Friday, October 4, 2013

வாத,பித்தம் குறைக்கும் மாதுளை பூ

பொதுவாக மாதுளை என்றால் எல்லோருக்கும் மாதுளம் பழம்தான் ஞாபகம் வரும். அந்த மாதுளைப் பழத்தில் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் இருப்பது போல் மாதுளை பூவிற்கும் மருத்துவக் குணங்கள் உண்டு.
மாதுளையை தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம், கழுமுள் என்ற பெயர்களில் அழைக்கினறனர்.
Punica granatum


 மாதுளைப் பழத்தைப் பற்றி முன்பே அறிந்தோம். மாதுளம் பூ பற்றி  இங்கு அறிந்துகொள்வோம்.


வாந்திபித்த தோடமொடு மாறாக் கடுப்பனலஞ்
சேர்ந்துநின்ற மூலரத்தந் தீர்க்குங்காண் - மாந்தளிர்க்கை
மாதே!யிரத்தபுஷ்டி வல்லபலன் உண்டாகும் 
பூதலத்துள் மாதுளையின் பூ  (அகத்தியர் குணபாடல்)

உடல் பலம் பெற:

சுவரில்லமல் சித்திரம் வரைய முடியாது என்ற பழமொழிக்கேற்ப, நல்ல ஆரோக்கியமான உடலிருந்தால்தான் நோயின்றி வாழ முடியும். இன்று பலர் சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப்படி ஏறினாலோ உடனே சோர்ந்து அமர்ந்துவிடுவர். எதெற்கெடுத்தாலும் வாகன் பயன்பாடு, மாடிகளில் ஏற லிப்ட் என மேலும் தங்களை சோம்பேறிகளாக்கிக் கொள்கின்றனர்.
இன்றைய உணவில் கொழுப்புச்சத்தும் எண்ணெய் சார்ந்த பொருட்களே அதிகம் உள்ளன. இதனால் உடல் நன்கு பருத்து காணப்படுமே ஒழிய உடலில் வலு இருக்காது. இவர்களால் அதிக நேரம் வேலை செய்யவோ, வேகமாக நடக்கவோ முடியாகு. இவர்கள் உடல் நன்கு பலப்பட மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வருவடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும்.

இரத்தம் சுத்தமடைய:

நமது உடலில் இரத்தம் அசுத்தமானால் உடலில் பலவகையான நோய்கள் ஏற்படவாய்ப்பாகிறமு. இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை கூட்டி, ஹீமோ குளோபின் அளவை சீர் செய்யவும் மாதுளம் பூ சிறந்த மருந்து, மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி    கஷாயம் செய்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும் உடலும் புத்துணர்வு பெறும்.இல்லையென்றால் காலையில் நான்கு மாதுளம் பூவைத் தின்று சிறிது பால் பருகவும் தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டுவல ரத்த சுத்தி கிடைக்கும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க:

அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் அபான வாயு சீற்றம் கொள்கிறது. இதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகிறது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது நல்லது.

பெண்களுக்கு:

மாதவிலக்கு நிற்கும் காலமான மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு அதிக மன உளைச்சல் உண்டாகும். கை, கால், இடுப்பு மூட்டுக்களில் வலி உண்டாகும். இவர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளைஞம் அருந்தி வந்தால் இப்பிரச்சனைகள் நீங்கும். அதுபோல வெள்ளைபடுதல் குணமாகும்.

கருப்பை வலுவடைய:

 கருப்பை நன்கு வருவடைய மாதுளம் ப+வை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும்.

தாது விருத்தியடைய:

இன்றைய உணவு மாறுபாட்டாலும், தீய பழக்கங்களாலும் சிலர் தாதுவை இழந்து மணமுடிக்க பயந்து வாழ்கின்றனர். இவர்கள் மாதுளை பூவை காயவைத்து பொடி செய்து அதனுடன் அருகம்புல் பொடி கலந்து தேனில் குழைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.

பசியைத் தூண்ட:

சிலருக்கு வயிற்றில் வாயுக்களின் சீற்றத்தால் சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போல் காணப்படும். பசி என்பதே இவர்களுக்கு தோன்றாது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் வாயுக்களின் சீற்றம் குறையும்.

வாத,பித்த அதிகரிப்பை குறைக்க:

மனித உடலின் முக்கிய செயல்பாட்டுக்கு காரணமாக இருப்பது வாத, பித்த கபமே. இவற்றில் ஏதேனும் ஒன்று மிகையாகும்போது உடலில் பல பாதிப்புகளை ஏற்படச் செய்கிறது. இந்த மிகையாகும் தன்மையைக் குறைத்து வாத, பித்த, கபத்தை அதன்தன் நிலையில் வைக்கும் குணம் மாதும் பூவிற்கு உண்டு. மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்டவை சமநிலைப்படும்.

மூக்கில் ரத்தம் வடிவம் குணமாக:

மாதுளம் பூவை லேசாகத் தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து அருந்தவும். 3 வேளை மருந்தில் சுகம் கிடைக்கும்.

பேதி நிற்க:

பூ உதிராக மாதுளம் பிஞ்சை அரைத்து தயிரில் கலக்கி உட்கொண்டு வந்தால் பேதி நிற்கும். 3 பிஞ்சுகள் எடுத்து அரைத்து 200 திராம் தயிரில் கலக்கி 2 வேளை உட்கொள்ள வேண்டும்.

தொண்டைக் கமறல், தொண்டையில் ரணம் இருந்தால்:

மாதுளம் பூக்களை நைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர்விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவும்.

நரம்பு வலிமைக்கு:

 மாதுளம் பூவை பசும்பாலில் வேக வைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். தாது பலம் பெறும்.

ரத்த வாந்தி குணமாக:

ஐந்து மாதுளம் பூக்களை எடுத்து நைந்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி காலை மாலை அரை டம்பளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி குணமாகும்.

சீதபேதி குணமடைய:
மாதுளம் பூ ஐந்து சேகரித்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து அரை டம்பளர் எருமைத் தயிரில் கலந்து காலை வேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வந்தால் சீதபேதி குணமாகும்.

ரத்த மூலம் குணமாக:

மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாச் சல்லடையில் சலித்து வாயகன்ற சீசாவில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை மாலை ஒரு தேக்கரண்டியளவுத்    தூளுடன் அதே அளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
மாதுளம் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்திருப்பீர்கள். அவற்றின் பயனைப் பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment