Saturday, September 27, 2014

பருக்கள் மறைய வேப்பிலை

சிலருக்கு கன்னம் முழுவதும் பருக்கள் தோன்றி கைபட்டாலே எரிச்சலும், முகத்தைப் பார்த்தாலே வேதனையும் பீரிடும். இதற்கும் வேப்பிலையில் அருமையான சிகிச்சைகள் இருக்கின்றன. இரண்டை மட்டும் இங்கே பார்ப்போமா? 


1. ஒரு கொத்து வேப்பிலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள். பிறகு, பருக்களின் மீது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தி எடுங்கள். வேப்பிலை, மஞ்சளை சம அளவு அரைத்து பருக்களின் மீது பூசுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள்.

2. சிறு துண்டுகளாக வெட்டிய வெட்டிவேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து   வடிகட்டிக் கொள்ளுங்கள். 5 கிராம் வேப்பந்தூள், 50 கிராம் கடலை மாவு இரண்டையும் கலந்து வைத்து, அதிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து, வெட்டிவேர் தண்ணீரை சேர்த்து பேஸ்டாக்கி பருக்களின் மீது பூசுங்கள். ஓரிரு வாரங்களில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

No comments:

Post a Comment