Thursday, October 10, 2013

வரகு அரிசி சத்துக்கள்

தானியங்களின் பெயர்கள் கூட தற்போதைய தலை முறையினருக்கு தெரிவதில்லை.சிறுதானியங்களில் முக்கியமானது வரகு.இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். வரகு அரிசி,கோதுமையை விட சிறந்தது.

இதில் நார்ச்சத்து அரிசி,கோதுமையை விட அதிகம்.வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும்.


இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது.  தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

வரகு,  பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம். நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது.

இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இதனை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தி  இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம்,பொங்கல்,பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம்.

வரகு அரிசி கஞ்சி

வரகு அரிசி - கால் கப் 
பூண்டு பற்கள் - 10 
சுக்கு - சிறிய துண்டு 
சீரகம் - கால் ஸ்பூன் 
வெந்தயம் - சிறிதளவு 
பால் - 1 கப் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

• சுத்தம் செய்த வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவிடவும். 

• பாதி வெந்ததும், உரித்த பூண்டுப் பற்கள், சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும். 

• நன்றாக வெந்த‌தும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும். 

• இதற்கு தொட்டு கொள்ள கறிவேற்றிலை துவையல் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment