Thursday, July 31, 2014

ஏகாதசி தினத்தன்று சாப்பிடாமல் விரதம் இருப்பதற்கு அறிவியல் ரீதியாக ஒரு காரணம்

ஏகாதசி தினத்தன்று எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் ரீதியாகவும் ஒரு காரணம் உள்ளது. நமது உடல் நலனை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் இந்த விரததினத்தை குறிப்பிட்டு வரையறுத்துள்ளதாக தெரிகிறது.


ஏகாதசி தினத்தன்று சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பூமியிலுள்ள ஜல வர்க்கத்தின் மீதும் பாதிப்பு உண்டாக தொடங்குகிறது. மனித உடலில் 70 சதவீதம் நீர் நிறைந்திருப்பதால் ஏகாதசி தினத்தன்று மனித உடலிலும் சந்திரனின் சக்தியால் பாதிக்கப்படும்.


இதன் காரணமாக ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்ய முடிவதில்லை. அப்போது உணவருந்தினால் சரியாக ஜீரணமாகாது. சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் சமுத்திர நீர் பொங்கி எழுந்து அலைக்கழிக்கப்படுவதைப் போல மனித உடலிலும் உள்ள நீரில் பாதிப்பு உண்டாகி, ஜீரண சக்தியை இழந்து விடுகிறது.

மாதம் இருமுறை வரும் ஏகாதசி நாட்களில் தொடர்ந்து உணவை சாப்பிட்டு வருபவர்களுக்கு அஜீரணம் உண்டாகலாம். அஜீரணமானவுடன் மருந்து உட்கொள்வதும், சாப்பிட்ட உணவை பலவந்தமாக ஜீரணிக்க முயற்சி செய்வதும் இயற்கைக்கு விரோதமான செயலாகும். இதன் விளைவாகபமுதலில் சிறிய சிறிய நோய்கள் ஏற்படும்.

பிறகு நிரந்தரமான நோய்கள் உண்டாகிவிடும். ஏகாதசி தினத்தன்று, தியானம் செய்யும்போது நம் மனம் மிக விரைவில் ஒரு நிலைப்பட்டுவிடும். அதன் மூலம் மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது. மற்ற நாட்களைவிட இந்த நாளில் தியானம், செய்வதினால் மூளையின் செயல்திறனில் ஏற்படும் வேற்றுமையை கண்டறியலாம்.

ஏகாதசி தினங்களில், யோகத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள் தியானத்தின் மூலம் உடலில் உள்ள யோக சக்கரங்களின் வழியாக புற உலக மின்காந்த அலைகளை சுலபமாக அதிகளவு கிரகிக்க முடிகிறது.

இதனால் தான் ஏகாதசி காலத்தில் உண்ணா நோன்புடனும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் பகலில் மட்டும் உணவு உட்கொண்டு இரவில் உபவாசத்தோடு தியானம் போன்றவைகளில் ஈடுபடவேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. நீர் கூட அருந்தாத சுத்த உபவாசம் இருக்கும் போது அடிபோஸ் திசுக்களில் இருந்து கொழுப்பு குறையும்.

அப்பொழுது, திசுக்கள் சிதைந்து அதில் உள்ள புரதம் குளுகோஸ் ஆக மாற்றப்படும். திசுக்களில் உள்ள புரதம் குளுகோஸாக மாற்றப்படுவதால் ஒரு நாள் உபவாசத்தில் சுமார் 66 கிராம் கொழுப்பு அழிக்கப்படுகிறது. இதனால் உடல் எடை குறைகிறது.

வயிறு சுருங்கி தொந்தி குறையும். பொதுவாக விரதம் முடிந்த பிறகு சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் வழக்கத்திற்கு அதிகமான வேலை செய்யும் ஆற்றல் உடலுக்கு உண்டாகும். அஜீரணக்கோளாறுகள் நீங்கும். பசியின்மை நீங்கும். குரல் வளம் அதிகரிக்கும். நல்ல தூக்கம் வரும். சாப்பிடும் உணவுகள், காய்கறிகள், பழங்கள் நாக்கிற்கு அதிக சுவையாக இருக்கும். கண்கள் பிரகாசமடையும். ஆரோக்கியமும், ஆயுளும் அதிகரிக்கும்.


No comments:

Post a Comment