Tuesday, December 23, 2014

இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் கோவாக்காய்

இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் கோவாக்காய்


பாகற்காய் போன்று கசப்பு சுவையுடைய காய்கறிகளில் ஒன்றானது. நோய் தீர்க்கும் சத்துப் பொருட்களை அதிகம் கொண்டதுமான கோவக்காயைப் பற்றி பார்ப்போம்.

கசப்பான மருந்துதான் நோயை விரைவில் குணமாக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல கசப்பான காய்கறிகள் தான் மனிதர்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய நோய்களை தீர்க்கக்கூடிய இயற்கையான மருந்துப் பொருட்களாகும்.


நகரங்களில் அனைத்து கடைகளிலும் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் கோவக்காயும் ஒன்று. இதன் அதீத பயன்களைப் பற்றி பலரும் அறியாத காரணங்களினால் இதை வாங்காமல் கோவக்காய் தவிர்ப்பவர்கள் பலர். இதன் பயன்பாடுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் இவ்வளவு நாட்களாக இது தெரியாமல் போய் விட்டதே என ஆதங்கப்படுவதோடு, இனிமேல் இதை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும்.

கோவக்காயுடைய இலைகள், காய்கள், பழங்கள் மற்றும் வேர்கள் போன்ற பகுதிகளில் நோய் தீர்க்கும் மருந்துப் பொருட்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

கசப்பு சுவையில்லாத வகையைச் சார்ந்த கோவக்காய் விட கசப்பு சுவையுள்ள கோவக்காய்க்கு அதிக மருத்துவ குணம் உண்டு.

கோவாக்காயின் பொதுவான பயன்கள்:

1. கோவக்காய்களை பொரியல் செய்தோ, சாம்பாரிலிட்டோ அல்லது வற்றலாகவோ செய்து சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி பெறும்.

2. இதை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர உடல் பித்தம் மற்றும் வாயுத் தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

3. வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

4. ஆரம்ப நிலையிலுள்ள ஆஸ்துமாவை குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

5. இரத்தத்தை சுத்தப்படுத்தி, நோய்க் கிருமிகள் நம் உடலை தாக்காமல் பாதுகாக்கும் சக்தி இதற்கு உண்டு.

6. குஷ்ட நோயுள்ளவர்கள் இதன் இளம் காய்களை அன்றாட உணவில் பயன்படுத்தி வர நோயி;ன தாக்கம் குறையும்.

7. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை உணவில் பயன்படுத்தி வர மலம் இளகி வெளியேறும்.

8. இது நம் உடலை சரும நோய்களிலிருந்து பாதுகாப்பதோடு, உடல் பளபளப்பாக திகழவும் உதவுகிறது.

கோவாக்காய் ப்ரை  செய்வதற்கு கிளிக் செய்யவும் 


100 கிராம் கோவக்காயில் காணப்படும் சத்துப் பொருட்கள்:

  • வைட்டமின் ஏ,பி,சி - 15 மி.கி
  • மாவுச்சத்து - 3.2 கி
  • நார்ச்சத்து - 2.6 கி
  • புரதச்சத்து - 2 கி
  • இரும்புச்சத்து - 1.4 கி
  • கொழுப்புச்சத்து - 0.2 கி
  • கால்சியம் - 40 மி.கி
  • பாஸ்பரஸ் - 32 மி.கி
  • நியாசின் - 0.7 மி.கி
  • ரிபோ ஃபிளேவின் - 0.1 மி.கி
  • கரோட்டின் - 150 µg
  • ஃபோலிக் அமிலம் - 60 µg


கோவைக்காயின் மருத்துவ பயன்கள்:

மிதமான மணகும், கசப்புச் சுவையுமுள்ள கோவக்காய், பல்வேறு வழிகளில் இயற்கை மூலிகைப் பொருளாக செயல்பட்டு நோய்களிலிருந்து விடுதலைப் பெற செய்கிறது.

குடல் புண்களுக்கு:-

குடல் புண்களால் அவதிப்படுபவர்கள் வாரம் இரு முறை இளம் கோவக்காய்களை மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் பருகி வர வாய்ப்புண் மற்றும் குடல் புண்கள் விரைவில் குணமாகும்.

ருசி அறிய:-

நூக்கிலுள்ள சுவையறியும் நரம்புகளில் பாதிப்பால் சிலருக்கு எதை சாப்பிட்டாலும் அதன் சுவை தெரியாமல் சப்பென்று இருக்கும். இவர்கள் கோவக்காய் மற்றும் அதன் இலைகளை மற்ற கீரைகளுடன் சேர்த்து சாப்பிட்டு வர நாக்கிலுள்ள சுவை நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று உண்ணும் உணவின் ருசியை அறியச் செய்யும்.

வாந்தி, குமட்டல் நிற்க:-

தொடர் வாந்தி மற்றும் குமட்டல் நிற்க நீளமாக நறுக்கிய கோவக்காய்களுடன் சிறிதளவு மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டு வர வாந்தி மற்றும் குமட்டல் நிற்கும்.

மூல நோய்க்கு:-

மூல நோயினால் அவதிப்படுபவர்கள் கோவக்காய் மற்றும் அதன் இலைகளை சூப் செய்து சாப்பிட்டு வர மூல நோயின் தாக்கம் குறையும். மேலும் மலம் வெளியேறும்போது ஆசனவாயில் ஏற்படும் வலியிலிருந்தும் விடுதலை பெறலாம்.

சிறுநீர் எரிச்சல் நீங்க:-

சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள் கோவக்காய்களை சிறிய துண்டுகளாக நறுக்கியோ அல்லது மைய அரைத்து மோரிலிட்டு குடித்து வர மூத்திர தாரை எரிச்சல், மூத்திரச் சூடு நீங்கும். மேலும் சிறுநீர் நன்கு பிரிவதோடு சிறுநீர் சம்மந்தமான நோய்களிலிருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு:-

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அன்றாட உணவில் கோவக்காய்களை சேர்த்து வர இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்து சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். மேலும் பரம்பரை காரணமாக நீரிழிவு நோயுள்ளவர்கள் கோவக்காய்களை தினமும் உணவில் சேர்த்து வர இந்நோயிலிருந்து தங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

எலும்புகள் வலுப்பெற:-

கோவக்காயில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. எனவே எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களினால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி இதை உணவில் சேர்த்து ஏதாவது ஒரு முறையில் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

படர்தாமரை நீங்க:-

படர்தாமரை நோயால் அவதிப்படுவர்கள் கோவக்காயும் சிறிதளவு வெள்ளைப் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து படர்தாமரை மீது பூசி வர நோய் நீங்கி தோல் இயல்பு நிலைக்கு வரும்.

சொறி, சிரங்கு நீங்க:-
நீண்ட நாட்களாக இருக்கும் சொறி, சிரங்கு நீங்க கோவக்காய்களை சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, கொத்துமல்லி விதை மற்றும் அதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கஷாயம் செய்து தினமும் இருவேளை உணவிற்கு முன் குடித்து வர சொறி, சிரங்கு விரைவில் குணமாகும்.

1 comment:

  1. நல்ல பலனைத் தரும் கருத்துக்களை, ஆலோசனைகளை வழங்கி வருகின்றீர்கள்.நன்றி.

    ReplyDelete