Monday, May 11, 2015

டெங்கு காய்ச்சல் குணப்படுத்தும் பப்பாளி இலை

                       டெங்கு காய்ச்சல் குணப்படுத்தும்  பப்பாளி இலை


தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் இன்றைக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே இது பரவிக்கொண்டுதான் இருக்கிறது. சித்த மருத்துவத்தில் நிலவேம்புக் கஷாயமும் ஆடாதொடை நீரும் இதைக் குணப்படுத்துவதாகப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது இந்த மருத்துவத்தில் நிலவேம்புக் கஷாயமும் ஆடாதொடை நீரும் இதைக் குணப்படுத்துவதாகப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது இந்த மருத்துவத்தில் பப்பாளியும் சேர்ந்துள்ளது.


     பப்பாளி இலையில் இருக்கின்ற ஒரு வகை வேதிப்பொருள் டெங்கு கிருமிகளை அழிப்பதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  டெங்கு எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இது வருகிறது. இக்கிருமித் தொற்றுள்ள  எனும் கொசுக்கள் மக்களைக் கடிக்கும்போது டெங்கு பரவுகிறது.

   கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கி விடும். ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, வாந்தி, களைப்பு, இருமல்,தொண்டைவலி ஆகிய மிதமான அறி குறிகள் மட்டுமே காணப்படும். நோய் வந்த நான்காம் நாளில் மூட்டுவலி அதிகமாகும். எலும்புகளை முறித்துப் போட்டது போல் எல்லா மூட்களிலும் வலி அதிகரிப்பது அந்த நோயின் முக்கிய அறிகுறி.

    பொதுவாக டெங்கு காய்ச்சல் 7 நாளில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டுமே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்து தட்டணுக்கள் தான் ரத்தம உறைவதற்கு மிக முக்கியக் காரணம். டெங்கு வைரஸ் இந்த தட்டணுக்களை அழித்து விடுகிறது. இதன் விளைவால் பல் ஈறு மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகும். ரத்தவாந்தி எடுப்பது மலத்திலும் சிறுநீரிலும் ரத்தம் கலந்து வருவது, எலும்புமூட்டுகளில் ரத்தம் சேர்ந்து வீங்கிக் கொள்வது ஆகிய ஆபத்து மிகுந்த அறிகுறிகளும் உண்டாகலாம். இதனால் உடலில் ஓர் அதிர்ச்சி நிலை உருவாகி உயிரிழப்பும் ஏற்படலாம்.

   இந்தக் காய்ச்சலுக்கு பப்பாளி இலைச்சாறு நல்ல பலன் தருகிறது என்று மலேசியா,இலங்கை போன்ற வெளிநாடுகளில் ஏற்கனவே கண்டுபிடித்திருக்கிறார்கள். இச்சாற்றைப் பயன்படுத்தி டெங்குவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

    இச்சாறு ரத்தத் தட்டணுக்களின் எணணிககையை அதிகரிப்பதால்,இதைக் குடித்த நோயாளிகளுக்கு ரத்தம் இழப்பும், அதன் பலனாக உயிரிழப்பும் ஏற்படுவதில்லை என்பதுதான் இதற்குக் காரணம். இப்போது இதற்கும் மேலாக இந்தச் சாற்றில் உள்ள ஒரு வேதிப்பொருள் டெங்கு கிருமியையே அழித்துவிடுகிறது.

    பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர்தாமரை குணமாகும். பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும் பழமானது மூலநோய்க்கும் பயன்படுகிறது.

    பப்பாளியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்நாக்கு வளர்ச்சியை குறைக்கிறது. பப்பாளிப் பழத்தின் இலையில் புற்று நோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

     மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது

  பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோயின் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது. புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்;டும். பப்பாளி இலைச் சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கிறது.

   கல்லீரல் பாதிப்பு நீங்கி சீராக செயல்பட செய்கிறது. பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தால் உடலில் உள்ள நோயை தடுக்கவும் முடிகிறது. பப்பாளி இலையில் வைட்டமின் ஏ,இ, பி, ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பப்பாளி இலைச்சாறு வீட்டில் தயாரிக்கப்படும் பாரம்பரிய மருந்தாகும்.

No comments:

Post a Comment