Friday, October 4, 2013

அஞ்சறைப் பெட்டி - மருத்துவம் சீரகம்

  சீரகம் மருத்துவம் :

சீர் + அகம் ஸ்ரீ சீரகம். உள் உறுப்புகளின் சீரற்ற தன்மையை சரி செய்வதால் இதற்கு சீரகம் என்று பெயர் வந்தது. சீரகம் நம் சமையலில் மணம் சேர்க்கும் பொருளாக பண்டைக் காலத்திலிருந்து இருந்து வருகிறது. அறிவியல் அறிஞர்கள் சீரகத்தை ஆய்வு செய்ததில் பலன்தரத்தக்க செய்திகளை கூறியுள்ளனர்.
cumin

சீரகம் கணையத்தை தூண்டி சீரணத்திற்கு தேவையான நொதிகளை சுரக்கச் செய்கிறது. இந்த நொதிகள் சீரண உறுப்புகளை தூண்டி அதன் வேலையை செய்ய வைக்கிறது. இதனால் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் போக்கு, வயிறு உப்பிசம், தலைச்சுற்றல், மயக்கம்,வாந்தி போன்றவை வர விடாமல் தடுத்து விடுகிறது.

பசியைத் தூண்டிவிடக்கூடிய சக்தியை சீரகம் இருப்பதால் நிறைய ஆயுர்வேத சித்த மருந்துகளில் மிக முக்கிய இடம் பெறுகிறது.

நரம்பு பலத்திற்கும், உடல் அசதி தீருவதற்கும் சீரகம் பெரிதும் உதவுகிறது. உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியடைய வைக்கும் தன்மை சீரகத்திற்கு உண்டு.


100 கிராம் சீரகத்தில் காணப்படும் ஊட்டப் பொருட்கள்:


  • புரதச்சத்து - 17.7 கிராம்
  • கொழுப்புச்சத்து - 23.4 கிராம்
  • பொட்டாசியம் - 2.1 கிராம்
  • சுண்ணாம்புச்சத்து  - 0.9 கிராம்
  • பாஸ்பரஸ் - 0.5 கிராம்
  • சோடியம் - 0.2 கிராம்
  • இரும்புச்சத்து - 48.1 மி.கி
  • தயமின - 0.8 மி.கி
  • நியாசின் - 2.5 மி.கி
  • அஸ்கார்பிக் அமிலம் - 17.2 மி.கி
  • வைட்டமின் ஏ - 175 IU

சீரகத் தண்ணீர்:

குடிநீர் காய்ச்கும் போது சிறிது சீரகம் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளலாம். இந்த நீரை நாள் முழுவதும் அருந்துவதால் வாயுத்தொல்லைகள் தீரும். அஜீரணம் குணமாகும் நன்கு பசியெடுக்கும் உடல் லேசானது போல் இருக்கும்.

தலைச்சுற்றல் குணமாக:

 ஐந்து கிராம் சீரகத்தை வாயில் போட்முடு சுவைத்து பின் சிறிது வெந்நீர் அருந்தினால் தலைச்சுற்றலோடு கூடிய மயக்கம் குணமாகும். நன்கு மென்று சுவைத்து தண்ணீர் அருந்தினால் போதுமானது. இதனை தினமும் செய்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

கண் எரிச்சல் குறைய:

தேங்காயெண்ணெயை சிறிது சூடாக்கி அதில், சீரகம், மிளகு தட்டி போட்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை உச்சந்தலையில் நன்கு தேய்த்து தலைக்கு குளித்தால் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் ஆகியவை குறையும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு மாதவிடாய் முடிவில் ஆஸ்டியோபோராஸிஸ் ஒரு முக்கிய பிரச்சனை சீரகம் இந்த பிரச்சனையை வர விடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. சீரகத்தை நன்கு வறுத்து ஒரு டம்பளர் நீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து மாதவிடாய் காலங்களில் இளம் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு கொடுக்க வலி சிறிது நேரத்திலேயே குறைந்து விடும்.

பிரசவித்த பெண்களுக்கு சீரகம் அருமருந்தாகும். சீரகத்தை வறுக்கும் போது நறுமண எண்ணெய் வெளிவரும். அப்போது நீர் ஊற்றி கொதிக்க வைத்து, அந்த நீரை பிரசவித்த பெண்கள் பருகினால் தாய்ப்பால் பெருகும். கருப்பை அழற்சி மாறும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும. சீரகத்தை தேயிலைத் தூளுடன் கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணம் அடையும்.

வயிறு உப்புசம்:

சீரகம் சிறிதளவு, இஞ்சி ஒரு சிறு துண்டு இவற்றை நீர்மோரில் கலக்கி குடித்தால் வயிறு உப்புசம் குணமாகும்.

நச்சுக் கழிவுகள் வெளியேற:

எலுமிச்சை சாறில் இஞ்சி சிறது தட்டி போட வேண்டும். இந்தக் கலவையில் சீரகத்தை ஒரு நாள் ஊற விட வேண்டும் வின் இந்த கலவையை காலை மாலை இருவேளை மூன்று நாட்களுக்கு ஐந்து மி.லி. அளவு குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள நச்சுத் தன்மை உள்ள கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியமாக வைக்கிறது.

இரத்த அழுத்தம் குறைய:

திராட்சை சாறில் சிறிது சீரகம் போட்டு குடித்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும். மேலும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

மன அழுத்தம் குறைய:

 கீரையை கமைக்கும் போது சிறிய வெய்காயமும்,சீரகமும் போட்டு சமைத்து உண்டால் மன அழுத்தம் மாறும்.

சுறுசுறுப்பாக இயங்க:

சீரகம்,சுக்கு, தனியா சம அளவு எடுத்து இடித்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சூரணத்தை காலை மாலை இரு வேளை நீரில் கரைத்து சாப்பிட்டால் உடல் சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

கொழுப்பு கரைய:

தேவையற்ற கொழுப்பு உடல் எடையை கூட்டுகிறது. இதனைக் குறைக்க வெற்றிலை இரண்டு, மிளகு நான்கு சிறிது சீரகம் சேர்த்து மென்று சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.

கல்லீரல் நோய்கள்:

சீரகத்தை கீழாநெல்லியுடன் சேர்த்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்த்து கருகி வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

வாயுவோடு நாசிநோய் வன்பித்தஞ் சேராது
காயம் நெகிழாது கண்குளிருந் தூயமலர்க்
காரணகப் பெண்மயிலே கைகண்ட தித்தனையுஞ்
சீரகத்தை நீதினமுந் தின்                  - அகத்தியர் குணபாடல்

தினமும் சீரகத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் பித்த சம்பந்தமான நோய்கள் அகலும். கண் குளிர்ச்சி அடையும். வாயுத் தொல்லைகள் தீரும் என்பதை நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை நாம் மதித்து சீரகத்தை உணவில் சேர்த்து அதன் பலன்களை அனுபவிப்போம்.

No comments:

Post a Comment