Monday, November 4, 2013

காய்கறிகளின் மருத்துவம்: புண்களை ஆற்றும் பூசணிக்காய்

கிராமப்புறங்களில் மார்கழி மாதம் முழுவதும் அனைவரின் வீட்டு கோலங்களின் மீது தவறாமல இடம் பெறுவது இந்த பூசணிக் பூ. இதை வைத்து திரைப்பட கவிஞர்கள் பல பாடல்களை இயற்றியுள்ளனர். இதிலிருந்தே பூசணிக்காயின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளில் முக்கியமானதும், நமது உடலுக்கு பல வகைகளில் பயன்படக் கூடியதுமான பூசணிக்காய் பற்றி காணலாம்.

இரு வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் கொடி வகையைச் சார்ந்தது. கொடிகள் பூமியின் மீது நன்கு படர்நதது இருக்கும். இலை மற்றும் கொடிகளில் மெல்லிய ரோமங்கள் அடர்ந்து காணப்படும். இலைகள் பெரியதாக பிளவுபட்டு இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறங்களில் கண்களை கவரும் வண்ணம் பெரியதாக காணப்படும். இதன் காய்கள் சாம்பல் நிறத்தில் இருப்பதால் இதை சாம்பல் பூசணி எனவும் அழைப்பர்.

காய்கள் பார்ப்பதற்கு பரங்கிக்காய் போன்று தோற்றமளிக்கும். விதைகள் காய்களின் உட்புறம் காணப்படும்.

பூசணிச்செடியில் மருத்துவ குணமுடைய பகுதிகளாக கருதப்படுபவை அவற்றின் இலைகள் காய்கள் மற்றும் விதைகள்.

பூசணிக்காயின் பயன்கள்:


பூசணிக்காயின் குணம் குளிர்ச்சி. எனவே உடலில் உள்ள சூட்டை குறைத்து உடலை சமநிலையில் வைக்கும்.


சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பை நீக்கி நீர் நன்கு பிரிய உதவுகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் இதற்கு உண்டு.அதனால் நீரழிவு நோயாளிக்ள இதனை தாராளமாக உபயோகிக்கலாம்.

பருத்த உடல் இளைக்க விரும்புவர்களு;ககு பூசணி ஒரு நல்ல மருந்தாகும். தினமும் இதனை ஜீஸ் செய்து சாப்பிட பருத்த உடல் இளைக்கும்.

மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.

குழந்தைகளுக்கு வாரம் இருமுறை உணவில் பூசணியை குழம்பிலிட்டு கொடுத்து வர அறிவு வளர்ச்சி ஏற்படும்.

இரத்த சோகை நோயை நீக்கும். மேலும் இரத்தம் சுத்தமாக உதவும். சோர்வாக காணப்படுபவர்கள் தினமும் பூசணியை உணவில் சேர்த்து வர சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் திகழ்வார்கள். நாவறட்சி உள்ளவர்கள் பூசணியை பயன்படுத்தி வர நாவறட்சி நீங்கும்.

நரம்பு கோளாறுகளை நீக்கி நரம்புகளை வலுப்பெற வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

செரிமானம் தொல்லைகளை நீக்கி நன்கு பசியைத் தூண்டும் சக்தி இதற்கு உண்டு.

பூசணிக்காணை சாம்பாரிலிட்டோ, பொரியல் செய்தோ (அ) ஜீஸ் செய்தோ பயன்படுத்தி வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

இதய பலஹீனம் நீங்க:


இதய படபடப்பு மற்றும் இதய பலஹ{னம் கொண்டவர்கள். நன்கு பழுத்த பூசணியின் சதைப் பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி தினமும் முப்பது மி.லி பருகி வந்தால் இதயப லஹ{னம் நீங்கும்.


குடல் புழுக்கள் வெளிப்பட:


பூசணிக்காயின் சதைப்பகுதிகளை விதையுடன் சேர்த்து அரைத்து அதனுடன் தேய்காய் பால சேர்தது காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர குடல் புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.


மூலநோய் நீங்க:
மூல நோயால் அவதிப்படுபவர்கள், பூசணிணை தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியிலிட்டு சாறு பிழிந்து பொண்டு. அதில் இரண்டு தேக்கரண்டி சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்து பருகி வர மூலநோய் கட்டுப்படும்.

புற்றுநோய் தடுக்க:


புற்று நோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் பூசணியை ஜீஸ் செய்து காலை, மாலை உணவிற்கு முன் பயன்படுத்தி வர புற்றுநோயின் தாக்கம் குறையும். மேலும் புற்றுநோய் வராமல் தடுக்க வாரம் இருமுறை பூசணியை உணவில் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.


ஆண்மை பெருக:


உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுபவர்கள் தினமும் உணவில் பூசணியை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வர ஆடவர்களின் ஜீவ சத்தில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை பெருகும்.



இரத்த வாந்தி நிற்க:



சிலருக்க வாந்தியில் இரத்தம் கலந்து வெளிப்பட்டு மிகுந்த வேதனைக்கு உள்ளாவர். இவர்கள் பூசணியின் சதைப்பகுதியை மட்டும் எடுத்து நன்றாக வெய்யிலில் காய வைத்து இடித்து தூளாக்கி வைத்துக்கொண்டு.தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர இரத்த வாந்தி நிற்கும்.


வயிற்றுப் புண் நீங்க:


குடல் புண் மற்றும் வயிற்றுப் புண்களுக்க பூசணியை சாறு பிழிந்து ஒரு பங்கு சாறுடன், ஒரு பங்கு (சம அளவு) நீர் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப் புண்களை நீங்குவதுடன், வயிறு சம்மந்தமான அனைத்து உபாதைகளும் நீங்கி வயிறு சுத்தமாகும்.



No comments:

Post a Comment