Saturday, October 26, 2013

விந்துவின் வீரிய சக்திக்கு வெந்தயம்


நாம் அனைவரும் அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருள் வெந்தயம் வெந்தயத்தின் இலைகளை தான் வெந்தயக் கீரை இவை இரண்டுமே சிறிது கசப்பு சுவை கொண்டவை. மேலும், சமையலில் வாசனையை அதிகப் படுத்துவதற்காக வெந்தயத்தை நாம் உபயோகிக்கிறோம். அனைத்து வகையான கார குழம்புகளிலும், காய்கறி பொரியல்களிலும் மற்றும் இட்லி, தோசை மாவு அரைக்க ஊற வைக்கும் அரிசி மற்றும் உளுந்தில் வெந்தயத்தை சேர்க்கிறோம்.


அடங்கியுள்ள சத்துக்கள்:


  • வெந்தய விதையில் 
  • புரதச்சத்து
  • சுண்ணாம்புச் சத்து
  • பாஸ்பரஸ்
  • பொட்டாசியம்
  • சோடியம்
  • இரும்புச் சத்து
  • வைட்டமின் ஏ
  • தையாமின்
  • ரிபோபிளேவின்
  • நிக்கோடினிக் அமிலம்

ஆகிய சத்துப் பொருட்கள் கணிசமாக அடங்கியுள்ளன.

பயன்கள்:


வெந்தயச் செடியின் பூக்கள் தோன்றுவதற்கு முன்னர் செடியைப் பிடுங்கி எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து வெந்தயக் கீரையாகப் பயன்படுத்தலாம்.

வெந்தய விதையின் பயன்கள் பல உள்ளன. அன்றாட சமையலில் தாளிதப் பொருளாகப் பயன்படுவதோடு. மாசாலாப் பொடிகள், மாசாலா கூழ் தயாரிப்பில் பிற வாசனைப் பொருட்களுடன் வெந்தயம் ஒருமுக்கிய அங்கமாகப் பயன்படுகிறது. ஊறுகாய் வகைகளுக்கு சுவை கூட்டுகிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு அதிகம் பால் ஊற செய்கிறது. உடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. மலமிளக்கியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது. கல்லீரல் நோய்களைப் போக்கும் நீரிழிவு நோய்க்கு கண்கண்ட மருந்து குடல் சம்பந்தமான நோய்களுக்கு நல்மருந்தாகும்.

முக்கிய மருத்துவப் பயன்கள்:


நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்:



வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது.


தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய றிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

இருதயத்திற்கு உகந்த வெந்தயம்:


வெந்தயத்தில் என்ற வேதிப்பொருள் உள்ளதால் இருதய நோய் வருவதை தடுக்கிறது.வெந்தயத்தில் தேவையான பொட்டாசியம் இருப்பதால் இரத்தத்தையும் இருதய துடிப்யும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை இரத்தில் குறைக்கிறது.


வயிற்றை குளிர வைக்கும் வெந்தயம்:  


வெந்தயம் நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போக்குகிறது. வெந்தயத்தில் அரஉடையபந எனும் மழமழப்பு திரவம் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் சுவர் போல் செயல்படுவதால் வயிறு, குடல் புண்கள் எளிதில் குணமாகிறது. இதற்கு ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தை எடுத்து ஊறு வைத்து பின் உபயோகிக்க வேண்டும். ஆப்படி உபயோகிக்கும் போது ஆரஉடையபந நன்கு வேலை செய்கிறது.


இரத்த உற்பத்திக்கு வெந்தயம்:



இரத்த சோகை உள்ளவர்கள் வெந்தயம் உபயோகித்தால் அதிலிருந்து விடுபடலாம். இரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டிவிடுகிறது. வெந்தயத்தை முளைக்க வைத்து உபயோகப்படுத்தலாம்.


முகப்பொலிவிற்கு வெந்தயம்:

வெந்தயம் முகப் பொலிவை மெருகேற்றுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றை வெந்தயம் கலந்த முகப்பூச்சுகள் நீக்குகின்றன. வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் தடவ முகம் பளபளக்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கு வெந்தயம்:          



வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் அரைத்து தரைமுடியின் அடிக்கால்களில் தடவி அரை மணிநேரம் வைக்க வேண்டும். பின் குளிக்க வேண்டும். இதனால் பொடுகு குறையும். முடி உதிர்வது நிற்கும். தலைமுடி அடர்ந்து வளரும்.


