Sunday, July 13, 2014

ஞாபக சக்தியைத் தூண்டும் ஆசனம் பிறையாசனம்

மனிதன் நோயின்றி வாழ யோக தியானம், உடற்பயிற்சி அவசியம் தேவை.  இன்றைய பொருளாதார போராட்டத்தில் இவை செய்ய நேரம் இருப்பதில்லை.

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியா என்ற பழமொழிபோல் உடல் நன்கு ஆரோக்கியமாக இருந்தால்தான் பொருளாதாரத்தைத் தேட முடியும்.  அதற்காக தினமும் காலை மாலை நேரத்தில் அரை அணி நேரம் ஒதுக்கினால் போதும்.

அன்றாட வேலைப் பளுவில் உடலும் மனமும் சோர்ந்து போகும்.  அவர்கள் புத்துணர்வு பெற யோகப்  பயிற்சி மற்றும்  உடற்பயிற்சி தேவை.  அரை மணி நேரம் செய்தால் நல்லது.


இந்த  எளிமையான பிறையாசனம் என்னும் ஆசனத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.


பிறையாசனம் என்பது சந்திரப் பிறை போல் உடலை பின்பக்கம் அரைவட்டமாக வளைக்கும் ஆசனம் என்பதால் பிறையாசனம் என்று அழைக்கப்படுகிறது.

ஆசனம் செய்யும் முறை


கால்கள் இரண்டையும் ஒன்றாக வைத்து கைகளை தொடையில் தொடுமாறு நேராக நிற்க வேண்டும்.  

இரு கால்களையும் சுமார் மூன்றடி தூரம் இடைவெளியில் பக்கவாட்டில் விரித்துக்கொண்டு கைகளை மேலே தூக்க வேண்டும்.

கைகளையும் உடலையும் அப்படியே பின்னால் முதுகுப் பக்கம் வளைத்து இடுப்புப் பகுதியில் கை விரல்கள் மேல் நோக்கியவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரம்பந்தில் இவ்வாசனம் செய்யும்போது மிகவும் கடினமாகத்தான் தோன்றும்.  பின்பு செய்யச் செய்ய பழகிவிடும்.

இந்த ஆசனத்தின் பயன்கள்

சந்திரப் பிரைபோல் உடலை வளைப்பதால் இந்த ஆசனம் அதிக பயன்களைக் கொண்டது.  என்றும் இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க இந்த ஆசனம் சிறந்தது.


  • சர்க்கரை நோயாளிகள் இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் உடல் சோர்வு நீங்கும்.  நரம்புத் தளர்வு நீங்கும்.  முதுகுவலி, இடுப்பு வலி குறையும்.



  • சிறுநீரகப் பிரச்சனையைப் போக்கி நீரைச் சீராக பிரித்து இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும்.



  • முதுகுத் தண்டை பின்னோக்கி வளைப்பதால் சீரண உறப்புகள் வலுவடைந்து மலச்சிக்கலைப் போக்கும்.



  • தொப்பையைக்  குறைத்து உடலை கட்டாக வைத்திருக்கும்.



  • ஞாபக சக்தியைத் தூண்டும்.



  • இதய நோய், விரை வீக்கம் உள்ளவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இவ்வாசனத்தைத் செய்தல் கூடாது.  அறுவை சிகிச்சை செய்தவர்கள் 6 மாதம் கழித்து செய்யலாம்



  • கருத்தடை சாதனம் பொருத்திய மாதர்கள் இந்த ஆசனம் செய்யக்கூடாது

No comments:

Post a Comment