Tuesday, December 23, 2014

கோவாக்காய் ப்ரை

கோவாக்காய் ப்ரை


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாட உணவில் கோவக்காய் ப்ரை சேர்த்து வர நல்ல பலன் உண்டு. ஆனால் நீங்கள் என்னை கேட்கலாம் எண்ணெய் நிறைய ப்ரை பண்ண தேவைப்படும் எப்படி என்று கவலைப்பட வேண்டாம். எண்ணெயை பொரியலுக்கு செய்ய எடுத்துக்கொள்வது போல் எடுத்துக்கொள்ளலாம், அப்படியில்லையா நாண் ஸ்டிக் டவா உபயோகப்படுத்தலாம். 


தேவையான பொருட்கள்:

  • கோவக்காய் - 1கப்
  • வெங்காயம் - பெரியதாக ஒன்று
  • தனியாதூள் - 2 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
  • சோம்பு         - சிறிதளவு
  • கருவேப்பிலை - தேவையான அளவு
  • புளி கரைசல் - நெல்லிக்காய் அளவு
  • உப்பு         - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவைக்கு


செய்முறை:-

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு அதனுடன் நறுக்கிய கோவக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள். கொஞ்சம் தண்ணீர் தெளித்து நன்றாக வதக்கவும்.

கோவக்காய் நன்றாக சுருங்கி வரும் பொழுது புளி கரைசல் ஊற்றி நன்றாக வதக்கி விட்டு இறக்கவும்.

இதை தயிர் சாதம், சாம்பார் சாதம், ரச சாதத்துடன் சாப்பிட அருதையாக இருக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது ட்ரை பண்ணி பாருங்கள். 

குறிப்பு: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் சாப்பிடனும் என்று இல்லை. அனைவரும் வாராத்தில் இரண்டு நாள் எடுத்துக்கொள்ளலாம்.


No comments:

Post a Comment