Monday, May 11, 2015

சொறி, சிரங்கு குணமாக குப்பைமேனி கீரை

 சொறி, சிரங்கு குணமாக குப்பைமேனி கீரை


குப்பைமேனி கீரை மலம் இளக்கியாகும். சொறி, சிரங்கு,உடல் அரிப்புக்கு மேற்ச்சாகவும் பயன்படுகிறது. இலைச் சாறு பாம்புக்கடி நச்சினை முறிக்கவும் பயன்படுகிறது. நெஞ்சுச் சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது. இதன் வேர் பேதி மருந்துத் தயாரிப்பில் பயன்படுகிறது. குப்பைமேனி இலையால் பல்நோய்,தீச்சுட்டப் புண் பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, மூலம், நமைச்சல், குத்தல்,இரைப்பு, மூக்குநீர் பாய்தல்,கோழை போன்றவை தீரும்.

குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து ½ ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

    உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து அருவருப்பாக உள்ளதா? கவலை வேண்டாம். குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து,விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் பசி வந்தால் ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும். குப்பை மேனி இலையை அரைத்து கடிவாயில் பத்து போட எலிக் கடியின் விஷம் குறையும் ஒன்பது குப்பை மேனி இலையுடன் 6 மிளகை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின் பசும்பாலைக் குடிக்கவும். இதனை 3 நாட்கள் செய்து உப்பில்லா பத்தியம் இருக்க யானைக்கால் சுரம் குணமாகும். 

    குப்பைமேனி இலைச் சாற்றை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர சுவாசக் கோளாறுகள் குணமாகும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து சிரங்குகள் மீது இலையை அரைத்துப் பூசி வர விஷம் முறியும். இலையை கஷாயம் செய்து குடித்தால் மலச் சிக்கல் அகலும். வேருடன் குப்பை மேனிச் செடியைப் பிடிங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி சுக்கு,வெள்ளை பூண்டு, சீரகம் சேர்த்துக் கஷாயம் செய்து பருகிவர குடலிலுள்ள தீமை தரும் பூச்சிகள் அழியும். குப்பை மேனி இலையுடன் மஞ்சள்,வெள்ளைப் பண்டு சேர்த்து விழுதாக அரைத்து முகப்பரு, கரும் புள்ளிகள் மீது தடவி வர சருமம் முன்பு இருந்த இயல்பானதாக இயல்பு நிலைக்கு வந்துவிடும். குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்திர் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும். குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசி  செய்தால் முகம் அழகு கொடுக்கும்.

     குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி சிரங்கு படை குணமடையும். எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும். மேனி மீண்டும் எழிலோடு விளங்கும். சுவாச நோய்கள் குணமாக குப்பைமேனி இலைச்சாற்றை வடிகட்டி 4 தேக்கரண்டி வீதம் 7 நாட்கள் கொடுத்து வரலாம். 

படுக்கைப்புண் - ஆமணக்கு எண்ணையில் குப்பைமேனி இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்துக்கட்டினால் படுக்கைப்புண்கள குணமாகும். 
குப்பைமேனி இலையை மென்மையாக அரைத்து புண் காயங்களின் மேல் வைத்துக்கட்டினால் எந்த புண்ணும் குணமாகும். கூட மஞ்சளும் சேர்த்துக் கொள்ளலாம். வாய்வு அஜிரணம் வயிற்று வலிக்கு குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக்கரைத்து அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்ச வேண்டும். உப்பு பூர்த்து மிகுந்து விடும் இந்த உப்பை 5 கிராம் அளவில் தினசரி இரு வேளை சாப்பிட்டு வர வயிற்று-வாய்வு கோளாறுகள் நீங்கும். 

தலைவலி - இந்த செடியின் இலையை பொடி செய்து மூக்கில் போடி இருக்க நீர் வடிந்து தலைவலி குணமாகும். ஆயர்வேதத்தில் இதை நசியமிடுதல் என்பார்கள். 

சர்ம நோய்களுக்கு-இலை உப்பு மஞ்சள் மூன்றையும் சேர்த்து அரைத்து சொறி,சிரங்களுக்கு பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர குணமாகும்.


No comments:

Post a Comment