Thursday, May 21, 2015

மலச்சிக்கலை போக்கும் மாம்பழம்

        மலச்சிக்கலை போக்கும் மாம்பழம்


   “மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும்!”
       என்பது பழமொழி.
     தித்திப்பு நிறைந்த மாங்கனி, முக்கனிகளில் முதன்மையானது. 600 வகைகள் இருக்கும் மாம்பழத்தில் முக்கியமான 40 ரகங்கள் இந்தியாவில் விளைகின்றன.

  மாம்பழம் ‘கடவுளின் கனி’ என்று வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிய சுவையுடன் உள்ள இக்கனியில், பலவித சத்துக்களும் அடங்கியுள்ளன.


மாம்பழம் மூளைக்கும் உடலுக்கும் வலுவைக் கொடுக்க வல்லது.

பொதுவாக ஆண், பெண் இரு பாலருக்கும் நரம்புத் தளர்ச்சியை நீக்கும் தன்மை கொண்டது.

மலச்சிக்கலை போக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் மாம்பழத்தை இரவில் படுக்கும் முன் தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டு வர பூரண குணமடைவார்கள்.

ஆண்களுக்கு வீரியத்தை கொடுக்க வல்லது மாம்பழம்.

மாலைக்கண் நோய் கோளாறுக்கும், பற்கள் தொடர்புடைய நோய்களுக்கும் மாம்பழம் கை கண்ட மருந்தாகும்.

மேனியில் சுருக்கமுள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் மேனியில் உள்ள சுருக்கம் நீங்கும், தோல் பளபளப்பாகும்.

ஊடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் போன்ற தொல்லைகளால் அவதியுறுவோர் காலை வேளையில் வெறும் வயிற்றில் மாம்பழத்தை சாப்பிட வேண்டும்.

பெண்களுக்கு ஏற்ற கனி:

  ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிடுவதால் மாதவிடாய் ஒழுங்குபடும்.கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழத்தை சாப்பிட்டால் பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும்.மாம்பழம் அதிக உஷ்ணம் கொண்டது. எனவே அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தில் முடியும். மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் சாப்பிட்டால் உதிரபோக்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

உண்பதற்கேற்ற மாம்பழங்கள்;

 நன்றாக கனிந்த பழங்களை சாப்பிடுவதே சிறந்தது. கனியாத பழங்களையோ, வெம்பிய பழங்களையோ சாப்பிடுவதால் காய்ச்சல் தலைவலி, இருமல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற நோய்களின்றி, மேலும், பல நோய்களும் உண்டாகும்.

வைட்டமின்களும், தாதுபொருட்களும்:

 மாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப்பொருட்களும் உள்ளன.

 மாம்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி உருவாகிறது. ஊடல் வலுவிற்கு மாம்பழம் மிகவும் ஏற்றது.

100 கிராம் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்:
   மாவுச்சத்து                   17 கிராம்
   சர்க்கரைச்சத்து         14.8 கிராம்
   நார்ச்சத்து                     1.8 கிராம்
   கொழுப்புச்சத்து         0.27 கிராம்
   புரதச்சத்து                    0.51 கிராம்
   வைட்டமின் ‘ஏ’         38 மி.கி.
   வைட்டமின் ‘பி’         0.134 மி.கி.
   வைட்டமின் ‘சி’         27.7 மி.கி.
   தையாமின்                   0.058 மி.கி.
   ரிபோஃபிளேவின்       0.057 மி.கி.
   நியாசின்                         0.548 மி.கி.
   பேன்டோதெனிக்         0.180 மி.கி.
   அமிலம்
   சுண்ணாம்புச்சத்து       10 மி.கி.
   இரும்புச்சத்து                0.13 மி.கி.
   மெக்னீசியம்                  9 மி.கி.
   பாஸ்பரஸ்                    11 மி.கி.
   பொட்டாசியம்            156 மி.கி.
   துத்தநாகம்                  0.04 மி.கி.

உணவு சாப்பிடுவதற்கு முன் மாம்பழத்தை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடுவதால் அது பசியை அடக்கிவிடும். ஆதனால் உணவுடனோ அல்லது சாப்பிட்ட பின்போ மாம்பழத்தை சாப்பிடுவதோ நல்லது.


 

No comments:

Post a Comment