Sunday, December 20, 2015

முட்டை ,உருளைக்கிழங்கு ஆம்லெட்

 முட்டை ,உருளைக்கிழங்கு ஆம்லெட்



தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 2
பெரியது முட்டை - 3
பெரிய வெங்காயம்- 1
உப்பு - சுவைக்கு
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்


செய்முறை :

* உருளைக்கிழங்கு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கிளறவும்.
உருளைக்கிழங்கு பாதி வெந்ததும் வெங்காயத்தை சேர்த்து கிளறவும்.
பின்னர் அதில் மிளகுத்தூள் சேர்க்கவும்.
* ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
* உருளைக்கிழங்கு நன்கு பொரிந்ததும் அதில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி உருளைக்கிழங்கின் மேல் நன்றாக பரத்தி விடவும்.
* பின் இதனை மூடி மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
வெந்ததும் திருப்பி போட்டு வேக விடவும்.
நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
* உருளைக்கிழங்கு - முட்டை ஆம்லெட் ரெடி.

No comments:

Post a Comment