Monday, January 9, 2017

செட்டிநாடு இறால் தொக்கு

செட்டிநாடு இறால் தொக்கு



அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:-

  • மிளகு - 1 ஸ்பூன்
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • பட்டை – 3
  • கிராம் - 4
  • ஏலக்காய் - 2
  • பூண்டு – 10
  • இஞ்சி – அரை துண்டு
  • பச்சை மிளகாய் - 1
  • காய்ந்த மிளகாய் - 1


தேவையான பொருட்கள்:

  • இறால் -250 கிராம்
  • வெங்காயம் - 2 சின்னதாக
  • எண்ணெய் - தேவையான அளவு
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
  • தனியா தூள் - ½ ஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • புளி கரைசல் - 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை:-

முதலில் அரைக்க பொருட்களை அரைத்துக்கொள்ளவும். அதன்பின்பு எண்ணெய் வாணலில் ஊற்றவும். பின்பு எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு கிளறவும். பின்பு அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். அதனுடன் இறால் சேர்த்து கிளறவும். பின்பு தூள் வகைகளை சேர்த்து பச்சைவாசம் போகும் வரை கிளறவும். தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். இறால் வேகுவதற்காக கொஞ்சம்  தண்ணீர் சேர்த்து கிளறவும். சுவையான செட்டிநாடு இறால் தொக்கு ரெடி.

No comments:

Post a Comment