Friday, October 11, 2013

பழங்களின் மருத்துவம் - உடலில் பலம் அதிகரிக்க பம்பளிமாஸ் பழம்

பழங்கள் யாவும் உடலுக்கு நேரடியாக சத்துக்களை அளிக்க வல்லவை. உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் அனைத்தும் பழங்களில் நிறைந்துள்ளன. பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும். தினமும் ஒரு பழமோ அல்லது பழக்கலவையோ சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

Bot.Name - Cirus Decumana

பம்பளிமாஸ் என்ற பெயரைக் கேட்டவுடன் இது இறக்குமதி செய்யப்பட்ட பழம் என்று நினைத்துவிடாதீர்கள். இதன் பூர்வீகம் ஐரோப்பா நாடுகள் என்றாலும், நம் நாட்டின் மலைப் பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது.

பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் மற்றும் சுளைகள் பெரியதாக இருக்கும்.

வெள்ளைச் மற்றும் இளஞ்சிவப்பு (ரோஸ்) நிறத்தில் காணப்படும். சுளைகள் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.


இந்தப் பழம் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் பலம் அதிகரிக்கும்


பித்தத்தைக் குறைக்க

ஒரு மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு வாத, பித்த, கபம் போன்றவை அதனதன் நிலையிலிருத்தல் மிகவும் அவசியம். இதில் எதன் நிலை மாறினாலும் உடலில் பாதிப்பு உருவாகும். இதில் பித்த அதிகரிப்பு ஏற்பட்டால் உடலில் இரத்தம் சீர்கேடு அடைந்து, பித்த நீரானது மேல் நோக்கிச் சென்று கண் நரம்புகளைப் பாதித்து மூளையின் செயல்பாடுகளை குறைக்கும். இதனால் தலைவலி, ஞாபக மறதி, மன அழுத்தம் போன்ற பல தொல்லைகள் உருவாகும். இந்த பித்த அதிகரிப்பானது உடலின் தன்மையைப் பொறுத்தே மாறுபடுகிறது. இந்த பித்த அதிகரிப்பை சரி செய்யும் தன்மை பழங்களுக்கும், கீரைகளுக்கும் உண்டு. இதில் பம்பளிமாஸ் பழம் பித்த அதிகரிப்பை வெகு விரைவில் குறைக்கும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவது நல்லது.

கண்கள் பிரகாசமடைய

கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். காரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும்.

மஞ்சள் காமாலை

மனிதனைத் தாக்கும் கொடிய நோய்களுள் காமாலை நோயும் ஒன்று. ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்-கம் குறைய பம்பளிமாஸ் பழம் நல்லது. இப்பழம் கிடைக்கும் காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

உடல் பலம் பெற

நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் உடல் மிகவும் இளைத்து காணப்படும். உடல் சோர்வுற்ற நிலையில் இருக்கும்.

இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு பிழிந்து அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மதிய வேளையில் கொடுத்து வந்தால் இளைத்த உடல் தேறும்.

உடல் சூட்டைத் தணிக்க

கோடைக்காலத்தின் அதிக வெயிலில் அலைபவர்கள், அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகு விரைவில் வெப்பமடையும். இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.

இரத்த சோகை குணமாக

இரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்கள் நம் நாட்டில் 67 சதவிகிதம் பேர் உள்ளனர். மூலிகைகள், பழங்கள் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் எல்லாம் இங்கு உற்பத்தியாகியும் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மாறவில்லை.

இரத்தத சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு. இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும்.

அடிக்கடி வயிற்றுப் போக்கு உள்ளவர்களுக்கு

வயிற்றுப் போக்கு சிலருக்கு அடிக்கடி ஏற்படும். இதற்குக் காரணம் தெரியாமல் அடிக்கடி மருத்துவரை நாடுவார்கள். எந்த வகையான மருந்துகள் சாப்பிட்டாலும் இவர்களின் சீதளப் போக்கு அப்படியே இருக்கும். இதற்குக் காரணம் இவர்களின் சீதள தேகம்தான். இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படுவது குறையும்.

வருடத்தில் சில மாதங்களே கிடைக்கும் பம்பளிமாஸ் பழத்தை வாங்கி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment