Thursday, October 10, 2013

கீரை மருத்துவம் - முற்றிய காச நோயைக்கூட சிறு கீரையால் குணப்படுத்தலாம்


Amaranthus tricolor
பெயர் தான் சிறு கீரையே தவிர, மருத்துவப் பயன்கள் அதிகம் கொணட பெருங்கீரையாகும்.வாசமுள்ள சிறந்த கீரை எல்லோரும் விரும்பி உண்ணும் கீரை எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் சத்துள்ள கீரையை தினசரி சாப்பிட்டுவந்தாலும் உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது இரும்புச் சத்தும், புது இரத்தமும் உடம்பில் சேரும். இதில் கால்சியச்சத்து அடங்கியிருப்பதால் எலும்பை பலப்படுத்துகிற ஆற்றல் இதற்கு உண்டு. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால்வந்தால் சிறந்த நினைவாற்றல் பெறலாம். உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றக்கூடியது. வண்டுக்கடி, பூச்சிக்கடி விஷங்கள் இறக்கக்கூடியது. சிறு கீரையால் முற்றிய காச நோயைக்கூட குணப்படுத்த முடியும்


சித்தர் பாடல்:

கண்புகைச்ச நேத்திரநோய் சாசம் படலம்
புண்கிரிச்ச ரஞ்சோலை பொங்குமித்த - மண்பரவு
தாவரவிடங்களும் போம் தாழாத் திருவுமுண்டாம் 
கூறுசிறு கீரைதனைக் கொள்.               - அகத்தியர் குணபாடம்

கண் புகைச்சல் போன்ற கண் நோய்கள், காச நோய், புண்கள், சிறுநீர்க்கடுப்பு, ஆசாகை,பித்த நோய்கள் குணமாகும். உணவால் உண்டாகும் விஷத்தை முறிக்கும்.

100 கிராம் சிறு கீரையில் உள்ள சத்துக்கள்:


  • நீர்ச்சத்து - 90 சதவீதம்
  • புரதம் - 2.8 சதவீதம்
  • கொழுப்பு - 0.3 சதவீதம்
  • தாதுப்பொருள் - 2.1 சதவீதம்
  • சர்க்கரைச்சத்து - 4.8 சதவீதம்
  • சுண்ணாம்புச்சத்து - 397 மி.கி
  • பாஸ்பரஸ் - 50 மி.கி
  • இரும்பு - 27.3 மி.கி
  • கலோரித்திறன் - 30 கலோரி


ஞாபக மறதிக்காரர்களா:

சிறு கீரையோடு மிளகுத்தூள், உப்பு சேர்த்து சமைத்து கொஞ்சம் நெய்யையும் சாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் அற்புதமான நினைவாற்றல் கிடைக்கும்
.
பித்தநோய்:

சிறு கீரையும் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான பித்த நோய்களும் குணமாகும்

சிறுநீராக கோளாறு:

சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயம் தயாரித்து அதிகாரலயில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.

தோல் நோய்:

சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்தால் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

உடல் பருமன்:

சிறு கீரை (2 கை அளவு), பார்லி (ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம் நான்கு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் உடல வீக்கம், உடல் பருமன் குறையும்.

கண் எரிச்சல்:

சிறு கீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள், சேர்த்து சூப்பாகச் செய்து சாப்பிட்டால் கண் புகைச்சல், கண்காசம், கண் படலம் போன்றவை குணமாகும்.

கப நோய்:

சிறு கீரையுடன் சிறிது, சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் கப நோய்கள் விலகும்.

உடல் வனப்பு:

சிறு கீரையை குடைமிளகாய், சிறுபருப்பு, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்துச் சமைத்து தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் உடல் வனப்பு பெறும்.

முகப்பரு:

சிறு கீரையுடன் முந்திரிப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்தது அரைத்து முகப்பருக்கள் மீது தடவிவந்தால் குணம் பெறலாம்.

விஷக்கடிகள்:

சிறு கீரை வேர், குப்பைமேனி வேர், சிறுபீளை வேர் மூன்றையும் சம அளவில் எடுத்து அலசி நன்றாக அரைத்து எலுமிச்சை பழம் அளவு அதிகாலையில் சாப்பிட்டு உணவில் உப்பு சேர்க்காமல் பத்தியம் இருந்தால், வண்டுக்கடி, தேள்கடி போன்ற அனைத்துவிதமான   விஷக்கடிகளும் குணதாகும்   

No comments:

Post a Comment