Saturday, July 12, 2014

கண்களுக்கான பொதுவான பாதுகாப்பு முறைகள்

நன்றாக வெயில் அடித்தாலும், வெயில் இல்லாமல் இருந்தாலும் பகல் நேர பயணங்களில் ‘சன் கிளாஸ்’ கண்ணாடிகள் பயன்படுத்துங்கள். அது, அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்கும்.


 கோடை காலத்தில் வெளியே செல்லும்போது தயக்கமில்லாமல் தொப்பியோ, குடையோ எடுத்துச்செல்லுங்கள். கண்களை பாதுகாத்துக்கொள்ள அவைகளை பயன்படுத்துங்கள். கருப்பு நிற குடைகளைவிட, இளநிற குடைகளே அல்ட்ரா வயலெட்  கதிர்களை அதிகஅளவு தடுக்கும். 

 வெளியே செல்லும்போது கைபையில் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். தினமும் குறைந்தது
2 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். அதிக அளவு தண்ணீர் குடிப்பது கண்களின் ஈரத் தன்மைக்கு ஏற்றது. வீடு திரும்பிய  பின்பு பஞ்சில் தண்ணீரை (அல்லது பன்னீரை) முக்கி பிழிந்து, கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் அந்த பஞ்சினை கண்களின் மீது வைப்பது நல்லது. வெள்ளரிக்காய் துண்டுகளையும் கண்களின் மேல் வைக்கலாம்.

 வெயில் தாக்குதலை தடுக்க சருமத்தில் சன்ஸ்கிரீன் கிரீம்களை பூசிக்கொள்கிறவர்கள், அது கண்களில் படாத அளவுக்கு பார்த்துக்கொள்ளவேண்டும். 

 உடலில் ஏற்படும் கோடை உஷ்ணத்தை குறைக்கும் விதத்திலான குளிர்ச்சியான, சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment