Saturday, October 26, 2013

பல்வகைப் பொருள்களின் மருத்துவ குணங்கள்



  • தங்கத்தில் நெருப்பில் ஆழமாக வைத்து பல தடவை நீரில் அமிழ்த்தி அந்த நீரைப் பருகினால் வெகு நாட்களாக உள்ள அஜீரணம் குணமாகும்.
  • விளாம்பூ, எலி கடித்த விஷத்தைப் போக்கும். இலுப்பைப் பூ குளிர்ச்சியுடையது: காமத்தைப் பெருக்கும்
  • நன்கு பழுத்த மாம்பழத்தில் சாறெடுத்து ஒரு தட்டில் வைத்து நன்றாகக் காய வைத்து சாப்பிட்டால் தாகம், வாந்தி, வாதம், பித்தம் ஆகியவற்றைப் போக்கும்
  • வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் சிறுநீர் அடைப்பு வலியை அகற்றும். ஏராளமான சிறுநீர் கொடுக்கும். பித்தம், வாந்தி, எரிச்சல், ரத்த நோய் ஆகியவை குணமாகும்.
  • சிறிய ஆல விழுது அல்லது செம்பருத்திப்பூ இவைகளை நன்றாக வெயிலில் சருகு போல காயவைத்து பிறகு தேங்காய் எண்ணெயில் போட்டு தினமும் காலையில் குளித்த பிறகு இந்த எண்ணெயைத் தேய்த்தால் முடி கருப்பாகவும் நன்றாகவும் வளரும்.
  • ஆவாரஞ்செடியின் இலையை நன்றாக அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து சொறி, சிரங்கு இருக்கும் இடத்தில் நன்றாகத் தேய்த்துக் குளித்தால் மூன்றே நாட்களில் குணம் அடையலாம்.
  • கோழிக்குஞ்சுக்கு அடிப்பட்டு காயம் ஏற்பட்டாலும், கால் முறிந்தாலும் மஞசள் தூளில் சிறிது நீர் விட்டு குழப்பி காயம் ஏற்பட்ட இடத்தில் வைத்து துணியால் கட்டினால் குணமடையும்.
  • சிறிது கடுகு, சிறிது சாம்பிராணி இவைகளை சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து நெற்றியில் பற்ற போட்டால் தலைவலி உடனே நின்றுவிடும்.
  • பருமன் குறைப்பதற்கு நர்ர மலைத்தேனில் சம அளவு தண்ணீர் கலந்து சில நாட்கள் குடிக்க வேண்டும்.
  • நாவில் சுவையின்மைக்க இஞ்சி நீரும்,எலுமிச்சை நீருடன் உப்பும் சேர்த்து சிறிது நாள் அருந்த வேண்டும்.
  • பசியின்மைக்கு இஞ்சிச் சாறில் தேன் சேர்த்து சில நாட்கள் குடிக்க வேண்டும்.
  • இருமல் நீங்க எலுமிச்சை சாறில் தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும்.
  • தலைவலிக்கு சுக்கும் நல்ல மிளகையும் அரைத்து நெற்றியில் பூசினால் குணமடையும்
  • ஆஸ்துமா நோய்க்கு ஆடாதொடா இலையை அரைத்து ஆட்டுப்பாலில் சேர்த்துக் குடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment