கள் தட்டு கட்டி சேகரிக்கும் தேன் மரப்பொந்துத் தேன்

பசி வெப்பாம் வாந்தி மாந்தம் பல்விக்கல் வெய்ய
ருசிமுக் கபந்தூல ரோகங் - கசிவகலாக்
கொத்துத் தேன் பாடுங் குழலணஙடகே காவின்மரப்
பொந்துத்தே னுண்டாயிற் போம்.

இந்த மரப்பொந்துத் தேனை நாம் அருந்துவதால் பசி உண்டாகும். சுவை இன்மையை நீக்கும். மேலும், எலும்புருக்கி நோய், உடல் பருமன் முதலிய நோய்களை குணப்படுத்தும்.

புற்றுத் தேன்:

காடுகளில் உள்ள புற்றுகளில் தேனீக்கள் தட்டு கட்டி சேகரிக்கும் தேன் புற்றுத் தேனாகும்.

கொப்பளியுமாதே குவலயத்து ளெல்லார்க்கு
மொப்கநின்ற வைய மொழிக்குங்காண் - கொப்பளிக்குங்
காசச் சுவாசம் வாந்தி கண்ணிலெழு நோய்களறும்
வீசிபுற்றுத் தேனுக்க மெய்.

புற்றுத் தேனை நாம் அருந்துவதால் சுவாக நோய்கள் (இருமல், இரைப்ப) குணமாகும். மேலும், வாந்தி, கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்

மனைத்தேன்:

இது வீடுகளின் கட்டுகின்ற தேன்.

புண்ணும் புரையும்போம் போகக் கரப்பானது 
மெண்ணிய தீபனமா மேந்திழையே - கண்ணுகளிற் 
பூச்சிபுழு வெட்டுகபம் பொல்லா விருமலறு ஆகும்
பேச்சின் மனைத்தேனுக்குப் பேசு.

இந்த மனைத்தேனை நாம் அருந்துவதால் புரையோடிய புண்கள் குணமாகும். மேலும் கரப்பான் முதலிய தோல் நோய்களையும் குணமாக்கும்.

தேனின் உபயோகங்கள்:


  • தேனீக்கள் எந்த செடியிலிருந்து தேனை சேகரித்ததோ, அந்த செடியின் மருத்துவக் குணத்தை பெற்று, நோய் நீக்கும் மருந்தாக, உயர்ந்த உணவாக தேன் பயன்படுகிறது.

  • இந்திய மருத்துவ முறைகளில், தேன் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது. மருந்துகளை தேனில் கலந்து கொடுப்பதால், சீக்கிரமாக மருந்து குடலில் உறிஞ்சப்படுகிறது. மருந்தின் வீரியமும் குறையாமல நன்கு செயல்படுகிறது. நோய் விரைவில தீரும்.

  • தேன் இரத்தத்தை சுத்தப்படுத்தும் எளிய மருந்தாகும்.

  • தேனை தினமும் காலை, இரவ வேளைகளில் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து பருகினால், பருத்த உடல் மெலியும் ஊளை சதை குறையும் உடல் உறுதியடையும்
  • ஒரு டம்பளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து பருகினால் பருத்த உடல் மெலியம் ஊளை சதை குறையும் உடல் உறுதியடையும்.
  • ஒரு அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் வெங்காய சாறு சேர்த்துக் குடித்தால் கண் பார்வை பிரகாசமடையும் 
  • தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.
  • ஒரு மேஜைக்கரண்டி தேனுடன் ஒரு முட்டை மற்றும் அரை டம்பளர் பாருடன் கலந்து குடிக்க ஆஸ்துமாவிலிருந்து விடுபடலாம்
  • மாதுளம் பழரசம் அரை டம்பளருடன் இரண்டு ஸ்பூன் தேன் சேர்தது சாப்பிட, இருதய நோய்கள் குறைந்து இருதயம் பலப்படும்.
  • அனைஸ் பொடியுடன் ஒன்ற அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.
  • தேன் வயிற்றின் நண்பன் எனலாம் அல்சர் நோய்க்க உணவுக்கு முன் தினமும் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட நோய் குறையும்
  • அரை அவுன்ஸ் தேனும். அரை அவுன்ஸ் இஞ்சி சாறும் கலந்து ஒரு வாரம் குடிக்க ரத்தம் சுத்தியாகும். ரத்தம் விருத்தியாகும்
  • தேனில், இஞ்சி, கொட்டை நீக்கிய பேரிச்சை ஊற வைத்து உண்ண நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
  • பொதுவாக தேன் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும் நெருப்பினால் உண்டான காயங்களை குணப்படுத்தவும்.கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கவும் இது பயன்படகிறது.


நல்ல தூக்கத்திற்கு:

இரவு படுக்கைக்க செல்லும்முன் தேன் 2 ஸ்பூன் பாலிலோ, அல்லது நீரிலோ கலந்து அருந்திவந்தால் நல்ல சுகமான உறக்கம் வரும்.
தேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கும் பலம் தரும்.

தேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்சென்று காணப்படும். பல் ஈறுகளில் நுண் கிருமிகள் வளருவதைத் தடுக்கும்.

தேனை வாய்புண் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும். வயதானவர்களுக்கு தேன் உடல் வலிமையையும் சக்தியையும் கொடுக்கும்.

நீண்ட நாள் சளி நீங்க:

பூண்டு எண்ணெய் 1 ஸ்பூன்
தேன் 3 ஸ்பூன்

கலந்து ஒரு நாளைக்கு மூன்ற வேளை அருந்தி வந்தால் சளித்தொல்லை நீங்கும்.

