Tuesday, May 19, 2015

இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைய கேரட்

    இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைய கேரட்


பார்ப்பதற்கு பளபளப்பாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும் காய்கறிகளில் முக்கியமானது காரட். உணவில் தவிர்க்க முடியாத காய்கறிகளில் முக்கியமானதும், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடக் கூடியதுமான கேரட் பற்றி நாம் காண்போம்.

 இது குளிர் மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறு செடி வகையைச் சார்ந்தது. இலைகள் மிகச் சிறியதாகவும், கொத்தாகவும் ப+மிக்கு வெளியில் காணப்படும். பூமிக்கு அடியில் வேர்ப்பகுதியில் நாம் உண்ணக்கூடிய உணவுப் பொருள் இருக்கும்.

மருத்துவ குணமுடைய பகுதிகள்

  இலைகள் மற்றும் வேர்க்கிழங்கு பகுதிகளில் நோய் தீர்க்கும் மருந்துப் பொருட்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

கேரட்டின் பொதுவான மருத்துவப் பயன்கள்

1. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. இதை குழம்பிலிட்டோ, சூப் செய்வதோ சாப்பிட்டு வர இதன் பலன்கள் முழுமையாக நாம் உடலுக்கு கிடைக்கும்.

2. கேரட்டின் குணம், குளிர்ச்சி. எனவே, இது உடல் சூட்டை குறைத்து சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும்.

3. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு கேரட் ஜுஸ் நல்ல் பலனைத் தரும்.

4. ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் கேரட்டை பயன்படுத்தி வர ஆஸ்துமா கட்டுப்படும்.

5. சிறுநீர்ப்பையில் உள்ள தொற்றுகளை நீக்கவும், தொற்று வராமலும் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

6. மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

7. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கேரட்டை தினமும் பயன்படுத்தி வர உடல் எடை குறையும்.

8. கை, கால் வீக்கத்தினால் அவதிப்படுபவர்களுக்கு கேரட் ஜீஸ் சிறந்தது.

9. வயிறு சம்மந்தமான உபாதைகளிலிருந்து தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

10. தினமும் காரட்டை ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தி வர கல்லீரல் சுத்தமாகும்.

11. வயதானவர்கள் தினமும் கேரட்டை சாப்பிட்டு வர சக்தி அதிகரிக்கும்.

12. தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.

13. இதில் காணப்படும் பீட்டா கரோட்டின் நம் உடலிலுள்ள செல்களை அழிவிலிருந்து பாதுகாக்கும். மேலும், இது கிருமி நாசினியாகவும் செயல்படும்.

பயன்படுத்தும் முறைகளும், தீரும் நோய்களும்

 கேரட்டை முறையாகப் பயன்படுத்தி வர கீழ்கண்ட நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

கண்கள் தெளிவுற:

  கேரட்டில் காணப்படும் வைட்டமின் - ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கண்களுக்கு சிறந்த மருந்தாகச் செயல்பட்டு பார்வை நரம்புகளை தெளிவுறச் செய்யும். எனவே கண் பார்வை மங்கல், மாலைக்கண் நோய், கண்ணில் பூ  விழுதல் போன்ற நோய்களினால் அவதிப்படுபவர்கள் தினமும் கேரட் ஜீஸ் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

 கேரட்டில் காணப்படும் பொட்டாசியம், சோடியம் மற்றும் கால்சியச் சத்துக்கள் நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் தடுக்கும். எனவே, இந்நோயினால் அவதிப்படுபவர்கள் தினமும் கேரட்டை ஜீஸ் செய்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும். இரத்த ஓட்டமும் சீராகும்.

குழந்தைகளுக்கு:

 கேரட்டில் காணப்படும் கால்சியம் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சியை தூண்டுகிறது. குழந்தை உணவு உண்ண ஆரம்பிக்கும் சமயம் கேரட்டை வேக வைத்து கொடுத்து வர குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்குவதுடன், உடல் வளர்ச்சியும் பெருகும்.

கர்ப்பிணிகளுக்கு:

 கர்ப்பிணி பெண்கள் உணவில் தினமும் கேரட்டை ஜுஸ் செய்தோ அல்லது பொரியல் செய்தோ பயன்படுத்தி வர வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

கொழுப்பு குறைய:

  இரத்தத்தில் கொழுப்பின் அளவு மிகுந்து காணப்படுபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜீஸ் பருகி வர கொழுப்பின் அளவு குறையும். மேலும், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வரும்.

தோல் நோய்கள் நீங்க:

 தோல் சம்பந்தமான நோய்களினால் அவதிப்படுபவர்கள் அன்றாட உணவில் கேரட்டை பயன்படுத்தி வர தோல் நோய்கள் நீங்கி தோல் பளபளப்பாகும்.

இரத்த சோகை நீங்க:

 இரத்த சோகை நோயினால் உடல் வெளுத்து காணப்படுபவர்கள் தினமும் உணவில் கேரட்டை பயன்படுத்தி வர இரத்தம் பெருகும். இரத்த சோகை நோய் நீங்கி உடல் வலுப்பெறும்.

முக பளபளப்பிற்கு:

 வேயிலில் அலைவதால் முகம் சிவத்தல், கறுத்து போதல், முகசுருக்கம் மற்றும் முகப்பருவினால் அவதிப்படுவதால் முகம் பொலிவின்றி காணப்படும். இவர்கள் கேரட்டை ஜீஸ் செய்தோ அல்லது அரைத்தோ முகத்தில் தடவி வர மேற்கண்ட பிரச்சனைகள் நீங்கி முகம் பொலிவுறும்.


No comments:

Post a Comment