Thursday, October 24, 2013

கீரை மருத்துவம் - நமது உடலையும் பொன்னாக மாற்றும் சக்தி பொன்னாங்கண்ணிக் கீரைக்கு உண்டு


பொன்னைக் கொடுத்து பொன்னாங்கண்ணி வாங்கு என்பது கிராமத்துப் பழமொழி, பகலில் விண்மீன்களை பார்க்கமுடியுமா? என்றால் முடியும் என்கிறது இக்கீரை. இக்கீரையை ஒரு மண்டலம் (48நாட்கள்) சமையல் செய்தோ, பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் பகலில்கூட நட்சத்திரங்கள் பார்க்கலாம்.

கிராமத்தில் 90 வயதில்கூட கண்ணாடி அணியாமல் உலாவுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இக்கீரையே. கண்ணுக்கு ஒளியை தெளிவான பார்வையை இதற்கு இணையாகத் தரக்கூடிய கீரை வேறொன்றும் இல்லை.


இது கண்ணை மட்டும் தெளிவாக்குவதில்லை நமது உடலையும் பொன்னாக மாற்றும் சக்தி இதற்குண்டு.

விலையுயர்ந்த லோஷன்களைப் போட்டு உடலை கெடுத்துக்கொள்பவர்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தாலே போதும் பொன்னிறமாக மாறுவார்கள்.

இக்கீரை தரையில் படர்ந்து வளரும் தன்மைகொண்டது வாய்க்கால், வயல் வரப்புகள், ஈரமுள்ள இடங்கள் என எங்கும் பரவி வளர்ந்துகிடக்கும்.

இதன் இலைகள் முருங்கை இலைகளைவிட சிறியதாக இருக்கும். கரும்பச்சை நிறம்கொண்டது. இதன்பூக்கள் கொத்துக்கொத்தாய் இருக்கும். மஞ்சள் பொன்னாங்கண்ணி என்றொரு வகை உண்டு. இதன் பூக்கள் மஞ்சள் நிறமாக இருக்கும் இலைகள் பெரியதாக சற்றே மஞ்சள் கலந்த நிறமாக இருக்கும்.

ஆனால் இரண்டு பொன்னாங்கண்ணிக்கும் அடிப்படை குணத்தில் வேறுபாடு இல்லை. இதன் வுபாசம் - குளிர்ச்சி

காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
கூசும் பிலீகம் குதாங்குர நோய் - பேசிவையால்
என்னாங்கா ணிப்படிவம் எமமம் செப்பலென்னைப்
பொன்னாங்கா ணிக்கொடியைப் போற்று   - அகத்தியர் குணபாடம்

மருத்துவப் பயன்:

1. பொன்னாங்கண்ணிக் குரையை நெய்யில் வதக்கி. அத்துடன் சிறிது மிளகு, உப்பு சேர்த்துக் கடைந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டால் உடலுக்கு அழகும், பொன்னிறமும் ஒரு சேர உண்டாகும். நீடித்த ஆயுளும், நோயில்லா வாழ்க்கையும் பெறலாம்.

2. பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து ஒரு மண்டலம் வரை சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும். கண் தொடர்பான நோய்கள் அனைத்து தீரும்.

3. பொன்னாங்கண்ணிக் கீரையின் சாற்றை, அரை அவுன்ஸ் வீதம் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கண்சிவப்பு மாறும், தலைச்சூடும் போகும்.

4. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்விட்டு வதக்கி கண்கள் மீது வைத்துக் கட்டினால் கண் நோய்கள் குணமாகும்.

5. பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும்.

6. பொன்னாங்கண்ணி கீரையைத் தைலமாகத் தயாரித்து தலையில் தடவிக் குளித்தால் கண் புகைச்சல், கருவிழி நோய், கண் அழுத்தம், உடல் சூடு, வெட்டைச்சூடு போன்ற அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும்.

7. பொன்னாங்கண்ணி கீரைச் சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பசு நெய், பசும்பால் என ஒவ்வொன்றிலும் தலா 60 மி.லி அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக் காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கு, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (5 கிராம்) அளவுக்குச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல், கை கால் எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

8. பொன்னாங்கண்ணி கீரைச் சாறு (100 மி.லி.) கரிசலாங்கண்ணிச் சாறு (100 மிலி.) இரண்டையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். அதில் 50 கிராம் அதிமதுரத்தை பால் சேர்த்து கலந்துகொள்ளவும். அடுத்து அதை மெழுகு பதமாகக் காய்ச்சி இறக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவை குணமாகும்.

9. பொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.

10. பொன்னாங்கண்ணிக் கீரைச் சாற்றில் 5 திராம் சீரகத்தைச் சேர்தது அரைத்துச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

100 கிராம் பொன்னாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துக்கள்:

  • நீர்ச்சத்து - 77.4 கிராம்
  • புரதம் - 5.0 கிராம்
  • கொழுப்பு - 0.7 கிராம்
  • தாது உப்புகள் - 2.5 கிராம் 
  • நார்ச்சத்து - 2.8 கிராம்
  • சர்க்கரைச்சத்து - 11.6 கிராம்
  • சுண்ணாம்புச்சத்து - 510 மி.கி
  • பாஸ்பரஸ் - 60 மி.கி
  • இரும்பு - 16.7 மி.கி
  • மாவுப்பொருள்  - 1926 யு.ஜி
  • ரிபோஃபிளேவின் - 0.14 மி.கி
  • நியாசின் - 1.2 மி.கி
  • வைட்டமின -சி - 17 மி.கி
  • கலோரித்திறன் - 73கலோரி


உடலில் இருக்கும் அனைத்துவிதமான நோய்களும் தீரும். குறிப்பாக கண் நோய்கள் முற்றிலும் குணமாகும். நரம்புக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள், குடல் சார்ந்த நோய்கள் போன்ற அனைத்தும் நீங்கி உடல் மினுமினுப்பு (தேஜஸ்) பெறும்.

No comments:

Post a Comment