Sunday, July 13, 2014

லோலாசனம் இடுப்பு, முதுகு வலிக்கு இது சிறந்த ஆசனம்


ஒவ்வொரு மனிதனும் புத்துணர்ச்சி பெற உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் அவசியம் தேவை. இந்த இரண்டு பயிற்சியும் ஒருங்கே அமையப் பெற்றதுதான் யோகப் பயிற்சி.

ஒவ்வொரு இதழிலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் செய்யத்தக்க ஆசனங்களை நாம் அறிந்து வருகிறோம்.

 லோலாசனத்தைப் பற்றி அறிந்துகொள்வோம். லோலா என்றால் ஊஞ்சல் என்று பொருள். 

இந்து கோவில்களில் கடவுளின் விக்கிரகங்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். இதுபோல் சில வீடுகளில் ஊஞ்சல் இருப்பதை இன்றும் காணலாம். ஊஞ்சலில் ஆடுவதால் பல நன்மைகள் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் கோவிலிலும், வீடுகளிலும் ஊஞ்சலை பயன்படுத்தி வருகின்றனர்.



கைகளுக்கு அதிக வலிமை தரக்கூடிய இவ்வாசனம் செய்யும் முறையைப் பார்ப்போம்.


கால்களை முட்டி போட்டு அமர வேண்டும். அப்படியே இரண்டு முழங்கால்களுக்கு பக்கவாட்டில் கைகளை ஊன்ற வேண்டும். பின்பு வலது காலை இடது காலின்மேல் வைத்து ஙீ வடிவில் அதாவது படத்தில் உள்ளதுபோல் வைத்துக்கொள்ள வேண்டும்.

கைகளை அழுத்தமாக ஊன்றி உடம்பை மேலே தூக்கவும். கால்கள் மேல் எழும்பியவுடன் மெதுவாக கால்களை முன்னேயும், பின்னேயும் ஆட்ட வேண்டும். அப்படியே 1 நிமிடம் செய்ய வேண்டும். அப்போது சுவாசத்தை நன்கு இழுத்து விடவேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத் தோன்றும். தினமும் செய்தால் எளிதில் வரும்.

இயல்பு நிலையில் மறுபடியும் இடது காலை வலதுகாலின் மேல் ஙீ வடிவில் வைத்து முன்பு போல் காலை முன்னும் பின்னும் ஆட்ட வேண்டும். இவ்வாறு ஒரு நிமிடம் செய்தல் வேண்டும்.

பயன்கள்

இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்து வந்தால் கை, விரல், தோள்பட்டை, மணிக்கட்டு போன்றவை நன்கு பலப்படும்.

வயிற்றுப் பகுதி நன்கு விரிந்து சுருங்குவதால் தொப்பை குறையும். ஜீரண உறுப்புகள் சக்தி பெறும். இடுப்பு, முதுகு வலிக்கு இது சிறந்த ஆசனம்


No comments:

Post a Comment