Wednesday, May 13, 2015

பல் பராமரிப்பு வழிகள்

பல் பராமரிப்பு வழிகள்



  • கேரட்டை பச்சையாகக் கடித்து சாப்பிடுங்கள். எல்லா வயதினருக்கும் கேரட் சிறந்த பல்பாதுகாப்பு உணவாகும்.
  • பல் மஞ்சள் நிறம் மாற எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் உப்பைச் சேர்த்து வாருங்கள். ஒரு வாரத்தில் பல்லின் மஞ்சள் நிறம் மாறும்.
  • மாதத்திற்கு ஒரு தடவையேனும் கரும்புத் துண்டுகளை மென்று துப்புங்கள். அதனால் பற்கள் சுத்தமாவதுடன் பற்கள் நல்ல பலமடைகின்றன.
  • பற்கள் பளிச்சிட இரவு ஒரு ஆப்பிளை கடித்து மென்று சாப்பிடுங்கள். ஆப்பிளில் உள்ள (Malic Acid) பற்களை சுத்தம் செய்வதுடன் முத்துப்போல் பிரகாசிக்க வைக்கும்.
  • வாரம் ஒரு முறை எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து அதில் உப்புப் போட்டு அக்கலவையை பிரஷ்ஷினால் தொட்டு தேய்த்து சுத்தம் செய்வதால் பல் ஒளிரும்.
  • எலுமிச்சை ரசத்துடன் பாதாம் கொட்டைத் தோலை பொடி செய்து அரைத்து அதை பேஸ்ட் போல் உபயோகித்து வந்தால் பற்களில் கிருமிகளை அண்டவிடாது.
  • வேப்பங்குச்சியால் பல்துலக்கும்போது நிரம்பின், நிம்பிடின், நிம்பினின், நிம்போஸ்பெரால், டானின், மார்கோசின் போன்ற சத்துக்கள் பல் உபாதைகளை விரட்டுகிறது. நிம்பிடின் என்னும் சத்து பல்லின் வேரை ஊடுருவி பயோரியா என்னும் பல்வேர் நோயை போக்குகிறது. அதே போல் ஆலங்குச்சி, அரசங்குச்சி, நாயுருவி போன்றவைகளால் பல் துலக்கினால் ஈறுகள் பலப்படும். பற்சொத்தை விழாது தடுக்கும்.
  • வெங்காயத்தை தயிரில் வெட்டிப்போட்டு தினமும் சாப்பிடுங்கள். அதனால் பற்கள் சுத்தமாகி ஈறுகள் கெட்டுபோவதைத் தடுப்பதற்கு உதவும்.


No comments:

Post a Comment