Saturday, October 26, 2013

தைராய்டு நீங்க சௌசௌ


நாம் உண்ணும் உணவில் சில காய்கறிகளை எப்பொழுதாவது தான் பயன்படுத்துவோம். அப்படி நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று சௌசௌ. இதன் பயன்பாடுகளைப் பற்றி இந்த இதழில் காண்போம்.

கொடி வகையைச் சார்ந்த சௌசௌ குளிர்மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதன் இலைகள் பெரியதாக பிளவுபட்டுக் காணப்படும். இளம் காய்கள் பௌர் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இதன் விதைகள் காய்களின் உட்புறம் இருக்கும். முற்றிய விகைகளை பயிரிட பயன்படுத்தலாம்.


100 கிராம் சௌசௌவில காணப்படும் ஊட்டப் பொருள்கள்:

வைட்டமின்கள் - ஏ, பி1, சி,கே
கார்போஸைட்ரேட் - 17.8 %
ஸ்டார்ச்                                -  10.7 %
போலேட் சத்து                   - 10.5 %
புரதச் சத்து                            - 5.4 %
சுண்ணாம்புச் சத்து             - 6.7 %
பாஸ்பரஸ்                            - 4.8%
மாங்கனீசு                              - 9 %
காப்பர்                                    - 6 %
ஜிங்க்                                      - 5 %
பொட்டாசியம்                    - 3 %
மக்னீசியம்                            - 4 %
நார்ச்சத்து                              - 1.4 %
இரும்புச்சத்து                      - 2.5 %

மருத்துவ குணமுடைய பகுதிகள்:


இலைகள், காய்கள் மற்றும் விதைகள் போன்றவற்றல் நோய் தீர்க்கும் மருந்துச் சத்துக்கள் காணப்படுகினறன.


சௌசௌவின் பொதுவான மருத்துவப் பயன்கள்:

  • அஜீரணக் கோளாறுகளினால் அவதிப்படுபவர்கள், சௌசௌவை அன்றாட உணவில் பயன்படுத்தி வர விரைவில் உணவு ஜீரணமாகும்.
  • சௌசௌ நீர்ச்சத்து மிக்க காய். ஆதலால் சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும். மேலும், சிறுநீர் சம்பந்தமான நோய்களிலிருந்தும் உடலை பாதுகாக்கும்.
  • உடல் வளம் பெற உண்ணும் உணவில் சௌசௌ அவசியமாகும். இதில் உள்ள வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.
  • நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
  • வயிறு சம்மந்தமான நோய்களை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
  • உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைக்கும்.
  • மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை உண்ணும் உணவில் இதை பயன்படுத்தி வர மலச்சிக்கல் நீங்கும்.
  • பெருங்குடல் மற்றும் சிறுகுடல் சம்மந்தமான நோய்களை நீக்கி குடல் பாதைகளை சுத்தப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.


சௌசௌ பயன்படுத்துவதால் தீரும் நோய்கள்:


உண்ணும் உணவில் சௌசௌவை பொரியல் செய்தோ, குழம்பிலிட்டோ அல்லர் மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சூப் செய்தோ சாப்பிட்டு வர பல்வேறு நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.


கர்ப்பிணிகளுக்கு:


கர்ப்பிணிகளுக்கு கை, கால்களில் வீக்கம் காணப்படும். இவர்கள் நீர்ச்சத்து மிகுந்த காயான சௌசௌவை பயன்படுத்தி வர வீக்கங்கள் குறையும். மேலும், இதில் காணப்படும் அபரிதமான சத்துக்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையை பல்வேறு நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.


முகச்சுரக்கம் நீங்க:


சிலருக்கு சிறுவயதிலேயே முகங்களில் சுருக்கம விழுந்து காணப்படும் இவர்கள் சௌசௌவை உணவில் தாராளமாக பயன்படுத்தி வர முகத்திலுள்ள சுரக்கம் நீங்கி முகம் பளபளப்பாகும்.



புற்றுநொய் தடுக்க:



சேளசௌவில் காணப்படும் வைட்டமினகள் புற்றுநொய் தடுப்பியாக செய்ல்படுகினறன என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, உண்ணும் உணவல இதை தாராளமாக பயன்படுத்தி வல புற்றுநொய் வராமல் உடலை பாதுகாக்கலாம்.


கரும்புள்ளிகள் நீங்க:


சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் தோன்றி முக அழகைக் கெடுக்கும். இவர்கள் சௌசௌஈ கேரட் மற்றும் பீட்ரூட் போன்றவற்றை மிக்ஸியிலிட்டு தண்ணீ;ர் விடாமல் அரைத்து முகத்தில் பூசி வர முகத்திலுள்ள பருக்கள் கரும்புள்ளிகள் மறையும்.


தைராய்டு நீங்க:


சௌசௌவில் காணப்படும் காப்பர், மக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் தைராய்டு நோயால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உண்ணும் உணவில் பயன்படுத்p வர நல்ல பலன் கிடைக்கும்.


எலும்புகள் வலுப்பெற:


சௌசௌவில் காணப்படும் கால்சியம் மற்றும் வைட்டமின்-கே போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுப்பெறச் செய்யும். எனவே குழந்தைகள் உண்ணும் உணவுடன் இக்காயை சேர்த்து பயன்படுத்தி வர எலும்பு சம்மந்தமான நோய்களிலிருந்து குழந்தைகளை காக்கும். மேலும், குழந்தைகளை சுறுசுறுப்புடன் இயங்கச் செய்யும்.


உடல் பருமன் குறைய:


உடல் பருமனால அவதிப்படுவர்கள் சௌசௌவை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ உண்ணும் உணவில் அளவை குறைத்து மதிய வேளையில் பயன்படுத்தி வலராம். இதில் காணப்படும் பொட்டாசியம் சத்து தேவையற்ற சதையை கரைத்து உடலை கட்டுக் கோப்பாக மாற்றும். மேலும், சோர்வை நீக்கி சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.


கொழுப்ப குறைய:


வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் அதிக கொழுப்பு சேர்த்து அவதிப்படுவர்களுக்கு சௌசௌ சூப் நல்ல பலன் கொடுக்கும். சேளசௌவை நன்றாக வேகவைத்து சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்ப சேர்த்து சூப் செய்து காலை மற்றும் மாலை வேளையில் உணவிற்கு முன் சாப்பிட்டு வர தேவையற்ற இடங்களில் காணப்படும் கொழுப்பு கரையும்.




No comments:

Post a Comment