பெண்களுக்க உதவும் வெந்தயம்:


வெந்தயம் = வெந்த +அயம்.அயம் என்றால் இரும்புச்சத்து. சுலபமாக சீரணிக்கத்தக்க இரும்புச்சத்து வெந்தயத்தில் உள்ளது இதில்Diosgenin மற்றும் Ispflavones என்ற வேதிப்பொருட்கள் ஈஸ்ட்ரோஜன் போன்று செயல்படக்கூடிய தன்மை கொண்டது. இதனால் மாதவிலக்கு ஏற்படும் முன் உண்டாகக் கூடிய உடல் கனம், வயிற்று பிடிப்பு, உடல் உபாதைகள் அனைத்தும் குறைகிறது.


மாதவிடாய நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகல் அனைத்திற்கும் வெந்தயம் நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படும் இரும்புச்சத்து கோளாறை வெந்தயம் போக்குகிறது.

பாலூட்டும் தாய்மார்களின் பால் சுரப்பத் தன்மையை வெந்தயம் அதிகப்படுத்துகிறது. இதற்கு வெந்தயத்தில் உள்ள Diosgenin என்ற வேதிப்பொருளே காரணம், என்று அறிஞர்கள் ஆராய்ந்து கூறுகிறார்கள்.

மார்பக வளர்ச்சிக்க வெந்தயம் உதவுகிறது.வெ ந்தயத்தில் உள்ள Phytoestrogens மார்பக திசுக்களின் பெருக்கத்திற்கு உதவுகிறது. இதனால் மார்பகங்கள் சரியான வளர்ச்சியை பெறுகின்றன. அது தவிர பெண்களின் ஹார்மோன்களின் செயல்பாட்மைட தூண்டி விடும் தன்மையை பெற்றுள்ளதால் மாதவிடாய் சுழற்சி சரியான முறையில் நடைபெற உதவுகிறது.

மேலும் சில பயன்கள்

  • குழந்தை பெற்ற தாய்மார்கள் வெந்தயத்துடன் கருப்பட்டி சேர்த்து களி செய்து சாப்பிட்டுவர, தாய்ப்பால் அதிகம் ஊறும். குழந்தை கொழு கொழு கொழுவென வளரும்.
  • சிறிது வெந்தயத்தை மென்று தின்று இரண்டு சின்ன வெங்காயத்தை மோரில் அரிந்திட்டு சாப்பிட்டு வர பருமனான உடல் எடை குறையும்.
  • கொஞ்சம் வெந்தயத்துடன் இரண்டு வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
  • வெந்தயத்தை எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து மையமாக அரைத்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டுவர கல்லீரல் கோளாறுக்ள தீரும்
  • வெட்டிவேர், வெந்தயம், சீரகம் சேர்த்துக் கஷாயம் செய்து ஆறியதும் குடித்துவர சிறுநீர் தாராளமாகப் பிரியும்
  • கோடை காலத்தில் கடுமையான வெம்மை தாக்காதிருக்க காலையில் சிறிது வெந்தயத்தை மென்ற தின்று. ஒரு டம்ளர் நீராகாரம் பருகி வர வேண்டும். உடலை நன்கு குளிர்ச்சி அடையச் செய்யும் குணம் வெந்தயத்திற்கு உண்டு.
  • வெந்தயத்தை ஊற வைத்து. மையாக அரைத்து தீக்காயத்தின் மீது பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
  • ஒரு துண்டு இஞ்சியுடன் கொஞ்சம் வெந்தயம் வைத்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
  • வெந்தயத்தில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த விருத்தி ஏற்படும்.
  • உணவில் வெந்தயம் அடிக்கடி சேர்தது வந்தால் மலச்சிக்கல் வராது.
  • செவ்வாழைப் பழத்துடன் சிறிது வெந்தயம் சேர்த்து உண்டால் சீதபேதி குணமாகும்
  • ஒரு டம்ளர் மோரில் சிறிது வெந்தயம், சீரகம் பொடித்திட்டு குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.


No comments:

Post a Comment