Thursday, March 5, 2015

மக்காச்சோள அல்வா

மக்காச்சோள அல்வா



தேவையான பொருட்கள்:

  • மக்காச்சோளம் - 1 கப் (2 கதிர்)
  • சர்க்கரை                 - 1 கப்
  • சுவிட் பால்கோவா         - 1 கப்
  • நெய்                 - தேவையான அளவு
  • பால்                 - தேவையான அளவு
  • ஏலக்காய் தூள்                 - சிறிதளவு


செய்முறை:-

மக்காச்சோளத்தை வேகவைத்து பால் சேர்த்து நொறநொறப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்பு வாணலை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி நெய் சூடானதும் அரைத்த மக்காச்சோளக்கலவையை சேர்த்து கிளறவும். அடுப்பை சிமில் வைத்துக் கிளறவும். அதன்பின் சர்க்கரையை சேர்த்து கிளறவும். சிறிது நேரம் கழித்து சுவிட் பால்கோவாவை சேர்த்து கிளறவும். கடாய் அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.அல்வா பதத்திற்கு வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கிவிடபும். சுவையான மக்காச்சோள அல்வா தயார்.

No comments:

Post a Comment