தேனை அதிக அளவு எடுத்து குடிக்கக் கூடாது சிறிது சிறிதாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நாவினால் நக்கி சாப்பிட்டால் உமிழ் நீருடன் தேன் சேர்ந்து உடலுக்கள் செல்லும்.

சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போகிரேட்ஸ் 107 வயது வரை நோய நொடியின்றி திடகாத்திரமாக வாழ்ந்தார். அதற்கு அவர் கூறிய காரணம் ஒவ்வொரு நேரமும் உணவ உண்ணும் போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன். என்ற கூறியுள்ளார்.

ஆகவே என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை உணவில் சேர்க்க வேண்டும்.

அழகுக்காக தேன்:

நம் இளமைத் தோற்றத்திற்கு உடல் பலம் மட்டுமின்றி நம் கூந்தலும் தோலும் நல்ல நிலையிலிருப்பது அவசியம்.

தேனிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆன்டி பாக்டீரியல் இரண்டும் வறண்ட சருமம் வெயிலால் தோலில் வரும் பாதிப்பு முகப்பரு போன்றவற்றை குறைக்க வல்லது.

மேலும் பலமற்ற முடியை சரி செய்து கூந்தலை பளபளப்பாகக் காட்ட செய்கிறது அதனால்தான் தற்போது விற்பனையாகும் ளரளெஉசநநn டழவழைn மற்றும ர்யசை ஊழனெவைழைநெச ஆகியவற்றில் தேனும் மூலப்பொருட்களில் ஒன்றாக உள்ளது.

முகப் பொலிவிற்கு:  


2 ஸ்பூன் தேன் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும். முகம் பொலிவு பெறும். (தேனை தடவும்போது ரோமத்தில் படாதவாறு தடவவேண்டும். ரோமத்தில் பட்டால் ரோமம் வெளுத்துப் போகும்

வறண்ட சருமம் மென்மையாக:
தேன் 1 ஸ்பூன்
பால் 1 ஸ்பூன்

 இரண்மையும் குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் மேனி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.

தேன் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் பன்னீர் 100 மிலி கலந்து தோலின் மீது தடவினால் தோல் பளபளக்கும்.

புதுத்தேன்

நிறைந்த ஆயுளையும் அழகையும் கொடுக்கும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சில் கபம் உண்டாகும்.

பழைய தேன் 

இது புளிப்பும் இனிப்புமாயிருக்கும் இதனால் வாதப் பெருக்கம், வயிற்றெரிச்சல் உருவாகும்.

தேன் மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாக துணை மருந்தாக பயன்படும்
தேன் இதயத்திற்கு ஒரு சிறந்த மருந்து. இது மார்புவலி படபடப்பு ஆகியவற்றிற்கு நல்லது.

தேன் எளிதில் சீரணமாகும். எனவே செரியாமையைத் தீர்க்க கிடைத்த வரப்பிரசாதம்.

தேன் இரைப்பையில் அதிக அமிலம் சுரப்பதை குறைக்கும். பசியின்மையை, வாய் குமட்டல், நெஞ்செரிச்சல் குணமாகும்.

இது சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு குடலில் உள்ள கழிவு பொருட்கள வெளியேற்றும்.

வெதுவெதுப்பான நீர் 1/2 டம்பளர் எடுத்து அதில் தேன் 1 ஸ்பூன் , எலுமிச்சை பழச்சாற்றை சிறிது கலந்து காலையில் அருந்த வயிறு எரிச்சல் குணமாகும்.

மலச்சிக்கல் தீரும். 
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகப்படுத்த தேனே சிறந்த மருந்தாகும்.

தேனில் அதிகளவு இரும்புச் சத்து, செம்பு, மாங்கனீசு உள்ளது. வெளுப்பு நோயைக் குணமாக்கும்

நுரையீரல் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும்.

இது சிறந்த கோழையகற்றி , ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சிறந்தது

ஆஸ்துமா நோயாளிகள் 1 டம்பளர் வெதுவெதுப்பான வெந்நீரில் 1 ஸ்பூன் தேன் கரந்து பருகி வந்தால் வறட்டு இருமல் ஆஸ்துமா குணமாகும்.

இருமலுக்கு

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாற கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்வு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்ப போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆஸ்துமா:

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்.

இரத்த கொதிப்பு

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை மற்றும் மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு:

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும். மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

தேனை உட்கொள்ளும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

தேனை சூடாக உணவுப் பொருட்களுடன் கலக்கக் கூடாது தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும். தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒரு போதும் கலக்கக் கூடாது.

தேனில் கலப்படம்:
தற்காலங்களில் சுத்தமான தேன் கிடைப்பதே இல்லை. தேனில் சர்க்கரைப் பாகை சேர்த்துக் கலப்படம் செய்கின்றனர்.

தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள்:

சிறிதளவு தேனில் தீக்குச்சியை சிர விநாடிகள் ஊற விடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துமைத்து விட்டு, தீப்பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். தீக்குச்சி சீக்கிரம் எரிந்தால். அது சுத்தமான தேன் என அடையாளம் காணலாம்.
கண்ணாடி டம்பளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும் அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

 பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்க ஒத்துவரவில்லை என்றால்,

தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முளை உண்டு:
 நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும் ஒரு நிமிடம் காத்திருக்கவும் குனிந்து தேனை வாயால் ஊதவும் தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலில் உள்ளே இறங்கி விடுவது போலிஃகலப்படம் என்ற அறியலாம்.
இத்தகைய இயற்கை தரும் இன்பமான தேனை நாம் உபயோகிப்பதால் என்றும் இளமையுடன் பிரகாசிக்கலாம்.

No comments:

Post a Comment