Tuesday, December 23, 2014

மீல் மேக்கர் கிரேவி

மீல் மேக்கர் கிரேவி


ஹாய் அன்பு தோழிகளே நீங்கள் சைவ ப்ரியர்களா இதோ உங்களுக்கா மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.



தேவையான பொருட்கள்:

  • மீல் மேக்கர்                   - 20 (எண்ணிக்கையில்) (சிறயதாக இருந்தால் 20 அல்லது பெரியதாக இருந்தால் 15 எடுத்துக்கொள்ளவும்)
  • சின்ன வெங்காயம்      - 15
  • தக்காளி                          - 2
  • தேங்காய்                       - கால் கப்
  • இஞ்சி பூண்டு விழுது - தேவைக்கு
  • மிளகாய் தூள்               - தேவைக்கு (காரம் அதிகம் தேவைப்படுபவர்கள் இன்னும்  கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம்)
  • பச்சை மிளகாய்           - 3
  • பட்டை                           - 3 துண்டு
  • கிராம்பு                          - 4
  • மஞ்சள் தூள்                 - கால் தேக்கரண்டி
  • உப்பு                                - தேவைக்கு
  • எண்ணெய்                   - தேவைக்கு 


செய்முறை:-

முதலில் மீல் மேக்கர் முழுகும் அளவு  தண்ணீரை கொதிக்க வைத்து மீல் மேக்கரை அதில் 20 நிமிடம் ஊற வைக்க வேணடும்.
   
பின்பு மிக்ஸியில் வெங்காயத்தை போட்டு தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதிலேயே தக்காளியை போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காயை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, தாளித்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

அதனுடன் வெங்காய விழுதை போட்டு 3 நிமிடம் வதக்கவும். அதில் தக்காளி விழுதையும் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கவும்.

பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியவுடன் உப்பு போட்டு நன்கு கிளறவும்.

3 நிமிடம் கழித்து சுட தண்ணீரில் போட்டு வைத்துள்ள மீல் மேக்கரை நன்றாக தண்ணீரை பிழிந்து அந்த கலவையில் மீல் மேக்கரை போட்டு நன்கு பிரட்டி விடவும்.

அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி 10 நிமிடம் வேக வைக்கவும்.

அதன் பின்னர் தேங்காய் விழுதை ஊற்றி கிளறி விடவும்

மீல்மேக்கர் கலவையில் தண்ணீர் முக்கால் பாகம் வந்தவுடன் அதில் கொத்தமல்லி இருந்தால் அல்லது புதினா இருந்தால் போட்டு கிளறி விடவும் மீண்டும் 10 நிமிடம் வேக விட்டு கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து விடவும்.

சுவையான மீல் மேக்கர் கிரேவி தயார்

குறிப்பு : இதே போல் அசைவ பிரியர்கள் சிக்கன் கிரேவியும் செய்யலாம் 

No comments:

Post a Comment