Wednesday, July 23, 2014

முத்திரை முக்கிய அம்சம்

முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம். 

யோகாசன முத்திரைகளுக்கும் கூட நீங்கள் வியக்கும் படியான உடல்நல பயன்களை அளிக்கிறது. இந்த ஒவ்வொரு முத்திரைகளுக்கும் உள் அர்த்தங்கள் உள்ளது. உதாரணத்திற்கு, க்யான் முத்திரை பொதுவான ஒன்று. இந்த முத்திரை அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும்.

அதே போல் வாயு முத்திரை காற்றை குறிக்கும். உடலில் உள்ள காற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அது சமநிலைப்படுத்தும். அனைத்து யோகாசன முத்திரைகளும் கை அசைவுகளே. அவைகள் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய நன்மைகளை அளிக்கும். 

ஆனால் இந்த முத்திரைகளை நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடாது. ஒவ்வொரு முத்திரையை செய்யவும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. குறிப்பிட்ட வகையில் அமர்வது, நிற்பது, படுப்பது போன்றவைகளும் இதில் அடங்கியுள்ளது. 

உடல் நல பயன்களை பெறுவதற்கு இந்த விசேஷ கை சைகைகளை பயன்படுத்துங்கள். ‘பத்மாசனம்’ போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். 

டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம். ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம். எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். 

விலக்கு ‘சூன்ய முத்திரை’. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும். இவற்றை செய்யும்போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். 

அழுத்த வேண்டாம். முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும். வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதேபோல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

No comments:

Post a Comment