Tuesday, December 23, 2014

நெல்லியின் மூலம் குணமடையும் நோய்கள்

நெல்லியின் மூலம் குணமடையும் நோய்கள்



நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ மூலிகைகளில் மிக எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதுமான நெல்லி கடலை கடைந்து எடுத்த அமிர்தத்திற்கு ஒப்பானது நெல்லிக்காய். இதனை  பகல் பொழுதி;ல் உண்டால் கீழ் கண்ட நோய்கள் அகலும். கபம் சம்பந்தப்பட்ட சளித் தொல்லைகள்,புரையழற்சி, வாயில் அபரிமிதமாக ஏற்படும் உமிழ்நீர் சுரப்பு, தலை சுற்றல், மயக்கம், மலச்சிக்கல், பித்த அதிகரிப்பான பயித்தியம் ஆகிய நோய்கள் அகலும். நெல்லிக்காயை உண்பதால் அழகு உண்டாகும்  அதனுடைய புளிப்பு சுவை வாயுத் தொல்லையை போக்குகிறது. அதனுடைய துவர்ப்பு கபத்தை நீக்குகிறது.


நெல்லி மர வகையை சார்ந்தது. அரு நெல்லி, கரு நெல்லி என இரு வேறு பிரிவுகள் உள்ளன. கரு நெல்லியின் தாவரவியல் பெயர்    Emblica Officinalis
நெல்லிக்கனி வெண் மஞ்சள் நிறமாய் இருக்கும். உலர்ந்த பின் நெல்லி வற்றல் என்று அழைக்கிறோம். இதற்கு மணம் கிடையாது. புளிப்பு, துவர்ப்பு துவைகளை உடையது. நெல்லியில் அதிக அளவு வைட்டமின “சி” உள்ளது. பறித்த நெல்லிக்காயில் 100 கிராமிற்கு 600-700 மி.கி அளவு வைட்டமின் “சி” உள்ளது.

நெல்லியின் மூலம் குணமடையும் நோய்கள் பற்றி காண்போம்.

நுரையீரல் நோய்கள்:

நெல்லிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கோழையை அகற்றும் செய்கையை தூண்டி கோழையை நுரையீரலின் நுண் குழாய்களிலிருந்து அகற்றி விடுகிறது. இதனுடைய இந்த பண்பினால் சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகளில் நுரையீரல் நோய்களுக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. சளி, இருமல், போன்றவை உடனடியாக இந்த மருந்துகளால் குணமாகிறது. பக்க விளைவுகள் இல்லாதர்.

அஜீரண நோய்கள்:-

நெல்லிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் நாவின் சுவையின்மை, அஜீரணம் ஆகியவற்றை போக்கும். நெல்லிக்காய் 10 வது கபால நரம்பான வேகஸ் நரம்மை தூண்டுகிறது. இதனால் சரியான அளவில் ஜீரண நொதிகள் சுரக்கச் செய்கிறது. இது அஜீரணத்தை போக்குகிறது. மேலும் சுவையின்மையை சரி செய்கிறது.

மலச்சிக்கல்:

நெல்லிக்காயில் பெக்டின் எனும் கார்போஹைட்ரேட் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் இரண்டுத் நார்ச்சத்து அதிகப்படுத்துகிறது. மேலும் செரடோனின் எனும் வேதிப் பொருள் இதிலிருந்து உருவாகிறது. அதனுடைய செய்கையால் சிறுகுடலில் நடைபெறும் தசைச் சுருக்க விரிவுகளின் வேகம் அதிகப்படுகிறது. இந்த செய்கையின் மூலம் மலம் இலகுவாக கழிகிறது. நெல்லிக்காயுடன், கடுக்காயும் சேர்த்து உண்ணும் போது நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது.

உடல் வன்மை மற்றும் அழகு பெற:

நெல்லிக்காய் உடலுக்கு பலத்தை கொடுப்பதோடு அழகையும் அதிகப்படுத்துகிறது. உடலுக்கு தேவையான நியூக்ளியோ புரதத்தை நெல்லிக்காயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் உண்டாக்குகிறது. இது உடலில் சாதாரண செல்கள் நன்கு வளர உதவுகிறது. இதனால் உடல் வலிமை பெற்று அழகாகிறது.

இருதய நோய்:-

நெல்லிக்காயில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது இதய தசைகளின் சுருங்கி விரியும் திறனை அதிகப்படுத்துகிறது. இதனால் இதய தசைகள் வலுப்பெறுகின்றன. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டு வந்தால் இதயம் வலுப்பெற்று நோய்கள் வராமல் தடுக்கலாம்.

சொறி, சிரங்கு நீங்க:-

நெல்லிக்கனியை உலர்த்திப் பொடி செய்து பச்சைப் பயிறு மாவுடன் பயன்படுத்தி வர சொறி, சிரங்கு குணமாகும். 

குடற்புண் ஆற:-

நெல்லிக்காய்க்கு குடற்புண்ணை ஆற்றும் தன்மை உண்டு. தினமும் காலையில் புளிப்பில்லாத மோரில் நெல்லிக்காயை தொடர்ந்து 45 முதல் 90 நாட்கள் உண்டு வந்தால் குடற்புண்கள் குணமாகும்.

இரத்த சோகை நீங்க:-

இரத்த சிவப்பு அணுக்களின் முதிர்ச்சிக்கு தேவையான சத்து நெல்லிக்காயில் உள்ளது. இது உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது.

முடிச்சாயம்:-

நெல்லிக்காய்ச் சாற்றில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால் முடிச்சாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தலையில் இதனை தேய்ப்பதால் கண்ணுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு கண் தெளிவடைகிறது. தலைக்கு தேய்க்கும் தைல வகைகளில் நெல்லிச்சாறு சேர்க்கப்படுகிறது. இது நரை ஏற்படாமல் தடுக்கிறது. முடி உதிர்வதையும் குறைக்கிறது. முடிக்கு கருமை நிறத்தை கொடுக்கிறது.

ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின “சி”யைப் போல் இருபது மடங்கு சத்து நெல்லிக்காயில் உள்ளது. நெல்லியின் மருத்துவப் பலன்கள் பலவும் தற்போது ஆயவுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆதனால் மருத்துவ நோக்கத்தோடு நெல்லியை பயன்படுத்தி அதன் பலன்களை அனைவரும் பெறுவோம்

No comments:

Post a Comment