Wednesday, October 16, 2013

வைட்டமின் ‘ஏ’-யின் குணங்கள் என்ன? நம் உடலின் நலத்திற்கு எந்த வகையில் எல்லாம் உதவுகிறது?



  •  பார்வைக் குறைபாட்டைப் போக்கி கண் பார்வையை தெளிவுபடுத்தும்.
  • மாலைக் கண் நோயைப் போக்கும் அல்லது வராமல் தடுக்கும்.
  • வண்ணங்களைப் பிரித்தறிவதற்கு ‘ஏ’-வைட்டமின் உதவுகிறது
  • எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.
  • இயல்பான உடல் வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ சத்து முக்கியமானது. இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.
  • எபிதீலியல் செல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது. உணவு மண்டலம் மற்றும்கழிவு நீக்க மண்டலத்தின் குழாய்களில் “மியூகஸ்” என்னும் சுரப்பிற்கு இந்தவைட்டமின் காரணமாகிறது.
  • இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.
  • கொழுப்புப் பொருட்களின் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.
  •  வைட்டமின் ‘ஏ’-ல் உள்ள கரோட்டினாய்டு என்ற பொருள் ஆக்ஸிஜன் ஏற்றத்தைத்தடுப்பதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் மற்றும் இதய நோய்போன்றவை தடுக்கப்படுகின்றன.
  • தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது.


தினமும் உணவில் உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கப்பட்ட வைட்டமின் ‘ஏ’ ன் அளவு


  • பெரியவர்கள் ஆண்கள் - 600 mcg 
  • பெரியவர்கள் பெண்கள் - 600 mcg 
  • கர்ப்பிணிப் பெண்கள் - 600 mcg
  • பாலூட்டும் தாய்மார்கள் - 950 mcg 
  • குழந்தைகளுக்கு 12 மாதம் வரை - 350 mcg 
  • 1 முதல் 6 வயது வரை - 400 mcg 
  • 7 முதல் 19 வயது வரை - 600 mcg 


வைட்டமின் ‘ஏ’ சத்து மிகுந்துள்ள பொருட்கள்

ஈரல், முட்டையின் வெள்ளைக் கரு, பால், நெய், வெண்ணெய், மீன் போன்றவிலங்கின பொருட்களிலும், மஞ்சள் மற்றும் பச்சை நிற காய்கறிகள், பழங்கள்தக்காளி உள்ளிட்ட தாவரப் பொருட்களிலும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.

வைட்டமின் ‘ஏ’- எந்தப் பொருட்களில் எத்தனை சதவீதம் உள்ளது.

காரட் - 93 %

பிரகோலிட் இலை - 93 %

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 79 %

வெண்ணெய் - 76 %

பசலிக்கீரை - 52 %

பரங்கிக்காய் - 41 %

முட்டை - 16 %

பப்பாளி - 6 %

மாம்பழம் -4 %

பட்டாணி - 4 %

வைட்டமின் ‘ஏ’ சத்து குறைந்தால்..


  • உலக அளவில் 2.5 முதல் 5 லட்சம் குழந்தைகள் வரை வைட்டமின் ‘ஏ’ சத்துக்குறைவினால் பாதிக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வளரும் நாடுகளில் வைட்டமின் ஏ சத்துக்குறைவால், பிறக்கும்போதே கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைகள்பிறப்பதாக மேலும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வைட்டமின் ‘ஏ’ சத்து பற்றாக்குறைபிரச்சனை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா போன்றவளரும் நாடுகளில் இது தீராத பிரச்சனையாகவே இருந்து வருகிறது. உலக சுகாதாரநிறுவனம், வைட்டமின் ‘ஏ’ சத்துப் பற்றாக்குறையைப் போக்க வளரும்நாடுகளுக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்து வருகிறது. இதன் மூலம் 12லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. 
  • வைட்டமின் ‘ஏ’ சத்து பற்றாக்குறையை தொடக்க நிலை பற்றாக்குறை மற்றும் இரண்டாம் நிலை பற்றாக்குறை என இரண்டு வகையாக பிரிக்கலாம்.
  • தொடக்க நிலை வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறை என்பது அந்த சத்து நிறைந்துள்ளமஞ்சள் மற்றும் பச்சை நிறக் காய்கறிகளை உட்கொள்ளாததால் ஏற்படுவதாகும்.
  • இரண்டாம் நிலைப் பற்றாக்குறை என்பது கருவில் குழந்தை வளரும்போதே போதியஊட்டச்சத்து கிடைக்காததால் ஏற்படுவது. மேலும் பித்த நீர் சுரப்பதிலும்வெளியேறுவதிலும் ஒழுங்கற்ற தன்மை, சிகரெட் புகை போன்றவற்றால் ஏற்படும்பிராண வாயு பற்றாக்குறை, கொழுப்புச் சத்தைக் குறைப்பதற்காகமேற்கொள்ளப்படும் உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றின் மூலமாகவும் இந்த நிலைஏற்படுகிறது.
  • வைட்டமின் ‘ஏ’ சத்து கொழுப்பில் கரையக்கூடிய தன்மை கொண்டது என்பதால்,கொழுப்புச் சத்துக் குறையும்போது, உணவுப் பொருட்களில் இருந்துவைட்டமின் ‘ஏ’-யை உட்கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் குறைந்து விடுகிறது.வைட்டமின் ‘ஏ’, புரதம் மற்றும் பிராணவாயுவுடன் கலந்து, அவற்றை உடலின்அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதற்கு உலோகச்சத்து (துத்தநாகம்)அவசியம் தேவை என்பதால், அதில் பற்றாக்குறை ஏற்பட்டாலும் வைட்டமின் ‘ஏ’-யைஉள்வாங்கிக்கொள்ளும் செயல்பாட்டின் சமநிலையை சீர்குலைகிறது.
  • வைட்டமின் ‘ஏ’-யை உள்வாங்கும் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் ஏற்படும்குறைபாடு, கண் பார்வையை மெல்ல மெல்ல பாதிக்கத் தொடங்கி விடுகிறது.நாளடைவில் மாலைக்கண் நோய் வரவும் வாய்ப்புள்ளது. கண்பார்வையில் ஏற்படும்பல்வேறு மாற்றங்கள், வைட்டமின் ‘ஏ’ குறைவினால் சருமத்தில் ஏற்படும்உலர்ந்த தன்மையை உணர்த்தும் அறிகுறிகளாகும்.
  • சத்து பற்றாக்குறை அதிகரிக்கும்போது கண்பார்வை முற்றிலும்பாதிக்கப்படுவதுடன், அளவுக்கு மீறிய உலர் தன்மையினால் சொறி, சிரங்கு, படைஉள்ளிட்ட பல்வேறு தோல் சம்பந்தமான நோய்களும் ஏற்பட வாய்ப்புண்டு.வைட்டமின் ‘ஏ’, கண்ணுக்கும் தோலுக்கும் காவலனாக செயல்படுகிறது என்பதேஉண்மை.

No comments:

Post a Comment