Tuesday, May 19, 2015

கருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும் அறுகம்புல்

 கருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும் அறுகம்புல்



  அறுகம்புல் நம் அனைவருக்கும் தெரிந்ததே. நாம் சாதாரணமாக எங்கும் காணக்கூடிய அறுகம்புல் சிறந்த மருத்தவ குணங்களைக் கொண்டது. இது ஓர் அற்புத மூலிகை..

  விநாயக சதுர்த்தி அன்று இதனை விநாயகருக்குச் சாற்றும் வழக்கமும் நம்மிடம் இருக்கிறது. இப்புல்லின் மேல் பாகம் வெயிலால் காய்ந்தது போல் தோன்றினாலும், இதன் வேர்கள் சாவதில்லை. அதனால்தான் நாம் ஒருவரை வாழ்த்தும் போது “ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரோடிப் பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்துகிறோம்.

 அறுகம்புல் பொதுவாக உடல் வெப்பத்தைத் தணிக்கும். வறட்சியை நீக்கி விடும். சிவப்பு இரத்த அணுக்களைக் கட்டுப்படுத்தி, வீணாக கழியும் இரத்தத்தை நிறுத்தும்.

அறுகம்புல் விஷத்தை முறிப்பதில் ஓர் அரிய மூலிகையாகும். பந்தக்கால் நடுவதற்கு முன்னும் வியாபாரம் தொடங்குவதற்கு முன்னும் உழவு ஏர் கட்டுவதற்கு முன்னும் பிள்ளையார் பிடித்து அப்பிள்ளையாரின் தலையில் இந்த அறுகம்புல்லை சொருகுவதை நாம் பார்க்கிறோம். இவ்விதம் மக்கள் ஏன் செய்கிறார்கள் என்பது நமக்கு புலனாவதில்லை.

அதே போல் மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் நலங்கு வைக்குங்காலையில் ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் வைத்துக் கொண்டு அறுகம்புல்லை அந்த எண்ணெயில் முக்கி உச்சித் தலையில் தடவி குளிப்பாட்டுவார்கள்.

  அறுகம்புல்லில் இருவகையுண்டு என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்வது அவசியம். பிள்ளையாருக்கு சூட்டும் அருகம்புல் ஒரு வகை. மற்றொரு அறுகம்புல்லானது மண்ணிலிருந்து அரை அடி முதல் ஓரடி உயரம் வரை வளரக்கூடியது. கடும் வறட்சியிலும் மண்ணுக்குக் கீழே உள்ள இதன் வேர்கள் உயிர்ச்சத்தை இழப்பதில்லை. இவ்வகை அறுகம்புல் தான் மருத்துவ குணம் கொண்டதாகும். இதனை யானை அறுகம்புல் என்றும் அழைப்பார்கள்.

  இந்த அறுகம்புல்லும் நல்லெண்ணெயும் சேர்ந்தால் இரு நல்லோர்கள் சேர்ந்தது போல ஆகும். அறுகம்புல்லைப் பறித்து அம்மிக்குழி (அ) அம்மிக்கல்லில் தட்டி ஒரு கோப்பையிலிட்டு அது முங்குமளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி வெய்யிலில் மூன்று நாட்களுக்கு வைக்கவும், நான்காம் நாள் அடுத்து ஓர் அகல வாயுடைய கண்ணாடி புட்டியில் எண்ணெயும், அறுகம்புல்லுமிட்டு வைத்துக் கொண்டு வாரம் இருமுறை தலையில் தேய்த்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

அன்றைய உணவில் மோர் மற்றும் தயிர் தவிர்த்த மிளகு ரசத்தை உபயோகித்தால் இரண்டு நாட்களில் உடல் குளிர்ச்சியடைவதை உணரலாம். அதிகச் சூட்டினால் சில குழந்தைகள் மிக மெலிந்து காணப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மிக்க பலனைத் தரும். உடல் வன்மை பெருகும். அறிவு விருத்தியாகும். கண்கள் பிரகாசமடையும்.

  
காய்ச்சலுக்கு

  அறுகம்புல் மற்றும் துளசி தலா ஒரு கைப்பிடி, மிளகு ஒரு தேக்கரண்டியளவு எடுத்து நன்கு இடித்து அரை படி தண்ணீரிலிட்டு அந்நீரை நன்கு காய்ச்சவும். இவ்வாறு காய்ச்சிய தண்ணீரை இரு வேளைகளுக்குப் பங்கிட்டு 4 மணிக்கொரு தரம் கொடுக்கவும். இப்படி நான்கு வேளைகள் கொடுத்தால் காய்ச்சல் தணித்து விடும்.

• ஆங்கில மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் அறுகம்புல், மிளகு சேர்ந்த கஷாயத்தை சில நாட்கள் உட்கொண்டால் ஆங்கில மருந்துகளால் உண்டான நச்சு முறியும். நீர் அடைப்பு உள்ளவர்களுக்கு தாராளமாக நீர் பிரியும்.

• சொறி, சிரங்கு, அடங்காத தோல் ரோகம், கால் விரல்களில் உண்டாகும் சேற்றுப் புண், தினவு, தேமல் வேனிற்கால வேர்க்குரு, கட்டிகள் ஆகியவைகளுக்கும் ஒரு பிடி அறுகம்புல்லை வேர் நீக்கித் தேவையான அளவு எடுத்து அதில் நான்கில் ஒரு பாகம் மஞ்சளும் சேர்த்து அரைத்து உடம்பின் மேலே பூசிக் சில மணிநேரம் ஊறிய பின்னர் குளிர்ந்த நீரில் குளித்து வர யாவும் சில நாட்களில் மறைந்து விடும்.

• கோடைகால வெப்பம் தாங்க முடியாமல் உடல் சூடு ஏற்படுவதால், அடிக்கடி வெளியூர் பிரயாணத்தால் வெப்பம் அதிகரித்துத் தொல்லைபடுபவர்களும் அறுகம்புல்லைப் பயன்படுத்தி நலம் பெறலாம்.

• அறுகம்புல்லைக் கணு நீக்கி உலர்த்தித் தூள் செய்த வைத்துக் கொண்டு தினதோறும் அரை டீஸ்பூன் எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து காபி போல் பானம் தயாரித்துப் பருகி வந்தால் சூரிய வெப்பத்தால் ஏற்படும் உடல் கொதிப்பு, வறட்சி, மயக்கம், களைப்பு ஆகியவை தணியும்.

• அறுகம்புல் கண்களுக்கு ஒளி தந்து கண் நோய்களையும் போக்கக்கூடிய ஆற்றல் படைத்தது.

• அறுகம்புல்லைப் பயன்படுத்திச் சீதபேதி, தேச எரிச்சல், நீர்க்கடுப்பு, இரத்த மூலம், அதிக மாதவிடாய் போக்க, ரணங்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தலாம்.

அறுகம்புல்லின் வேரை சமூலம் செய்து உட்கொண்டு வர முதியவர்களுக்கு நினைவாற்றல் இழப்பதை தடுக்கும். குழந்தைகளின் நினைவாற்றல் திறனை அதிகரிக்கும்.

அறுகம்புல் ஒரு பிடி, மிளகாய் 10, சின்ன வெங்காயம், சீரகம் தேவையான அளவு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால் பெண்களுக்கு கருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும். ஆண்களுக்கு வீரியம் அதிகரிக்கும்.
      

No comments:

Post a Comment