Monday, October 14, 2013

கீரை மருத்துவம் - நீண்ட காலம் வாழ மணத்தக்காளிக் கீரை

உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த கீரைகளுள் இதுவும் ஒன்று.
குளிர்ச்சியை சுபாவமாகக்கொண்ட இக்கீரை வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது. வீட்டிலும் விளைவிக்கலாம். எல்லாக் காலங்களிலும் ஒரளவுக்கு கிடைக்கக்கூடியது.இக்கீரையின் காய் பச்சைமணியைப் போல இருக்கின்றபடியால் மணித்தக்காளி என்ற அழைப்பார்கள். மிளகுபோல இருப்பதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள்.
Bot- Name- Solanum Nigrum

வறண்ட இடத்திலும் விளையும் இக்கீரை, நீருள்ள இடங்களிலும் ஏராளமாய் செழித்து வளரும். வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். இந்தக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன்கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது.

கசப்புத்தன்மை கொண்டது இக்கீரை. இதனால் பெரும்பாலோர் தொடுவதில்லை நீண்ட காலம் வாழ மிகவும் உதவும் கீரை என்பதை மறவாதீர்.
இக்கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவையே இதில் புரதம்,மாவுச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்துள்ளன. இக்கீரையைப் பருப்ப சேர்த்து கூட்டு. பொரியல், குழம்பு வைக்கலாம்.


மலமிளகுத் தானே மகா கபமும் போகும்
பல மிகுந்த வாதம்போம் பார்க்குள் - மலைபோற்
பணைத்துப்பூ ரித்தமுலைப் பாவாய்கேள்! நல்ல
மணத்தக்கா ளிக்காயை வாழ்த்து.

இன்னொரு பாடல்,

காய்க்கு கபந்தீருங் காரிகையே! அவ்விலைக்கு
வாய்கிரந்தி வேக்காடு மாறுங்கண்.           - (பதார்த்த குணசிந்தாமணி)

வாய்ப்புண், அச்சரம் மற்றும் கால்சியம் குறைபாடுகளுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. உடல் உறுப்புகளில் எங்கு புண் இருந்தாலும் ஆற்றும் வல்லமை இதற்கு உண்டு. இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டால் சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் முற்றிலும் குணமாகும்.

வாய்ப்புண் நாக்குப்புண் குணமாக:

கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்கவைத்துச் சாப்பிட்டால் வாய்ப்புண், நாக்குப்புண் போன்றவை குணமாகும்.

வாத நோய்:

மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும்

தொண்டைப்புண், வயிற்றுப்புண்:

ஒரு கைப்பிடி மணத்தக்கரிளக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

நீர்ச் சுருக்கு, நீர் எரிச்சல்:

ஒரு கைப்பிடி அளவு மணத்தாளிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞசள் ஆகியவற்றைச் சேர்ந்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்.

இளைத்த உடல் பருக:

மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து. அதைத் தேனோடு சேர்த்து சர்பத் போல் காய்ச்சிஈ தினமும் சாப்பிட்டு வந்தால் இளைந்த உடல் பருக்கும்.

100 கிராம் மணத்தக்காளிக் கீரையில் உள்ள சத்துக்கள்:


  • நீர்ச்சத்து - 82.1 கிராம்
  • புரதம் - 5.9 கிராம்
  • கொழுப்பு - 1.0 கிராம்
  • தாது உப்புகள் - 2.1 கிராம்
  • சர்க்கரைச்சத்து - 8.9 கிராம்
  • சுண்ணாம்புச்சத்து - 410 மிகி
  • பாஸ்பரஸ் - 70 மி;கி
  • இரும்பு - 20.5 மிகி
  • ரிபோஃபிளேவின் - 0.59 மி.கி
  • நியாசின் - 0.9 மி.கி
  • வைட்டமின் சி - 11 மி.கி

குளிர் ஜன்னி:

ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு மிளகு (10 எண்ணிக்கை), திப்பில் (3 எண்ணிக்கை), நான்கு சிட்டிகை மஞசள் ஆகியவற்றைச் சேர்ந்து விழுதாக அரைத்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால்ஈ சளி,இருமல் போன்ற கப நோய்கள் குணமாகும். குளிர் ஜன்னிக்கு அற்புதமான மருந்து இது

உடல் சூடு:

மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாற எடுத்து 30 மி.லி. அளவுக்குத் தினமும் மூன்னு வேளையும் சாப்பிட்டால், சிறுநீர் தாரளமாகப் பிரியும். பெருவயிறு, வாய்ப்புண், உடல் சூடு போன்றவை குணமாகும்.

இதய நோய்:

ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையோடு, பூண்டு (4பல்) நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.

இனிய குரல் வளம்:

மணத்தக்கரிளக் கீரையில் இருந்து சாறு எடுத்து அதில் அதிமதுரத்தை ஊறவைத்து உலர்த்தி தூள் செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வ்நதால் தொண்மைச் சதை குணமாகும். இனிய குரல் வளமும் உண்டாகும்.

உடல எடை, பெருவயிறு குறைய:

மணத்தக்காளிக் கீரையைச் (100 கிராம்) சுத்தம் செய்து, கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடு;த்து அதில் எலுமிச்சம் பழத்தைப் (பாதி அளவு) பிழிந்து, சின்ன வெங்காயத்தை (2) அரிந்துபோட்டு அரைத்துச் சாறு எடுக்கவும் இதைக் காரைல உணவுக்குப் பிறகு சாப்பிட்டால் உடல் எடை, பெருவயிற போன்றவை குறையும்.

காயின் குணங்கள்:


  • உடல் வலி தீரும்
  • களைப்பை அகற்றும்
  • உடலிலுள்ள நச்சுநீரை வெளியேற்றும்
  • வாந்தியைப் போக்கும்
  • இக்காயை வற்றலாக்கி வறுத்து உண்ணலாம்.

பழம் தரும் பயன்கள்:


  • காது வலியைப் போக்கும்
  • வயிற்றுப் பொருமலை தணிக்கும்
  • காய்ச்சலைப் போக்கும்
  • கருப்பப்பைக்கு வலிமை தரும்
  • பிரசவத்தை எளிமையாக்க உதவுகிறது

வேரின் பயன்கள்:

  •  மலச்சிக்கலைப் போக்கும்
  • இக்கீரையின் வேர், மூலிகை மருந்துகள் தயாரிக்க பெரும் பங்காற்றுகிறது

பொதுவாய் மணத்தக்காளிக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டுப் வந்தால் உடல் நலம் பெறுகிறது. எனவே இக்கீரையை அடிக்கடி பயன்படுத்துங்கள்.


No comments:

Post a Comment